காஸ் மானியம் ரத்தாகும் என்று பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில் நேற்று நாடாளுமன்றத்தில் பெரும் அமளி ஏற்பட்டது. இந்த நிலையில் மக்களவை கேள்வி நேரத்தில் நேற்று பதில் அளித்த மத்திய உணவு மற்றும் நுகர்வோர்த்துறை அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான், ‘‘தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின்(2013) படி 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை உணவு தானியங்களின் விலை மாற்றியமைக்க வேண்டும். ஆனால் 2018ம் ஆண்டு வரை அரிசி, கோதுமை மானியத்தை தொடர முடிவு செய்துள்ளோம்.

Special Correspondent

இத்திட்டத்தின் கீழ் அரிசி கிலோ ரூ.3க்கும், கோதுமை கிலோ ரூ.2க்கும், பண்படுத்தப்படாத தானியங்கள் ரூ.1க்கும் வழங்கப்படுகிறது. யாரும் பசி இல்லாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டியது மாநில அரசுகளின் பொறுப்பு. இத்திட்டத்தை முறையாக அமல்படுத்த மத்திய அரசு சிறப்பாக நடவடிக்கை எடுத்து வருகிறது’’ என்றார்.

2018 வரை மானியம் வழங்கப்படும் என்று அறிவித்த மத்திய அமைச்சர் பஸ்வான் அதன்பின் மானியம் நிறுத்தப்படுமா அல்லது விலை மாற்றம் மட்டும் செய்யப்படுமா என்பதை அறிவிக்கவில்லை.

பிஜேபி கட்சி மோடி மத்திய அரசின் கொள்கை நிலை காரணமாக ரேஷன் கடையில் மாதம் 8000 ரூபாய் மேல சம்பாதிப்பவர்கள் எதுவும் வாங்க முடியாத நிலையில், நேற்று அமைச்சரின் பதில் தெளிவுக்கு பதில் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளதாக சட்ட வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்...