தஞ்சை மாவட்டம் கதிராமங்கலத்தில் கச்சா எண்ணெய் எடுக்க எதிர்ப்பு தெரிவித்து அந்த பகுதி மக்கள் போராடி வருகிறார்கள். இன்று 73வது நாளாக போராட்டம் நீடிக்கிறது.

Special Correspondent

கதிராமங்கலம் அய்யனார் கோயில் வளாகத்தில் இன்று 22வது நாளாக மக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். எண்ணெய் நிறுவனம் வெளியேறக்கோரியும், போராட்டத்தில் ஈடுபட்டு கைதாகி சிறையில் இருக்கும் 10 பேரை நிபந்தனையின்றி விடுதலை செய்யக்கோரியும் நடக்கும் இந்த போராட்டத்துக்கு எதிர்க்கட்சி தலைவர் M. K. Stalin நேரில் வந்து ஆதரவு தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மத்திய, மாநில அரசுகள் தங்கள் போராட்டத்தை கண்டுகொள்ளாமல் மவுனம் காத்து வருவதை கண்டித்து பெண்கள் வாயில் துணியை கட்டி கொண்டு நூதன போராட்டம் நடத்தினர்.

நெடு வாசல் போராட்டம் 122 நாள் எட்டிய நிலையில் ., டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டமும் முன்றாவது வாரத்தை தொடரும் நிலையிலும் .. இப்படி போராட்டம் பல்வேறு இடங்களில் நடந்தும் இதனை பற்றி எதுவும் கண்டுகொள்ளமல் மத்திய மாநில அரசுகள் இருப்பதாக அப்பகுதி மக்கள் வேதனையை பகிர்கிறார்கள்...