குஜராத்தில் நடந்த ராஜ்ய சபா தேர்தலில் மோடி அரசின் கேபினட் நிதி துறை பாதுகாப்பு துறை ஒளிபரப்பு துறை சட்ட துறை ஜவுளி துறை வர்த்தக துறை அமைச்சர்கள் மொத்தமாக படை எடுத்து தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடத்த விடாமல் தடுத்த போதிலும் பல்வேறு குழப்பங்களுக்கிடையே பிஜேபி வேட்பாளர் பல்வந்த் சிங் 38 ஓட்டுகள் மட்டுமே பெற்று தோல்வி அடைந்தார்

Special Correspondent

இதனால் மூன்றில் வெற்றி என்று சொல்லி வெற்றி பெறுவதற்கு முன்னரே லட்டு கொடுத்த பிஜேபி யினரை சமூக வலைதளத்தில் கேலி செய்து பல லட்சம் பேர் கிண்டல் அடித்தனர் .. பா.ஜ., சார்பில் போட்டியிட்ட அமித்ஷா மற்றும் ஸ்மிரிதி இரானி தலா 46 ஓட்டுகள் வாங்கியும் காங்கிரஸ் அஹ்மத் படேல் 44 ஓட்டுகள் வாங்கியும் வெற்றி பெற்றனர். நேற்று நடைபெற்ற தேர்தலின் போது காங்கிரசை சேர்ந்த 2 எம்.எல்.ஏ.,க்கள் தங்களின் ஓட்டு சீட்டை பா.ஜ.,வினருக்கு காண்பித்ததாக புகார் எழுந்தது. இதனையடுத்து 2 எம்.எல்,ஏக்களின் ஓட்டுகளை செல்லாததாக அறிவிக்க காங்.,தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை விடுத்தது. இதற்கு பா.ஜ., சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. 10 க்கும் மேற்பட்ட மோடி அமைச்சர்கள் அங்கு குழுமி தேர்தல் ஆணையத்துக்கு எக்கச்சக்க பிரசர் கொடுத்த போதிலும் தேர்தல் ஆணையம் ஓட்டுபதிவின் வீடியோவை ஆய்வு செய்து பிஜேபி க்கு ஒட்டு போட்டு அதனை அமித் ஷாவிடம் காண்பித்த காங்கிரஸ் 2 எம்.எல்.ஏக்களின் ஓட்டுகள் செல்லாது என தேர்தல் ஆணையம் அதிரடியாக அறிவித்தது.

இதன் பிறகும் பிஜேபி மந்திரிகள் மற்றும் குஜராத் பிஜேபி முதல் அமைச்சர் மற்றும் அமைச்சர்கள் எல்லாம் சேர்ந்து ஒட்டு எண்ணிக்கையை நடத்த விடாமல் தடை செய்தனர்.

பின்னர் பிஜேபி விவரம் வீடியோ இல் லீக் ஆகி நள்ளிரவில் லட்சக்கணக்கில் பகிர வேறு வழியெல்லாம் பிஜேபி அமித் ஷா ஒதுங்கி கொள்ள வெற்றிக்கு தேவையான 44 ஓட்டுகளை பெற்று காங்., கட்சியின் அஹமது படேல் தனது வெற்றியை டுவிட்டரில் ‛‛வாய்மையே வென்றது'' என பதிவிட்டுள்ளார்.

அஹமது படேலின் வெற்றி காங்கிரஸ் கட்சிக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி பல்வேறு கட்சி தலைவர்கள் மற்றும் சமுக வலைத்தளத்தில் லட்சக்கணக்கில் பாராட்டி பதிவிட்டு வருகின்றனர்.