கதிராமங்கலம் நெடுவாசல் கிராம மக்களை போராட்டத்தை யாரேனும் தூண்டிவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஓஎன்ஜிசி நிறுவனம் எச்சரிக்கை விடுத்தது.

Special Correspondent

மயிலாடுதுறை குத்தாலம் அருகே உள்ள மாதிரிமங்கலத்தில் ஓஎன்ஜிசி நிறுவனம் பொதித்திருந்த எண்ணெய் குழாய் 4வது முறையாக உடைந்துள்ளது. இதனால் கச்சா எண்ணெய் கசிவை கண்ட மக்கள் பீதி அடைந்துள்ள நிலையில், அந்த பகுதியை மதிமுக பொதுச்செயலர் பார்வையிட்ட வைகோ பின்னர்

செய்தியாளர்களிடம் கூறுகையில்,

கதிராமங்கலம் மக்களை யாரோ தூண்டிவிடுவதாக ஓஎன்ஜிசி அதிகாரிகள் கூறுகின்றனர். ஓஎன்ஜிசிக்கு எதிராக கதிராமங்கலத்தில் போராடுமாறு பொதுமக்களை நான் தான் தூண்டிவிடுகிறேன்.

தொடர்ந்து ஓஎன்ஜிசிக்கு எதிராக மக்களையும், இளைஞர்களையும் தூண்டிவிட இருக்கிறேன். முடிந்தால் என் மீது ஓஎன்ஜிசி வழக்கு தொடரட்டும்.

கலிங்கப்பட்டியில் டாஸ்மாக் கடை அடித்து நொறுக்கப்பட்டது போல் ஓஎன்ஜிசி நிறுவனத்திற்குச் சொந்தமான இயந்திரங்களை அடித்து நொறுக்க இளைஞர்களை திரட்ட இருக்கிறேன்.

ஓஎன்ஜிசிக்கு எதிராக மக்களை திரட்டும் வரை அங்கேயே முகாமிடப் போகிறேன் என கூறியுள்ளார்.

முன்னதாக எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் மக்களுக்கு தனது திமுக கட்சி ஆதரவை வெளிப்படையக தெரிவித்து சென்றது குறிப்பிடத்தக்கது மக்களுக்கு தனது திமுக கட்சி ஆதரவை வெளிப்படையக தெரிவித்து சென்றது குறிப்பிடத்தக்கது.