ஒற்றுமை, கூட்டு முயற்சியால் மட்டுமே தேசத்தில் வளர்ச்சியை ஏற்படுத்த முடியும்.

Special Correspondent

விவசாயிகளும், தொழிலாளர்களும் நாட்டின் கண்கள்.

புதிய இந்தியாவை உருவாக்க 125 கோடி மக்களின் பங்களிப்பு அவசியம். அதேபோல், நாட்டின் வளர்ச்சிக்கு இளைஞர்களின் பங்களிப்பு அவசியம்.

அடுத்த 5 ஆண்டுகள் நாம் கடுமையாக உழைத்து புதிய இந்தியாவை உருவாக்க வேண்டும்.

நம் நாட்டில் அனைவரும் சமமானவர்கள்; பெரியவர், சிறியவர் என்ற வேறுபாடு கிடையாது.

அரசுத் திட்டங்கள் வேகம் பெற்றுள்ளன. திட்டம் தாமதமானால் ஏழை மக்களே பாதிப்புக்கு ஆளாகின்றனர்.

துன்பங்கள் பல வரினும் விவசாயிகள் கடும் உழைப்பினால் சாதனைகளையே படைத்து வருகின்றனர். பயிர்க் காப்பீட்டு திட்டத்தில் 6.75 கோடி விவசாயிகள் இணைந்துள்ளனர்.

வேளாண் துறை வளர்ச்சிக்காக நீர் மேலாண்மைத் திட்டங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. தொழில்நுட்ப மாற்றத்தால் வேலைவாய்ப்பிலும் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது.

மங்கள்யான் மூலம் செவ்வாய் கிரகத்தை 9 மாதங்களில் அடைந்தது இந்திய அறிவியல் வளர்ச்சிக்கு உதாரணம்.

9 மாதத்தில் செவ்வாய் கிரகத்தை பிடித்த நாம், ரயில் பாதையை முடிக்க இயலவில்லை. கடந்த 42 ஆண்டுகளாக ரயில் திட்டப் பணிகளை முடிக்க முடியவில்லை.

முத்தலாக முறையை எதிர்க்கும் பெண்களை வணங்குகிறேன், அவர்களுக்கு பக்கபலமாக இருப்பேன்.

மதத்தின் பெயரிலான வன்முறைகள் நாட்டின் வளர்ச்சிக்கு உதவாது.மகாத்மாவும், புத்தரும் பிறந்த இந்திய மண்ணில் வன்முறை, வகுப்புவாதத்திற்கு இடமில்லை.

புதிய திசையை நோக்கி நாட்டை வழிநடத்தி வருகிறோம். நம் நாட்டில் உள்ள இயற்கை வளங்களைக் கொண்டு, முன்னேற்றப் பாதையில் நடைபோடலாம்.

இவ்வாறு மோடி பேசினார்.