திருநெல்வேலியின் ஆட்சியராக இருந்த ராபர்ட் வில்லியம் ஆஷை சுட்டுக்கொன்ற வாஞ்சிநாதனின் குடும்பத்தினர் என்று கூறி ஒருவரது பேட்டி தமிழ் இந்துவில் வெளியாகியிருக்கிறது.

Special Correspondent

அதில் ஜெயகிருஷ்ணன் என்பவர், வாஞ்சிநாதனின் மகள் லட்சுமியின் மகன் என்கிறார். வாஞ்சிநாதன் கொலைசெய்த பிறகு, கர்ப்பமாயிருந்த அவரது மனைவியை பிரிட்டிஷாரிடமிருந்து காப்பாற்ற முத்துராமலிங்க தேவர் தான் மூன்று மாதங்கள் கூட்டு வண்டியில் வைத்துச் சுற்றிக் கொண்டிருந்தாராம்.

குழந்தை பிறந்த பிறகு, கந்தர்வக்கோட்டையில் டீக்கடைக்காரர் ஒருவரிடம் 25 ஆயிரம் பணம் கொடுத்து, அந்தக் குழந்தையை ஒப்படைத்தாராம். பிறகு, சென்னையில் ஒரு வீட்டில் குழந்தையின் தாயையும் மறைவாக வைத்திருந்தாராம். முத்துராமலிங்கத் தேவர் பிறந்தது அக்டோபர் 30, 1908. வாஞ்சிநாதன் கொலைசெய்தது ஜூன் 17, 1911. ஆக. மூன்று வயதுக் குழந்தையாக இருந்த முத்துராமலிங்கத் தேவர், கர்ப்பிணிப் பெண்ணை வண்டியில் வைத்துப் பாதுகாத்திருக்கிறார். 4 வயதிலேயே 25 ஆயிரம் ரூபாய் பணத்தை வேறு ஒரு டீக்கடைக்காரரிடம் கொடுத்தாராம்.

அன்றைக்கு தங்கத்தின் விலை கிராம் 1.80 காசு. 25000 ரூபாய்க்கு தோராயமாக 13890 கிராம் தங்கத்தை வாங்க முடியும். அப்படியானால், இன்றைய மதிப்பில் சுமார் 3,85,44,750 ரூபாய்!! இவ்வளவு பணத்தைக் கொடுத்து ஒரு குழந்தையைப் பாதுகாக்கச் சொல்கிறது மற்றொரு குழந்தை.

இந்தக் கட்டுரை குறித்து வாஞ்சிநாதனின் தம்பியின் பேரன் கோபாலகிருஷ்ணனிடம் பேசினேன். வாஞ்சிநாதனுக்கு பிறந்த பெண் குழந்தை அவர் இருக்கும்போதே இறந்துவிட்டது என்று தெரிவித்த கோபாலகிருஷ்ணன், வாஞ்சிநாதனின் மனைவி பொன்னம்மாள் சென்னையிலிருந்து மீண்டும் திருநெல்வேலிக்கு வந்த பிறகுதான் முத்துராமலிங்கத் தேவர் அவரைச் சென்று பார்த்ததாகச் சொல்கிறார்.

இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருக்கும் லட்சுமி, ஜெயகிருஷ்ணன் ஆகியோர் யாரேன்றே தெரியாது என்கிறார் கோபாலகிருஷ்ணன். இந்தக் கட்டுரை யாரைப் பற்றி நல்அபிப்ராயம் உருவாக்குவதற்காக எழுதப்பட்டது என்ற கேள்வியோடு முடித்துள்ளார் தனது சமூக வலை பதிவில் திரு. முரளிதரன் காசி விஸ்வநாதன் BBC ரிப்போர்ட்டர்.