நீட் தேர்வு மத்திய அரசு சார்பில் துஷார் மேத்தா ஆஜராகி வாதாடினார். ‛நீட்' அவசர சட்டத்திற்கு கோர்ட் தடை விதிக்க முடியாது என மத்திய மாநில அரசுகள் வாதாடின.

Special Correspondent

சட்டச் சிக்கல் ஏதும் இல்லை என்பதால், அவசர சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதாக மத்திய அரசு கூறியது. சட்டத்திற்கு உட்பட்டே அவசர சட்டம் கொண்டு வரப்பட்டதாக தமிழக அரசு சார்பில் கூறப்பட்டது.

தமிழக அரசு முன்கூட்டியே நடவடிக்கை எடுக்காமல், கடைசி நேரத்தில் விழித்துக்கொண்டது ஏன் என்று நீதிபதிகள் கட்டமாக கேட்டனர்...

நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் பாதிப்படையாமல் இருப்பதற்கு தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்றும்... இந்த அவசர சட்டத்தால் யார் யாருக்கு நன்மை, பாதிப்பு குறித்த புள்ளி விவரங்களை சமர்ப்பிக்க தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது...

எனவே நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் நீட் தேர்வால் பாதிக்கப்பட்டவர்கள் என இரு தரப்பினரும் பாதிப்படையாத வகையிலான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வழக்கு விசாரணை வரும் 22ம் தேதிக்கு ஒத்திவைப்பு.