ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டனில் உள்ள வேதா இல்லம், அரசு நினைவிடமாக மாற்றப்படும் என எடப்பாடி பழனிசாமி வியாழக்கிழமை மாலை அறிவித்தார்.

Special Correspondent

இந்நிலையில் அந்த வீடு தங்களுக்கு தான் சொந்தம் எனவும், அதை நினைவிடமாக மாற்றக் கூடாது எனவும் ஜெ., அண்ணன் மகன் தீபக், முதல்வர் பழனிசாமிக்கு கடிதம் எழுதி உள்ளார்.

கடிதத்தில் “போயஸ் கார்டன் இல்லத்தை ஜெயலலிதா யாருக்கும் எழுதி வைக்கவில்லை.போயஸ் கார்டன் இல்ல வாரிசுகளான தங்களின் கருத்தை கேட்காமல் செய்வது சட்டப்படி தவறு. ஜெயலலிதா தாயார் சந்தியா உயில் படி வேதா நிலையம் எனக்கும் சகோதரி தீபாவுக்கும் சொந்தமானது. எங்களின் கருத்துக்களை கேட்டறிந்து நினைவிடமாக்க சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா தெரிவித்த விவரம் :

நானும் என் சகோதரர் தீபக்கும்தான் ஜெயலலிதாவின் உண்மையான வாரிசுகள். வேதா நிலையம் ஜெயலலிதாவின் தாயும், எனது பாட்டியுமான சந்தியாவால் வாங்கப்பட்டது. எனவே, வேதா நிலையத்தை சொந்தம் கொண்டாட யாருக்கும் உரிமை இல்லை. அதை விட்டுத்தர மாட்டோம். வேதா நிலையம் எங்களின் பூர்வீகம் சொத்து என்பதை ஆணித்தரமாக கூறுகிறேன். எங்களிடம் இருந்து எந்த கருத்தையும் அரசு தரப்பில் இருந்து கேட்கவில்லை. நாங்கள் இறந்துவிட்டோம் என நினைத்துக்கொண்டு நினைவிடமாக அறிவித்துள்ளார்களா? என்று காட்டமாக கேள்வி கேட்டுள்ளார் .

எதிர்கட்சி உறுப்பினர்கள் தண்டிக்கப்பட்ட குற்றவாளி ஜெயலலிதாவுக்கு மக்கள் வரி பணத்தில் நினைவகம் எப்படி எழுப்ப முடியும் என்று கேள்வி கேட்ட நிலையில் சட்ட வல்லுனர்களும் குடும்ப சொத்தை நினைவகம் வாரிசு தாரர்கள் அனுமதி இல்லாமல் நினைவகம் அமைக்க முடியாது என்று தெரிவித்து உள்ளனர்.