தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெற்று முடிந்த நீட் தேர்வின் அடிப்படையிலேயே நடத்தப்பட வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு மட்டும் விலக்கு அளிக்க முடியாது என உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக கூறியுள்ளது. .

Special Correspondent

மேலும் செப்டம்பர் 4-ம் தேதி வரை மருத்துவ படிப்பிற்கான கலந்தாய்வை நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. உச்சநீதிமன்றத்தின் உத்தரவை அடுத்த தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கை பிளஸ் 2 மதிப்பெண்கள் அடிப்படையில் நடைபெறாது. நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்கள் மட்டுமே MBBS சேர்க்கையில் பங்கபெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை ஏற்ற மத்திய அரசு, தமிழக அரசின் அவசர சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப் போவதில்லை என உச்சநீதிமன்றத்தில் திட்டவட்டமாக கூறியது. ஒரு மாநிலத்திற்கு மட்டும் நீட்டிலிருந்து விலக்களிக்க முடியாது. ஏற்கனவே மத்திய அரசு பிறப்பித்த உத்தரவுக்கு முரணாக தமிழக அரசின் அவசர சட்டம் உள்ளது. எனவே தமிழக அரசின் அவசர சட்டத்தை ஏற்க முடியாது என மத்திய அரசு கூறியது.

முன்னதாக மத்திய அரசு வழக்கறிஞர் கூறுகையில், தமிழக அரசு தாக்கல் செய்துள்ள நீட் தேர்விலிருந்து ஓ

ராண்டு விலக்கு கோரும் சட்டத்தை அமல்படுத்தினால் குழப்பமே ஏற்படும் என்றார். எனவே அவசர சட்டத்திற்கு ஒப்புதல் தர கூடாது என மத்திய அரசுக்கு அவர் பரிந்துரைத்தார்.

மத்திய அரசின் பல்டி அதனை தட்டி கேக்காத மாநில அரசின் செயல்பாடு தமிழக பெற்றோர் மற்றும் மாணவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது என செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.

இந்நிலையில் நாளை மறுநாள் தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கை கலந்தாய்வு துவங்கி நடைபெறும் என மாநில சுகாதார துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். நாளை மாணவர் தகுதிப்பட்டியல் வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளார்.