உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.எஸ்.கெஹர் தலைமையிலான சலமேஷ்வர், எஸ்.ஏ.பாப்டே, ஆர்கே.அகர்வால், ரோகிந்தன் நாரிமன், ஏ.எம்.சப்ரே, சந்திராசூட், சஞ்சய் கிஷன் கவுல் மற்றும் அப்துல் நசீர் ஆகிய 9 நீதிபதிகள் கொண்ட உயர் அரசியல் சாசன அமர்வு தனிமனித சுதந்திரம் என்பது அனைவருக்கும் முக்கியமானது என நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.

Special Correspondent

தனிமனித உரிமை என்பது ரகசிய காப்பு உரிமைகளில் ஒன்றே என்றும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. அரசியல் சட்டத்தின் 21-வது பிரிவின் படி தனிநபர் ரகசியம் காப்பது அவசியமாகும் என தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக மத்திய, மாநில அரசுகளின் திட்டங்களுக்கு ஆதார் எண்ணை கட்டாயமாக்கியதற்கு பொதுமக்களிடம் கடுமையான எதிர்ப்பு கிளம்பியதையடுத்து பல்வேறு மாநிலங்கள் மூலம் மாநில நீதிமன்றங்களில் வழக்கு தொடரப்பட்டது. இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட உச்ச நீதிமன்றம் ஆதார் அட்டையை அரசு திட்டங்களுக்காக தன்னலம் கருதி கட்டாயமாக்க கூடாது என உத்தரவிட்டது. ஆனால், உச்ச நீதிமன்ற தீர்ப்பை அவமதிக்கும் விதமாக உத்தரவை மீறி அரசின் அனைத்து திட்டங்களுக்கும் ஆதார் எண்ணை கட்டாயமாக இணைக்க வலியுறுத்தப்பட்டது.

இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. அதில், “இந்தியாவில் ஆதார் வைத்திருப்போர்களில் சுமார் 13.5 கோடி பேரின் தகவல்கள் இணையத்தில் வெளிப்படையாக சமீபத்தில் கசிந்துள்ளதாக வெளியான ஆய்வு அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மத்திய மற்றும் மாநில அரசு அலுவலகங்கள் மூலம்தான் தகவல்கள் வெளியாகியுள்ளது. குறைந்தளவு பாதுகாப்பே இதுபோன்ற நடைமுறைகளுக்கு முக்கிய காரணம்’’ என்று மனுவில் தெரிவிக்கப்பட்டது. இதற்கு மத்திய அரசு சார்பாக பல்வேறு காரணங்கள் கூறப்பட்டது.

ஆதார் விவரங்களால் தனிமனித சுதந்திரம் பறிபோவதாக வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கில் கார்டு வழங்க கைரேகை மற்றும் கருவிழி பதிவு செய்வதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

ஆனால் தனிநபர் அந்தரங்கம் என்பது அடிப்படை உரிமை அல்ல என மத்திய அரசு வாதாடியது. மத்திய அரசின் வாதத்தை நிராகரித்து மேற்கண்ட அதிரடி தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.உச்சநீதிமன்றத்தின் இந்த பரபரப்பு தீர்ப்பால் ஆதார் பயன்பாட்டு கொள்கையில் மாற்றம் வரலாம் என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.