பள்ளிக்கல்வித்துறை செயலாளராக உதயச்சந்திரன் நியமிக்கப்பட்ட நாளில் இருந்தே அத்துறையில் ஏராளமான சீர்திருத்தங்களை மேற்கொண்டு வந்தார்

Special Correspondent

பொதுத்தேர்வுகளில் தர வரிசை ரத்து, புதிய பாடத்திட்டத்தை தயாரிப்பதற்கான ஏற்பாடுகள் உள்ளிட்ட நடவடிக்கைகள் அனைத்து தரப்பினரிடமும் பெறும் வரவேற்பை பெற்றன.

அதையெல்லாம் விட ஊழலின் உறைவிடமாக திகழ்ந்த பள்ளிக் கல்வித் துறையில் உதயச்சந்திரன் மேற்கொண்ட நடவடிக்கைகளால் ஊழல் செய்ய முடியாத நிலை உருவானதை அடுத்து, அவரை இடமாற்றம் செய்யும் முயற்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனும், பினாமி முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியும் ஈடுபட்டனர்.

உதயச்சந்திரனின் இடமாற்றம் குறித்த சர்ச்சை இப்போது ஓரளவு அடங்கியுள்ள நிலையில், அவரை அதிகாரமற்ற செயலாளராக மாற்றியுள்ளனர். பள்ளிக்கல்வித்துறையின் முதன்மைச் செயலாளராக பிரதீப் யாதவ் என்ற அதிகாரி நியமிக்கப்பட்டிருக்கிறார்.

புதியப் பாடத்திட்டத்தை வகுக்கும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், அவரை இடமாற்றம் செய்யக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டதன் காரணமாக அவரை முழுமையாக இடமாற்றம் செய்யாமல், பாடத்திட்டப் பிரிவை மட்டும் கவனித்துக் கொள்வார் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இது உதயச்சந்திரனை இடமாற்றம் செய்வதை விட மிக மோசமான தண்டனையும், அவமதிப்பும் ஆகும். சுருக்கமாக சொன்னால், உதயச்சந்திரனை வேறு துறைக்கு அனுப்பி அங்கு அவர் சீர்திருத்தங்களைச் செய்து விடக்கூடாது என்பதற்காகவே அவரை கல்வித்துறையில் அதிகாரமற்ற செயலாளராக அரசு சிறை வைத்திருக்கிறது.

இதனை பாமக நிறுவனர் ராமதாஸ் கடுமையாக கண்டித்து
மேற்சொன்ன அறிக்கை வெளியிட்டுள்ளார்