உத்தரப்பிரதேசம் மாநிலம் கோரக்பூரில் மூளைக் காய்ச்சல் பாதித்து குழந்தைகள் உயிரிழக்கும் அவலம் நீடித்து வருகிறது. கடந்த 30 நாட்களாக கோரக்பூரில் உள்ள பிஆர்டி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தினமும் குழந்தைகள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

Special Correspondent

நேற்று முன்தினம் முதல் அனுமதிக்கப்பட்ட குழந்தைகளில் 42 குழந்தைகள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தன. மூளையழற்சி, ஒவ்வாமை, காய்ச்சல், போன்ற காரணங்களால் குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக மருத்துவமனை முதல்வர் பி.கே.சிங் தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆக்ஸிஜன் சிலிண்டர் பற்றாக்குறை காரணமாக 72 குழந்தைகள் உயிரிழந்தன.

மேலும் போதிய மருத்துவர்கள் இல்லாதது, கோரக்பூர் சுற்றுவட்டாரத்தில் சுகாதார விழிப்புணர்வு இல்லாமல் இருப்பது போன்ற காரணங்களால் அங்கு மூளைக் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த மாநில பிஜேபி அரசு போதிய போதிய நடவடிக்கை இல்லை என்பது பரவலான புகார் ஆகும்.

சில வாரம் முன்னே நாட்டையே உலுக்கிய 72 குழந்தைகள் மரண சம்பவம் தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. இந்நிலையில் தற்போது மீண்டும் அதே போல் சம்பவம் நடந்துள்ளது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.