.

Special Correspondent

கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் இஸ்லாம் மதத்தை சேர்ந்தவர். இவர் தனது மனைவியுடன் இருக்கும் புகைப்படத்தை சமீபத்தில் வலைதளத்தில் பதிவிட்டிருந்தார். அதில் அவரது மனைவி தனது முகத்தை மறைத்தவாறு தோன்றுகிறார். மேலும் அவரது கை விரல்களில் நகப்பூச்சு இருப்பது அப்புகைப்படத்தில் தெரிகிறது.

இந்த புகைப்படத்தை பார்த்த பலர் இதுகுறித்து ஆவேசமாக கருத்துக்களை தெரிவிக்க தொடங்கினர். மேலும் சிலர் சமூகவலைத்தங்களில் இர்பான் பதானை விமர்சித்தும், இஸ்லாம் குறித்தும் பாடம் எடுக்க தொடங்கி விட்டனர்.

இதேபோல் ஷேக் அலீம் என்பவர் பதான் அவர்களே புகைப்படம் நன்றாகவே இருக்கிறது. ஆனால், உங்கள் மனைவி நகச்சாயம் பூசியிருக்கக்கூடாது. இஸ்லாமிற்கு இது ஏற்றதில்லை. என்று தெரிவித்துள்ளார்.

இதனிடையே சிலர் இர்பான் பதானின் இந்த பதிவுக்கு ஆதரவும் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பதானின் இந்த பதிவு பேஸ்புக்கில்ஆயிரக்கணக்கில் ஷேர்களும் கமெண்ட்களும் பெற்றுள்ளன. சமீபத்தில் இதேபோல கிரிக்கெட் வீரர் முகமது ஷமி தனது மனைவியுடன் வலைதளத்தில் புகைப்படம் பதிவிட்டதற்கு விமர்சனங்கள் எழுந்தன என்பது குறிப்பிடத்தக்கது...