.

Special Correspondent

சமீபத்தில் ரிசர்வ் வங்கி வெளியிட்ட தகவல்களின் படி பொதுத்துறை வங்கிகளின் மொத்த வாராக்கடன்களில் 25% தொகையை 12 நிறுவனங்கள் செலுத்தாமல் ஏமாற்றியிருக்கின்றன. இந்த 12 திருப்பிச் செலுத்தாமல் ஏமாற்றிய மொத்த கடன் தொகையே சுமார் 3 இலட்சம் கோடிக்கும் அதிகம்.

மையம் என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் ஒரு வழக்குத் தொடுத்தது. அதில், ரூ.500 கோடிக்கு மேல் பொதுத்துறை வங்கிகளில் கடன் பெற்று திரும்பச் செலுத்தாத நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களின் பெயர்ப்பட்டியலை ரிசர்வ் வங்கி வெளியிட உத்தரவிட வேண்டும் என்று கோரியது.

இவ்வழக்கு விசாரணை கடந்த ஜூலை 17, 2017 அன்று உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற போது, மனுதாரர் சார்பில் ஆஜராகிய மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் அவர்கள், தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ரிசர்வ் வங்கி வருவதால், வாராக்கடன் குறித்த தகவல்களைக் கண்டிப்பாக வெளியிட வேண்டும் என்று வாதாடியுனார்.

இதற்குப் பதிலளித்த ரிசர்வ் வங்கி, அவ்வாறு வாராக்கடன் வைத்திருக்கும் நிறுவனங்களின் பெயர்களை வெளியிடுவது, வங்கிகளுக்கும் நிறுவனங்களுக்கு இடையிலான நம்பிக்கை சார்ந்த உறவு முறையைப் பாதிக்கும் என்பதால் அந்நிறுவனங்களின் பெயரை பொதுவெளியில் வெளியிடக் கூடாது என்று தெரிவித்துள்ளது.