சேலம் மாவட்டம் இடங்கணசாலை பேரூரராட்சியில் தறி நெசவு செய்யும் கூலி தொழிலாளிகள் வடிவேல்- பெருமாயி ஆகியோரின் மகன் தான் ரஜினிரகு என்ற மாணவர் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 497 மதிப்பெண் பெற்று மாநில அளவில் மூன்றாம் இடம் பிடித்தவர், தற்போது 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 1190 மதிப்பெண்கள் பெற்றார் .

Special Correspondent

மருத்துவ படிப்பிற்கான கட் ஆப் 199.5 பெற்றிருந்தும் நீட் நுழைவு தேர்வினால் மருத்துவராகும் வாய்ப்பினை இழந்தார்.

நீட் நுழைவு தேர்வு இல்லையெனில் நிச்சயம் மருத்துவ படிப்பு பயில இடம் கிடைத்து 5 ஆண்டுகளில் மருத்துவராகி தனது பெற்றோரின் சிரமத்தினை நீக்கி குடும்பநிலையை உயர்த்தி இருப்பேன் என்ற வருத்தத்தில் உள்ளதாக தகவல் சமூக தளத்தில் வைரலாகி வருகிறது.

இவரை போல பல மாணவர்கள் 198 மேல கட் ஆப் பெற்றிருந்தும் நீட் நுழைவு தேர்வினால் மருத்துவராகும் வாய்ப்பினை இழந்த சோகம் நூற்றக்கணக்கில் வந்த வண்ணம் உள்ளன...

சமத்துவம் இல்லா படிப்பை கொடுத்து தமிழக இளம் மாணவர்கள் வாழக்கையை வீணடித்த மத்திய மாநில அரசு., நீதிமன்றம் தங்கள் பொறுப்பை உணருமா என்று மக்கள் கேட்ட வண்ணம் உள்ளனர்.