ஒடிசா மாநிலம் அங்கூலில் இருந்து சம்பல்பூர் வரையிலுமான தேசிய நெடுஞ்சாலை உள்ளிட்டு நான்கு நெடுஞ்சாலைகள் அமைப்பதற்கான துவக்க விழா கடந்த 21 -ம் தேதி அன்று நடந்த புதிய திட்டங்களுக்கான துவக்க நிகழ்ச்சி தேசிய நெடுஞ்சாலத் துறையால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது; நிகழ்ச்சிக்கு மத்திய அமைச்சர் நிதின் கட்காரியும் வந்துருந்தார் .

Special Correspondent

இந்நிலையில், நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பத்திரிகையாளர்கள் ஒவ்வொருவருக்கும் ‘கவர்’ அளிக்கப்பட்டுள்ளது. கவரைப் பிரித்துப் பார்த்த பத்திரிகையாளர்கள், அவை ஒவ்வொன்றின் உள்ளும் ஐநூறு ரூபாய்த் தாள் ஒன்று வைக்கப்பட்டிருப்ப்தைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். செய்தி சேகரிக்க வந்திருந்த பத்திரிகையாளர்கள், தாம் அவமதிக்கப்பட்டதைக் கண்டு ஆத்திரமுற்று லஞ்சத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

பத்திரிகையாளர்களின் எதிர்ப்பைத் தொடர்ந்து நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த அதிகாரிகள் மேற்படி விசயத்தை விசாரிப்பதாகத் தெரிவித்ததை தொடர்ந்து பத்திரிகையாளர் அமைதி ஆகினர் . பத்திரிகையாளர்களின் லஞ்ச எதிர்ப்பு பரபரப்பாக ஒடிசா மாநிலத்தில் பேச படுகிறது...