கதிராமங்கலத்தில் ONGC குழாயில் எண்ணெய்கசிவு ஏற்பட்டதைத் தொடர்ந்து குடந்தை அரசு கல்லூரி மாணவர்கள், கல்லூரி நிர்வாகத்தின் அடக்குமுறைகளை எதிர் கொண்டு விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.

Special Correspondent

நேற்று பச்சையப்பாஸ் மாணவர்கள் போராட்டம் நடத்தி போலீசார் தடியடி நடத்தி மாணவர்களை கலைத்தும் 15 மாணவர்களை கல்லூரி முதல்வர் சஸ்பெண்ட் செய்தும் மாணவர்கள் போராட்டம் மற்ற கல்லூரிகளில் நிற்க வில்லை.. தமிழகம் முழுவதும் பல மாணவர்கள் கதிராமங்கலத்திற்கு செல்ல முடியாமல் திருப்பி சென்று கொண்டிருக்கும் நிலையில், சப்-கலெக்டரை முற்றுகையிட்டனர் குடந்தை அரசு கல்லூரி மாணவர்கள்.

அதைத் தொடர்ந்து கதிராமங்கலத்தில் இருந்து வரும் கல்லூரி மாணவி, இதைத்தான் நாங்கள் குடிக்கிறோம் என அக்கிராமமக்கள் குடிக்கும் குடிநீரைக் காட்டி, அம்மக்களின் அவலத்தை விளக்கினார். அதன்பின் மாணவர்கள் அனைவரும் முழக்கமிட்டபடி சப்-கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட பேரணியாக சென்றனர்.

அலுவலகம் முன்பு மாணவர்களை கலைக்க முயற்சித்த காவல்துறையை தோழர்கள் எதிர் கொண்டு பேசினார். பின் கலெக்டரிடம் ONGC நிறுவனத்தின் முறைகேடுகள் நிறுத்தப்பட வேண்டும், கதிராமங்கலத்தில் கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்யவேண்டும் என்று மாணவர்கள் தங்களின் கோரிக்கையை மனுவாக அளித்தனர்.