சென்னை டி.ஜி.பி. அலுவலகம் முன்பு செந்தில் முருகன் என்ற வாலிபர் பேனர் வைத்திருந்தார் அதில் குட்கா விற்பனை செய்யும் கிடங்கு என்று எழுதி இருந்தது இந்த பேனரை . உடனடியாக பேனரை அப்புறப்படுத்தி, அவரை போலீசார் கைது செய்தனர்.

Special Correspondent

கைது செய்யப்பட்ட செந்தில் முருகன், குட்கா விவகாரத்தில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முழக்கங்களை எழுப்பியதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

குட்கா போதைப் பொருள் விவகாரத்தில் அமைச்சர், டி.ஜி.பி என வருமான வரித்துறையே ஆதாரம் கொடுத்த பிறகும், வாய் திறக்காமல் இருப்பதும், அவர்களை இன்னும் பதவியில் வைத்திருப்பதும்தான் ராஜ துரோகக் குற்றம். இதற்காக அவரை மற்றும் அதிமுக அமைச்சர் மற்றும் முதல் அமைச்சர் ஆகியோர் ராஜினமா செய்ய வேண்டும் என்று பிரதான எதிர்கட்சியான திமுக கூறி வந்த நிலையில்...

பேனர் தகவல் அறிந்த டி.ஜி.பி. ராஜேந்திரன் ஆடி போனதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன கைது செய்யப்பட்ட வாலிபர் செந்தில் முருகனிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.