கதிராமங்கலத்தை சேர்ந்த பள்ளிகுழந்தைகள் ஒ,என்,ஜி,சிக்கு எதிராக நடக்கும் போராட்டம், ஒ,என்,ஜி,சியால் பிற்காலத்தில் வரப்போகும் பாதிப்புகள் என்ன, விவசாயிகள், மட்டுமின்றி மன்னின் மைந்தர்கள் என்னநிலைக்கு தள்ளப்படுவார்கள் என்பன உள்ளிட்ட கறுத்துக்களை முன்வைத்து பாடல்கள் பாடி, நாடகம் நடித்துகாட்டினர்.

Special Correspondent

கதிராமங்கலம் மட்டுமின்றி ஒ,என்,ஜி,சி குழாய் பதித்துள்ள பகுதியில் உள்ள குடிநீரை குடிக்கும் குழந்தைகளுக்கு வயிற்று போக்கு வருகிறது. அவர்களை மருத்துவமனைக்கு கொண்டு சென்று டாக்டரிடம் காட்டுகிறார்கள், டாக்டரோ குடிநீர்ல தான் பிரச்சினைன்னு அந்த தண்ணீரை டெஸ்ட் பண்ணுறாங்க, அந்த தண்ணீர் மாசுபட்டுவிட்டதாகவும், இனி இந்த தண்ணீரை குடிக்கவேண்டாம், சுத்திகரிப்பு செய்த குடிநீரை குடிங்க என சொலிகிறார் டாக்டர்.

அதற்கு பொதுமக்களோ எங்களிடம் வசதியில்லை என கூறிகொண்டிருக்கும் போதே அந்த குழந்தை இறந்துவிடுகிறது, பெற்ற தாய் போல் நடித்த அந்த குழந்தை கதரி அழுவதை கண்டு போராட்ட களமே கண்ணீராகியது

அடுத்து ஒ,என்,ஜி,சிக்கு எதிராக போராடுகின்றனர் விவசாயிகள், அவர்களை ஒ,என்,ஜி,சி நிர்வாகம் ஏலனமாக பேசி நாங்க கொடுக்கிற காசவாங்கிக்கிட்டு நிலத்த கொடுத்திட்டு ஓடுடிங்க, என்கின்றனர்.

போராட்ட காரர்களோ எங்களின் உயிர் மூச்சு இருக்கும் வரை போராடுவோம் என்கிறார்கள் அவர்களை ஒ,என்,ஜி,சி நிர்வாகம் அடாவடியாக வெளியேற்றுகிறது. அந்த மக்கள் வெளியூர்களுக்கும், வெளிமாநிலங்களுக்கும் சென்று சோற்றுக்கு வழியில்லாமல், வேலை தேடி அலைந்து பிச்சை எடுக்கின்றனர்.

ஊருக்கே சோரு போட்டோம்ங்க, எங்கள விரட்டிட்டாங்க எங்களுக்கு பசிக்குது பிச்சை போடுங்க என போராட்டத்தில் உள்ளவர்களிடம் மட்டுமின்றி, காவல்துறையினரிடமும், பெற்ற தாயிடமும், பிச்சை கேட்டு நடித்தனர். அந்த சம்பவம் அங்கு கூடியிருந்த அனைவரையும் கண்ணீர்விட்டு அழவைத்தது.