விவசாயிகள் பிரச்சனை தொடர்பாக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அழைப்பின் பேரில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடந்தது. இதில் திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் காங்கிரஸ், முஸ்லீம் லீக் பங்கேற்றன. மேலும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் பங்கேற்றன.

Special Correspondent

கூட்டத்தில் நிறைவேற்ற பற்ற முக்கிய தீர்மானங்கள் விவரம்:
* காவிரி டெல்டா மாவட்டங்களை சிறப்பு வேளாண் மண்டலாமாக அறிவிக்க வேண்டும்.
* பக்கத்து மாநிலங்கள் தடுப்பணைகள் கட்டுவதை தடை செய்ய தீர்மானம்.
* நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கும் மசோதாவுக்கு குடியரசு தலைவர் உடனே ஒப்புதல் தர வேண்டும்.
* மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டங்கள் தமிழகத்தில் கைவிடப்பட வேண்டும்.
* குடிநீர் பிரச்சினையை தீர்க்க போர்க்கால நடவடிக்கை எடுக்கவும் தீர்மானம்.
* முல்லை பெரியாறில் நீர்மட்டத்தை 152 அடி உயர்த்த உடனே நடவடிக்கை தேவை.

விவசாயிகள் பிரச்சினைக்காக பிரதமர் மோடியை சந்திக்கவும் அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும் ஏப்ரல் 25ஆம் தேதி விவசாயிகளின் பிரச்சனைகளை தீர்க்க வலியுறுத்தி பொதுவேலைநிறுத்தம் செய்வது என்றும், அதற்கு முன்னதாக 22ஆம் தேதி மீண்டும் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக சார்பில் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சி நடத்தப்பட்டது. கூட்டத்தில் திருநாவுக்கரசர், திருமாவளவன், முத்தரசன், ஜி.ராமகிருஷ்ணன், சுப.வீரபாண்டியன், தனபாலன், ஆர்.எம்.வீரப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அனைத்து கட்சி கூட்டத்தில் விவசாயிகள் பிரச்சினை தொடர்பாக ஆலோசனை நடைபெற்றது.கூட்டத்தின் முடிவில் எதிர்க்கட்சி தலைவர் அளித்த பேட்டியின் விவரம்:

விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும்., தற்கொலை செய்து கொண்ட விவசாயிகள் குடும்பத்தை அரசு காக்க வேண்டும் என்றும், நெல் கரும்புக்கு நியாய விலை வழங்க வேண்டும் என்றும் மேலும் கரும்புக்கான நிலுவை தொகையை உடனே அரசு வழங்க வேண்டும் என்று தெரிவித்த ஸ்டாலின் முழு மதுவிலக்கை உடனே நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

திமுக இந்த கூட்டத்துக்கு, பிரச்சனை தீர்க்காமல் காலம் தாழ்த்தி வரும் அதிமுக மற்றும் பிஜேபிக்கு அழைப்பு அனுப்பவில்லை. அழைப்பு அனுப்பியும் தேமுதிக, பாமக கட்சிகள் கூட்டத்தை புறங்கணித்து உள்ளனர் .

விவசாயிகள் பற்றி பேச தகுதி இல்லாத கட்சி என்று திமுகவை பிஜேபி தமிழிசை., அதிமுக சசிகலா கோஷ்டி அமைச்சர் செல்லூர் ராஜு மற்றும் நாம் தமிழர் கட்சி சீமான் ஆகியோர் கண்டித்து உள்ளனர்.

டெல்லியில் 33 நாளாக போராடி வரும் அய்யாக்கண்ணு தலைமையில் உள்ள விவசாய பெருமக்கள் அனைத்து கட்சி தீர்மானத்தை வரவேற்று நன்றி தெவித்து உள்ளனர்.

உங்கள் அறிவுறுத்தல் மற்றும் பின்னுட்டம் எங்களுக்கு மிகவும் பயன் தரத்தக்கது . நாங்கள் சரியாக / நியாமாக ஒரு விஷயத்தில் இரு பக்கமும் செய்தியை முக்கியத்துவம் தருகிறோமோ என்று எங்களை தொடர்ந்து கண்காணித்து வழிநடத்த வேண்டுகிறோம் .. நன்றி - ஸ்பெஷல் கரெஸ்பாண்டெண்ட் - ஸ்பெல்க்கோ மீடியா ஆசிரியர் குழு