காஷ்மீரின் உள்துறை அமைச்சகம் வெளியிட்ட செய்தியில் மக்கள் நலனை கருத்தில் கொண்டு இந்த வலைத்தளங்கள் முடக்கப்பட்டுள்ளன. இந்த ஆணை ஒரு மாத காலத்திற்கு அல்லது அடுத்த ஆணை வரும் வரை தொடரும்“, என பிரிட்டிஷ் காலத்தில் கொண்டுவரப்பட்ட“இந்திய டெலிகிராஃப் சட்டம் 1885” படி இந்த ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

காஷ்மீரில் இந்த மாதத் தொடக்கத்தில் நடைபெற்ற இடைத் தேர்தல் கலவரத்திற்கு பிறகு தற்போது புதியதாக ஏற்பட்டுள்ள கலவரத்தால் பதற்றங்கள் அதிகரித்துள்ளன. பள்ளிக்கு செல்லும் பெண்கள் மாணவர்கள் கலவரங்களில் ஈடுபடுவது அரசாங்கத்திற்கு புதிய கவலையை உருவாக்கியுள்ளது.

Special Correspondent

மேலும் போராட்டங்கள் நடைபெறும் என்ற அச்சத்தில் அவ்வப்போது பள்ளிகளும் கல்லூரிகளும் மூடப்படுகின்றன. பள்ளி சீருடை அணிந்த பெண்கள் மீது போலீசார் கண்ணீர் குண்டுகளை வீசிய நிலையில் போலிஸாரின் மீது கல் வீசும் காட்சிகளையும் காண முடிந்தது.

இணையதளம் முடக்கம் அரசாங்கத்தால் எடுக்கப்படும் பொதுவான ஒரு நடவடிக்கையாக இருந்தாலும், முதல்முறையாக சமூக ஊடகங்கள் முடக்கப்பட்டுள்ளன.

காஷ்மீரில் நிலவும் சூழ்நிலையை தீவிரமாக ஆராய்ந்த பின்னரே சமூக வலைத்தளங்களை முடக்கும் முடிவை எடுத்துள்ளதாக போலிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். “சமூக ஊடகங்களில் போலியான பதிவுகள் மூலம் குற்றவாளிகள் இளைஞர்களை தூண்டக்கூடும். அது நீண்ட நாட்கள் நிலவும் ஒரு கவலையாக இருப்பினும் தற்போது சூழல் கட்டுப்பாட்டை மீறி செல்வதால் தற்காலிக தடைதான் கடைசித் தீர்வாக இருந்தது” என மூத்த போலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.

குஜராத்தில் படேல் போராட்டம் மற்றும் காஷ்மீர் போராட்டம் காலத்தில் அவ்வப்போது நடைபெறும் இணையதளம் முடக்கம் போன்றவைகளை குறிப்பிட்டு இந்தியாவில் ஊடக கருத்து சுதந்திரம் மிகவும் பின்தங்கி 180 நாடுகளில் 136 வதாக உள்ளது என்று சமீபத்தில் தனது அறிக்கையில் World Press Freedom (WPF) அமைப்பு கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது .

உங்கள் அறிவுறுத்தல் மற்றும் பின்னுட்டம் எங்களுக்கு மிகவும் பயன் தரத்தக்கது . நாங்கள் சரியாக / நியாமாக ஒரு விஷயத்தில் இரு பக்கமும் செய்தியை முக்கியத்துவம் தருகிறோமோ என்று எங்களை தொடர்ந்து கண்காணித்து வழிநடத்த வேண்டுகிறோம் .. நன்றி - ஸ்பெஷல் கரெஸ்பாண்டெண்ட் - ஸ்பெல்க்கோ மீடியா ஆசிரியர் குழு