நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட் உள்ளது. 90-க்கும் மேற்பட்ட அறைகளை கொண்ட பிரம்மாண்ட பங்களாவில் ஜெயலலிதா வந்து ஓய்வு எடுத்து செல்வார்.

மிகுந்த பாதுகாப்பு நிறைந்த இந்த கொடநாடு எஸ்டேட்டில் ஜெயலலிதா இல்லாத நேரங்களில் தனியார் நிறுவனம் மூலம் பாதுகாப்பு வசதி செய்யப்பட்டுள்ளது. தொழிலாளர்களை தவிர யாரும் அவ்வளவு சீக்கிரத்தில் எளிதில் நுழைந்துவிட முடியாது. அரசின் உயர் அதிகாரிகள் கூட ஜெயலலிதா உத்தரவு கிடைத்தால் மட்டுமே கொடநாடு எஸ்டேட்டிற்குள் நுழைய முடியும்.

அந்த அளவிற்கு பாதுகாப்பு நிறைந்த பகுதியாக திகழ்ந்த கொடநாடு எஸ்டேட் ஜெயலலிதா மறைவிற்கு பின்பு கொடநாடு எஸ்டேட் பாதுகாப்புகளை இழந்தது. மேலும் சொத்து குவிப்பு வழக்கில் கொடநாடு எஸ்டேட்டும் சேர்க்கப்பட்டு இருப்பதால் எந்த நேரமும் அபராத தொகை வசூலிக்க கொட நாடு எஸ்டேட் கையகப்படுத்தப்படும் என்ற நிலையில்...

Special Correspondent

கடந்த 24ஆம் தேதி அதிகாலை 10-வது நுழைவு வாயிலில் இருந்த காவலாளி ஓம்பகதூர் மர்ம நபர்களால் கொடூரமாக கொலை செய்யப்பட்டார் . உடன் இருந்த சக காவலாளியும் தாக்கப்பட்டு ஐ சி யு வில் உள்ளார். இந்த கொலை சம்பவம் தொடர்பாக பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விசாரணையில் ஜெயலலிதாவின் முன்னாள் கார் டிரைவரான கனகராஜ் என்பவர் மீதும் போலீசார் சந்தேகம் அடைந்தனர். எடப்பாடியை சேர்ந்த இவர் ஜெயலலிதாவிடம் 2 வருடங்களாக கார் டிரைவராக பணியாற்றி வந்துள்ளார். அப்போது ஜெயலலிதாவுடன் அடிக்கடி கொடநாடுக்கு வந்துள்ளார் என்பது குறிப்பிட தக்கது. அந்த வகையில் கொடநாடு பங்களா பற்றிய முழு விவரங்களும் இவருக்கு அத்துபடியாக இருந்தது.

கொடநாடு எஸ்டேட் காவலாளி ஓம்பகதூர் மர்ம நபர்களால் கொடூரமாக கொலை தொடர்ந்து, தன் மீது சந்தேகம் வந்த நிலையில் கனகராஜ் நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் சேலம் மாவட்டம் ஆத்தூர் போலீசாரிடம் சரண் அடைய சென்றார்.

அப்போது அந்த வழியாக வேகமாக வந்த சொகுசுகார் அவரது மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட கனகராஜ் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார். பலியான கனகராஜூக்கு கலைவாணி என்ற மனைவியும், 1 வயது பெண் குழந்தையும் உள்ளனர். அவரது உடலை கைப்பற்றிய போலீசார் ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் காவலாளி ஓம்பகதூர் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த மற்றொரு நபரான சயான் கேரளா மாநிலம் பாலக்காடு அருகே தனது குடும்பத்துடன் காரில் சென்று கொண்டிருந்த பொழுது விபத்தில் சிக்கியுள்ளார். இந்த விபத்தில் சயானின் மனைவி மற்றும் மகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மேலும் சயான் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஒரு வாரம் சேலத்தில் தங்கி உள்ள நிலையில், சரண் அடைய வந்த போது நடந்த கொலையா அல்லது கொன்று விட்டு விபத்து ஜோடிக்கப்பட்டு உள்ளதா என்ற பலவாறு பேசுகிறார்கள் அப்பகுதி மக்கள்.

உங்கள் அறிவுறுத்தல் மற்றும் பின்னுட்டம் எங்களுக்கு மிகவும் பயன் தரத்தக்கது . நாங்கள் சரியாக / நியாமாக ஒரு விஷயத்தில் இரு பக்கமும் செய்தியை முக்கியத்துவம் தருகிறோமோ என்று எங்களை தொடர்ந்து கண்காணித்து வழிநடத்த வேண்டுகிறோம் .. நன்றி - ஸ்பெஷல் கரெஸ்பாண்டெண்ட் - ஸ்பெல்க்கோ மீடியா ஆசிரியர் குழு