ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தினுடைய 40 வயது மேற்பட்டவர்களுக்கான கோடைகால 20 நாள்கள் பண்பு பயிற்சி முகாம் தருமபுரி விஜய் வித்யாலயா பள்ளியில் நடந்துக் கொண்டிருக்கிறது. அதன் ஒரு பகுதியாக தருமபுரி பஸ் நிலையத்தை சுத்தப்படுத்தம் ‘மகா சேவா நிகழ்ச்சி’ 13.5.2017 அன்று காலை சில நேரமே நடைபெற்றது.

Special Correspondent

மாநகராட்சி, நகராட்சி உள்ள துப்புரவு தொழிளார்கள் வேலையை தனது வேலை என்று சொல்லி, துடைப்பத்தை வைத்து போட்டாவுக்கு போஸ் கொடுத்து விட்டு துப்புரவு என்ற பெயரில் #RSS ட்ராமா போட்ட வேலை வெளிச்சத்துக்கு வந்துள்ளது என அவ்வூர் மக்கள் தெரிவித்தனர்.

ஆர் எஸ் எஸ் தெரிவித்த விவரம் இதோ :

ஆர்.எஸ்.எஸ். – மிட்டவுன் ரோட்டரி சங்கம் இணைந்து மேற்கொண்ட இந்த நிகழ்ச்சிக்கு ஆர்.எஸ்.எஸ். முகாம் வரவேற்புக் குழு தலைவர் மற்றும் விஜய் வித்யாலயா கல்வி நிறுவனங்களின் தலைவர் திரு. டி.என்.சி. மணிவண்ணன் அவர்கள் தலைமை ஏற்க, விஜய் வித்யாலயா தாளாளர் திரு. டி.என்.சி. இளங்கோ அவர்கள் முன்னிலை வகிக்க, மாண்புமிகு தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் அவர்கள் ‘தூய்மை தருமபுரி’ வாழ்த்துரை வழங்கி பேருந்து நிலைய தூய்மை நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் தருமபுரி முன்னாள் நகர மன்றத் தலைவர், #அதிமுக முன்னாள் நகர செயலாளர் திரு. வெற்றிவேல் மற்றும் மிட்டவுன் #ரோட்டரி சங்க துணைத் தலைவர் சக்திவேல், சிக்மா பயிற்சி மையத்தினர் கலந்துகொண்டனர்.

நிறைவாக ஆர்.எஸ்.எஸ். தருமபுரி மாவட்டத் தலைவர் கே. கோவிந்தராஜ் நன்றியுரை கூற, தேசிய கீதத்துடன் ‘தூய்மை தருமபுரி’ நிகழ்ச்சி இனிதே துவங்கியது. பின்னர் ஆர்.எஸ்.எஸ். முகாமில் கலந்துகொண்டுள்ள ஸ்வயம்சேவகர்கள் பழைய, புதிய பேருந்து நிலையத்தில் தூய்மை பணி மேற்கொண்டனர்.

மக்கள் தெரிவித்த கருத்து விவரம் இதோ :

சில இடங்களின் போட்டாவுக்கு போஸ் கொடுத்து விட்டு விழா குழு கலைந்து செல்ல மறுபடியும் துப்புரவு தொழிளார்கள் அந்த வேலையை செய்ததை கண்ட மக்கள் “என்னாது இது ஸ்வாட்ச் பாரத் ட்ராமா” என்று சிரித்தபடியே சென்றனர்.

உங்கள் அறிவுறுத்தல் மற்றும் பின்னுட்டம் எங்களுக்கு மிகவும் பயன் தரத்தக்கது . நாங்கள் சரியாக / நியாமாக ஒரு விஷயத்தில் இரு பக்கமும் செய்தியை முக்கியத்துவம் தருகிறோமோ என்று எங்களை தொடர்ந்து கண்காணித்து வழிநடத்த வேண்டுகிறோம் .. நன்றி - ஸ்பெஷல் கரெஸ்பாண்டெண்ட் - ஸ்பெல்க்கோ மீடியா ஆசிரியர் குழு