சிவகங்கையை சார்ந்த கே.பஞ்சவர்ணம் (வயது 80). ஜெயலலிதாவின் வீட்டு சமையல்காரராக பணியாற்றியவர். இவரது மகன் ப.முருகேசன் ஜெயலலிதாவின் ஆட்சிக்காலத்தில் செய்தி மக்கள் தொடர்பு துறையில் உதவி மக்கள் தொடர்பு துறை அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.

இன்று அதிகாலை பஞ்சவர்ணம் தனது மகன் முருகேசன் வீட்டு வாசலில் நின்று கொண்டிருக்கும் போது, மர்ம கும்பல் அவரை சுற்றி வளைத்தது. பயங்கர ஆயுதங்களுடன் அவரை தாக்கியது. திடீரென நிகழ்ந்த கொலை தாக்குதலில் பஞ்சவர்ணம் நிலைகுலைந்து போனார்.

Special Correspondent

அவரது அலறல் சத்தத்தை கேட்ட அவரது மகன் முருகேசன் தந்தையை காப்பாற்ற முயன்ற போது, அந்த கும்பலைச் சார்ந்த 3 பேர்கள் பிடித்துக் கொண்டனர். இரண்டு பேர்கள் பஞ்சவர்ணத்தை சரமாரியாக தலையில் வெட்டியுள்ளனர். பின்னர், 5 பேர் கொண்ட அந்த கும்பல் தப்பிச் சென்றது.

பஞ்சவர்ணத்தின் மீது கொலை வெறித் தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி காவல்நிலையத்தில் அவரது மகன் முருகேசன் புகார் அளித்தும்., ஆனால், சைதாபேட்டை காவல்நிலையத்தில் புகார் மனுவை காவலர்கள் ஏற்க மறுத்துவிட்டனர்.

தற்போது, சைதாபேட்டை காவல்நிலையம் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க தயங்குவதாக கூறி உதவி ஆணையாளர் அழகுவிடம் செய்தி மக்கள் தொடர்புத்துறை உதவி இயக்குனராக பணியாற்றும் ப.முருகேசன் புகார் தெரிவித்து உள்ளார்.

கொடநாடு காவலாளி படுகொலை தொடர்ந்து, ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் மற்றும் நண்பரின் மனைவி மற்றும் குழந்தை பரிதாப மரணம் மற்றும் அமைசர் விஜயபாஸ்கர் நண்பர் காண்ட்ராக்டர் சுப்ரமணியம் மரணம் தொடந்து.,

ஜெயலலிதாவின் வீட்டில் சமையல்காரராக பணியாற்றிய 80 வயது முதியவர் மீது கொலைவெறித் தாக்கல் நடத்திய நபர்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது மர்மமாகவே இருந்து வருவதாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்தனர்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த பஞ்சவர்ணத்தை, ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். தீவிர மருத்துவ சிகிச்சையில் பஞ்சவர்ணம் இருந்து வருகிறார் என்பது தற்போதைய நிலைமை.

உங்கள் அறிவுறுத்தல் மற்றும் பின்னுட்டம் எங்களுக்கு மிகவும் பயன் தரத்தக்கது . நாங்கள் சரியாக / நியாமாக ஒரு விஷயத்தில் இரு பக்கமும் செய்தியை முக்கியத்துவம் தருகிறோமோ என்று எங்களை தொடர்ந்து கண்காணித்து வழிநடத்த வேண்டுகிறோம் .. நன்றி - ஸ்பெஷல் கரெஸ்பாண்டெண்ட் - ஸ்பெல்க்கோ மீடியா ஆசிரியர் குழு