கடந்த ஏப்ரல் மாதம் ஸ்ரீநகர் தொகுதிக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை இடைத்தேர்தல் நடந்தது. வாக்குப்பதிவு தினத்தன்று பத்காம் மாவட்டத்தில் உள்ள பீர்வான் பகுதியில் வாலிபர்கள் பாதுகாப்பு படை வீரர்கள் மீது கல்வீச்சில் ஈடுபட்டனர்.

இதையடுத்து பாதுகாப்பு படை வீரர்கள் கல்வீச்சில் ஈடுபட்டவர்களில் ஒரு வாலிபரை பிடித்து தங்கள் ஜீப்பின் முன்பகுதியில் கட்டி அவரை மனித கேடயமாக பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. வாலிபர் ஜீப்பில் கட்டப்பட்டபோது எடுக்கப்பட்ட வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Special Correspondent

வாலிபரை ஜீப்பில் கட்டியது 53 ராஷ்ட்ரிய ரைஃபில் படை வீரர்கள் என்பது தெரிய வந்துள்ளது. ஜீப்பில் கட்டப்பட்ட வாலிபர் பத்காம் மாவட்டத்தில் உள்ள சிதாஹரன் கிராமத்தை சேர்ந்த ஃபரூக் தார் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து ராணுவ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். வாலிபர் ஜீப்பில் கட்டப்பட்ட வீடியோவை ஜம்மு காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா கண்டித்து ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

இந்த நிலையில் ராணுவத்தில் விருது வழங்கும் நிகழ்ச்சியில் ராணுவ தலைமை பிபின் ராவத், சர்ச்சையில் சிக்கிய அந்த ராணுவ லப்டினட்டிற்கு விருது வழங்கி கவுரவித்த நிகழ்வுற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

போரட்டத்தில் கல்வீச்சு சம்பவத்தில் ஈடுபட்ட இளைஞரை பிடித்து அவரை ஜீப்பில் கட்டி வைத்து மனித கேடயமாக பயன்படுத்திய ராணுவ அதிகாரிக்கு விருது கொடுத்தது தவறு, ராணுவ சட்டபடி ராணுவ கோர்ட்டால் விசாரணைக்குட்படுத்தப்பட்டவருக்கு எந்த விருதும் வழங்க கூடாது.

பாரிக்கர் ராணுவ மந்திரியாக விலகிய நிலையில் நிதி மந்திரியாக இருந்த ஜெட்லீ விடம் கூடுதல் பொறுப்பாக பாதுகாப்பு துறை வழங்கப்பட்டது. மத்திய அரசுக்கு என்று தனியாக பாதுகாப்பு மந்திரியும் இல்லை. இந்த நேரத்தில் இப்படிபட்ட சிக்கலை ஏற்படுத்துவது மத்திய அரசுக்கு சரியாக இருக்காது என்று மூத்த பத்திரிகையாளர் தெவித்தார்.

உங்கள் அறிவுறுத்தல் மற்றும் பின்னுட்டம் எங்களுக்கு மிகவும் பயன் தரத்தக்கது . நாங்கள் சரியாக / நியாமாக ஒரு விஷயத்தில் இரு பக்கமும் செய்தியை முக்கியத்துவம் தருகிறோமோ என்று எங்களை தொடர்ந்து கண்காணித்து வழிநடத்த வேண்டுகிறோம் .. நன்றி - ஸ்பெஷல் கரெஸ்பாண்டெண்ட் - ஸ்பெல்க்கோ மீடியா ஆசிரியர் குழு