சட்டசபையில் அமைச்சர் செங்கோட்டையன் இன்று பள்ளிக்கல்வித்துறையில் பல அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

இதில் ஒரு அறிவிப்பாகிய “கீழடியில் சிந்து சமவெளி நாகரிகம் உள்ளிட்டவை குறித்து பழம்பெரும் நூலகம் அமைக்கப்படும்.” என்ற அறிக்கை சமூக தளத்தில் சர்ச்சையை கிளம்பி உள்ளது. கீழடி கலாச்சாரம் சிந்து சமவெளிக்கு முந்தியது. ஒழுங்காக ஆய்வு செய்தால் மனித சரித்திரம் மாறி விடும். பிறகேன் சிந்து சமவெளிக்கு அந்த இடத்திலே முக்கியத்துவம் என்பதனை சான்றோர்கள் சற்று யோசிக்க வேண்டாமா என்ற கேள்விகள் சமூக வலைத்தளத்திலே எழுப்பி உள்ளனர்.

Special Correspondent

ஜெயலலிதா அரசு நூலகத்தை ஆறு ஆண்டுகளாக முடக்கி உள்ள நிலையில் நூலகம் மேம்பாட்டுக்கு பின்வரும் அறிவிப்புகளை சட்டசபையில் அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்டுள்ளார் :

* மதுரையில் ஒரு லட்சம் நூல்களுடன் மாபெரும் நூலகம் ஏற்படுத்தப்படும்.

* அரியவகை நூல்கள், ஆவணங்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்படும்.

* அண்ணா நூற்றாண்டு நூலகத்துக்குத் தொழில்நுட்ப நூல்கள் வாங்க 5 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* 30 கோடி ரூபாய் செலவில் பொது நூலகங்களுக்குப் புதிய நூல்கள் வாங்கப்படும்.

* 3 கோடி ரூபாய் செலவில் 32 மாவட்டங்களில் புத்தகக் கண்காட்சி நடத்தப்படும்.

ஆசிரியர் மேம்பாடு கோரிக்கைகளை நிறைவேற்றும் விகிதமாக பின்வரும் அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார் :

* நடப்பு கல்வியாண்டில் புதியதாக 4084 ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள்.

* பாடத்திட்டங்கள் மாற்றம் குறித்து வல்லுநர் குழு கருத்துக் கேட்டு ஒரு வாரத்தில் பேரவையில் தெரிவிக்கப்படும்.

* 17,000 தற்காலிக ஆசிரியர் பணியிடங்கள் நிரந்தரப் பணியிடங்களாக மாற்றப்படும்.

* சிறப்பாக செயல்படும் பள்ளிகளுக்குப் புதுமைப் பள்ளி விருது வழங்கப்படும்.

* 7,500 ரூபாய் ஊதியத்தில் பகுதி நேர ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர்.

* சுயநிதி பள்ளிகளைச் சேர்ந்த ஆசிரியர்களுக்குப் பணியிடை பயிற்சி வழங்கப்படும்.

மாணவர்களுக்கு ஏதுவாக பின்வரும் அறிவிப்புகளை வெளியுட்டுள்ளார் :

* தனியார் பள்ளிகளில் கட்டாயக் கல்வி திட்டத்தின் கீழ் மாணவர்களைச் சேர்க்க நவம்பர் வரை கால அவகாசம் நீட்டிப்பு.

* மாணவிகள் பயிலும் 5,639 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு நாப்கின் மற்றும் எரியூட்டும் இயந்திரம் வழங்கப்படும்.

* மாணவர்களின் அறிவியல் தொழில்நுட்பம், கலைகளை ஊக்குவிக்கும் வகையில், ஆண்டுதோறும் 100 மாணவர்கள் வெளி நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுவர்.

* தமிழ்நாட்டில் பயின்று பிற மாநிலங்களுக்குக் கல்வி பயிலச் செல்பவர்களுக்கு ஆன்லைனில் டி.சி வழங்கப்படும்.

* மலைப்பகுதிகள், கிராமப்புறங்களில் 30 தொடக்கப் பள்ளிகள் அமைக்கப்படும்.

* கலை அறிவியல் கல்லூரிகளில் 89 புதிய பாடப்பிரிவுகள் தொடங்கப்படும்.

* அழகப்பா பல்கலைக்கழகத்தில் 2.10 கோடி ரூபாய் மதிப்பில் திறன் வங்கி மையம் தொடங்கப்படும்.

* சென்னை பெரியார் அறிவியல் தொழில்நுட்ப மையத்தில் அறிவியல் கோளம் 2.50 கோடி ரூபாயில் அமைக்கப்படும்.

இதில்மெட்ரிக் பள்ளிகள் தொடங்க இணையதளம் மூலம் விண்ணப்பிக்க அனுமதி வழங்கப்படும் என்ற அறிவிப்பு அரசு பள்ளிகளை அரசு மேம்படுத்தாமலே தனியார் பள்ளிகளை ஊக்குவிக்க முயற்சி என சமூக வலைதளத்தில் பதிவர்கள் புகார் கூறி உள்ளனர்.

ஜெயலலிதா அரசில் அவரே 110 விதியின் கீழ் பல்வேறு திட்டங்களை வெளியிடுவார். ஆனால் அவற்றுக்கு நிதி ஆதாரம் இல்லாத காரணத்தினால் அவைகள் பேச்சளவில் நின்று போனது என்று எதிர்க்கட்சிகள் ஆதாரத்தோடு குற்றம் சாட்டினார்கள். அதுபோல இங்கு இந்த திட்டங்களுக்கு நிதி ஆதாரம் எங்கிருந்து வரும் என்று பட்ஜெட்டில் விளக்கப்படவில்லை

இந்த திட்டங்கள் நிறைவேறுமா அல்லது பழையபடியே ஜெயலலிதா காலத்தின் படியே வெறும் அறிவிப்போடு நின்று விடுமா என்பதனை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும் என்று கல்வி நிபுணர்கள் கருத்து தெரிவித்தனர்.

உங்கள் அறிவுறுத்தல் மற்றும் பின்னுட்டம் எங்களுக்கு மிகவும் பயன் தரத்தக்கது . நாங்கள் சரியாக / நியாமாக ஒரு விஷயத்தில் இரு பக்கமும் செய்தியை முக்கியத்துவம் தருகிறோமோ என்று எங்களை தொடர்ந்து கண்காணித்து வழிநடத்த வேண்டுகிறோம் .. நன்றி - ஸ்பெஷல் கரெஸ்பாண்டெண்ட் - ஸ்பெல்க்கோ மீடியா ஆசிரியர் குழு