தமிழ் தெரியாத ஹரியானா மாணவர்கள் தமிழில் அதிக மதிப்பெண்கள் எடுத்தது குறித்து விசாரணைக்கு உத்தரவிட மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

ஹரியானா மாணவர்கள் 25-க்கு 24 மதிப்பெண்கள் பெற்றிருப்பது பற்றி தமிழ்நாடு மாணவர்கள் குற்ற சட்டை கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும்...   

பதிவை பகிர

தி.மு.க. செயல் தலைவரும் – தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், மத்திய தொலை தொடர்பு இணை அமைச்சர் மனோஜ் சின்ஹாவுக்கு நேற்று எழுதிய கடிதத்த்தில் :

11.12.2016 அன்று நடந்த அஞ்சல் ஊழியருக்கான நேரடி ஆட்சேர்ப்பு தேர்வு முறையில், மதிப்பெண் வழங்குவதில் முறைகேடுகள் நிகழ்ந்து, அதனால் தமிழ்நாட்டை சேர்ந்த பல மாணவர்களின் வாய்ப்பு கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் விரும்பத்தகாத சூழலை மத்திய தொலை தொடர்பு இணை அமைச்சர் மனோஜ் சின்ஹாவுக்கு எதிர் கட்சி தலைவர் ஸ்டாலின் எழுதிய கடிதத்த்தில் தமிழ் தெரியாத ஹாரியானா மாணவர்கள் தமிழில் அதிக மதிப்பெண்கள் எடுத்தது குறித்து பாரபட்சமற்ற விசாரணைக்கு உத்தரவிட கோரியுள்ளார்.

அஞ்சல் துறையால் நடத்தப்படும் இந்த தேர்வு திட்டத்தில் வழங்கப்படும் 100 மதிப்பெண்களில், தமிழ் மொழிக்கு ஒரு மதிப்பெண் கேள்விகளில் 25 மதிப்பெண்கள் என்பதில், தமிழ் தெரியாத ஹாரியானா மாணவர்கள் 25-க்கு 24 மதிப்பெண்கள் பெற்றிருப்பது பற்றி தமிழ்நாடு மாணவர்கள் குற்ற சட்டை கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும்...

ஸ்பெஷல் கரெஸ்பாண்டெண்ட்

தேர்வு முறையின் அனைத்து அம்சங்களிலும் முழுமையான வெளிப்படைத்தன்மையை பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு பிரச்சாரம் செய்கின்ற வேளையில், தவறான மதிப்பீடும், முறைகேடுகளாலும் தமிழ்நாட்டை சேர்ந்த மாணவர்கள் பாதிக்க படுவதால் தேர்வு எழுதிய தமிழ்நாட்டு மாணவர்களின் புகாரை கவனத்தில் கொண்டு, அஞ்சல் துறையின் நேரடி ஆட்சேர்ப்பு தேர்வு முறையில் நம்பிக்கையை ஏற்படுத்தமாறு கூறியுள்ளார்.

வேலையின்மை பிரச்சனை இளைய தலைமுறையினரை அச்சுறுத்தி வரும் சூழலில், நேரடி ஆட்சேர்ப்பு தேர்வு முறையின் எந்த பணியமர்த்தும் நடைமுறையிலாவது நேர்மை மற்றும் வெளிப்படைத்தன்மையில் குறைபாடுகள் ஏற்படின் அது மாணவர்களின் எதிர்காலத்தை ஈடு செய்ய முடியாத அளவுக்கு பாதிக்கும் அளவு தீங்கை உண்டாக்கும் அதனால் வேலை கிடைக்குமென்ற பெரும் நம்பிக்கையில் தேர்வு எழுதியுள்ள வேலையில்லாத தமிழக இளைஞர்களுக்கு நீதியினை பெற்றுத்தர வேண்டும் என்று என்றும் மு க ஸ்டாலின் கேட்டு கொண்டுள்ளார்.

உங்கள் அறிவுறுத்தல் மற்றும் பின்னுட்டம் எங்களுக்கு மிகவும் பயன் தரத்தக்கது . நாங்கள் சரியாக / நியாமாக ஒரு விஷயத்தில் இரு பக்கமும் செய்தியை முக்கியத்துவம் தருகிறோமோ என்று எங்களை தொடர்ந்து கண்காணித்து வழிநடத்த வேண்டுகிறோம் .. நன்றி - ஸ்பெஷல் கரெஸ்பாண்டெண்ட் - ஸ்பெல்க்கோ மீடியா ஆசிரியர் குழு

பதிவை பகிர

கட்டுரை ஆசிரியரைப்பற்றி

ஸ்பெஷல் கரெஸ்பாண்டெண்ட்

பின்பற்ற

சமூகத்தின் மேம்பாடு வேண்டி திறந்த மனதுடன் உண்மையை தேடி விரும்பும் எழுத்தாளர்களின் சங்கம கூடலே splco.me . இது சமூக வலைதளத்தின் எழுத்தாளர்களின் கன்னி முயற்சியின் தொகுப்பு.

பின்னுட்டம்

பின்னுட்டம் இடுக


உங்கள் தகவல் பாதுகாப்பாக வைக்கப்படும் தனியுரிமை கொள்கை.