கருப்புப்பண ஒழிப்பு சரியான பாதையில் செல்கிறதா..

வணிகர்களின் துயரம் நீடிக்கும் அதே நேரத்தில் பெரும் பண முதலைகள் தப்பி...   

பதிவை பகிர

கருப்புப்பண ஒழிப்பு நடவடிக்கைகளால் ரூ.4 லட்சம் கோடி முதல் ரூ.6 லட்சம் கோடி வரை கருப்புப் பணம் பிடிபடும் என்பது தான் மத்திய அரசின் எதிர்பார்ப்பாக இருந்தது.


sm 3.15

ஆனால், களநிலைமை முற்றிலும் மாறுபட்டதாக உள்ளது.கருப்புப் பண ஒழிப்பு நடவடிக்கைகளை கடந்த நவம்பர் 8-ஆம் தேதி அறிவித்த போது, இந்திய ரிசர்வ் வங்கியிடம் கையிருப்பாக இருந்த ரொக்கத்தின் மதிப்பு ரூ.4,06,966 கோடி ஆகும்.

நவ. 8 அன்று புழக்கத்தில் இருந்த 500 / 1000 தாள்களுக்கான கணக்கினை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்திருந்தார்கள். எல்லா ஊடகங்களும் சொன்ன தொகை சராசரியாக 15 இலட்சம் கோடிகள் ..

RTIக்கு பதில் அளித்தப் போது இன்றைக்கு ரிசர்வ் வங்கி சொல்லி இருப்பது
500 தாள்கள் - 9.13 இலட்சம் கோடிகள்
1000 தாள்கள் - 11.38 இலட்சம் கோடிகள்
ஆக மொத்தம் 20.51 இலட்சம் கோடிகள்

அப்படி என்றால் ரிசர்வ் வங்கி பொய் சொல்லி இருக்கிறதா என்றால் வருத்தமுடன் ஆம் என்றே சொல்ல வேண்டும் .. ரிசர்வ் வங்கி மட்டும் பொய் சொல்லவில்லை .. நாட்டின் பிரதமரும் சொல்லி இருக்கிறார் திரும்ப திரும்ப ..

09-Nov-2016 பிரதமர் மோடிஜப்பானில் கிண்டலாக சொன்னது : 2.5 லட்சம் ரூபாய்க்கு மேல் டெபாசிட் செய்பவர்களிடம் மட்டுமே கேள்விகள் கேட்கப்படும். தாயை, முதியோர் இல்லத்தில் தவிக்க விட்ட மகன்கூட, தனது தாயின் வங்கிக் கணக்கில் 2.5 லட்சம் ரூபாய் டெபாசிட் செய்து கொள்ளலாம்.''

13-Nov-2016 கோவாவில் கிரீன்பீல்டு விமான நிலையத்துக்கு அடிக்கல் நாட்டி பிரதமர் மோடிஜப்பானில் உணர்ச்சிவசப்பட்டுசொன்னது : ''நான் வெறும் 50 நாட்கள் மட்டுமே கேட்கிறேன். டிசம்பர் 30-ம் தேதி வரை எனக்கு அவகாசம் கொடுங்கள். அதன் பிறகும் எனது நடவடிக்கைகளில் ஏதேனும் தவறு இருந்தால், நாட்டிற்காக எந்த தண்டனையையும் அனுபவிக்கத் தயாராக இருக்கிறேன். என்னை நெருப்பில் போட்டு எரித்தாலும் தாங்கிக் கொள்ளத் தயார். 70 ஆண்டுகளாக கறுப்புப் பணத்தை பதுக்கியவர்களால் என் உயிருக்கு ஆபத்து உள்ளது. நாட்டிற்காக நான் என் உயிரை விடவும் தயாராக உள்ளேன்.'' என்றார்.

Special Correspondent

மத்திய அரசின் நடவடிக்கையால் ஏழைகளும், நடுத்தர மக்களும் தான் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். பணம் எடுப்பதற்காக வங்கிகளிலும், ஏ.டி.எம்.களிலும் காத்திருந்த போது மட்டும் 140 பேர் உயிரிழந்திருக்கின்றனர்.

பணப்புழக்கம் இன்று வரை சரி செய்யப்படாத நிலையில் ஏழைகள், வணிகர்களின் துயரம் நீடிக்கும் அதேநேரத்தில் பெரும் பண முதலைகள் இதிலிருந்து தப்பிவிட்டதாக தோன்றுகிறது.

குஜராத்தில் சுமார் 14,000 கோடி கருப்புப் பணம் வைத்திருந்ததாக கைது செய்யப்பட்ட தொழிலதிபர் மகேஷ் ஷா அந்த பணம் தம்முடையது இல்லை என்றும், அரசியல்வாதிகள் மற்றும் பெரும் தொழிலதிபர்களுக்கு சொந்தமானது என்றும் கூறியிருப்பதிலிருந்தே இதை அறிந்து கொள்ளலாம்.

மொத்தத்தில் மத்திய அரசின் கருப்புப் பண ஒழிப்புத் திட்டம் பயனற்ற பாதிப்பு நிறைந்த திட்டம் என்பது உறுதியாகியிருக்கிறது.ஆனால் இதில் ஈடுபட்டு புது பணத்தை பதுக்கும் பிஜேபி முக்கிய பிரமுகர்கள் இன்று வரை கைது செய்யப்படாமல் இருந்து வருகின்றனர்.

.


உங்கள் அறிவுறுத்தல் மற்றும் பின்னுட்டம் எங்களுக்கு மிகவும் பயன் தரத்தக்கது . நாங்கள் சரியாக / நியாமாக ஒரு விஷயத்தில் இரு பக்கமும் செய்தியை முக்கியத்துவம் தருகிறோமோ என்று எங்களை தொடர்ந்து கண்காணித்து வழிநடத்த வேண்டுகிறோம் .. நன்றி - ஸ்பெஷல் கரெஸ்பாண்டெண்ட் - ஸ்பெல்க்கோ மீடியா ஆசிரியர் குழு

பதிவை பகிர

கட்டுரை ஆசிரியரைப்பற்றி

special correspondent  

Follow on

சமூகத்தின் மேம்பாடு வேண்டி திறந்த மனதுடன் உண்மையை தேடி விரும்பும் எழுத்தாளர்களின் சங்கம கூடலே splco.me . இது சமூக வலைதளத்தின் எழுத்தாளர்களின் கன்னி முயற்சியின் தொகுப்பு.

பின்னுட்டம்

பின்னுட்டம் இடுக


உங்கள் தகவல் பாதுகாப்பாக வைக்கப்படும் Privacy Policy.