தமிழக தலைமை செயலகம் இறையாண்மை மாண்பு மீறப்பட்டதா?

இன்றைய ராம் மோக ன்ராவ் கேள்வி “ என் மீது search warrant இல்லாமல் எப்படி தமிழக தலைமை செயலகம் உள்ளே நுழைந்தார்கள்”   

பதிவை பகிர

ராம் மோகன் உத்தம புத்திரன் இல்லை என்று பிஜேபி இலெ கணேசன் ., பொன் ரா ., தமிழிசை எல்லாம் பதறும் போதே ஓ பன்னிர் செல்வம் மற்றும் பிஜேபி மோடியின் இடையான ரகசிய ஒப்பந்தம் “பணால்” ஆனதை உணர முடிகிறது ....


sm 3.15

இன்றைய ராவ் கேள்வி “ என் மீது search warrant இல்லாமல் எப்படி தமிழக தலைமை செயலகம் உள்ளே நுழைந்தார்கள்”

மேலும் இது மாநில உரிமை பிரச்சனை என்று சீறி இருப்பது நாளை தமிழக அரசு இதனை கையில் எடுத்தால் இந்த சட்ட பிரச்சனை மோடி அரசுக்கு தலைவலியாக மாறலாம் .. இந்த இடத்தில அதிமுகவின் அதிகாரபூர்வ பேச்சாளர் தீரன் மத்திய அரசை கண்டித்து இருப்பதை கட்சி யார் கட்டுப்பாட்டில் வருகிறது என்பதை உணர்த்துவதாக உள்ளது .

ராகுல் காந்தி மம்தா மற்றும் அதிமுக எம்பி முன்னாள் மத்திய அமைச்சர் எஸ் ஆர் பாலசுப்ரமணியம் ஆகியோருக்கு நன்றி சொல்லி முன்னாள் தலைமை செயலர் மூலம் தனது அஸ்திரங்கள் ஏவ தொடங்கி விட்டதை நோக்கும் போது பிஜேபியை அதிமுகவின் சசிகலா அணி எதிர்க்க தயாராகி விட்டது காண முடிகிறது .. இது சரியான அணுமுறையா என்றால் சரியானது காரணம் அகில இந்திய அளவில் demonetisation என்ற ஒற்றை செயலால் பிஜேபி பெயர் அழுகி கொண்டு வருகிறது.

Special Correspondent

இன்னும் இரண்டு வாரங்களில் அதிமுக அணிகளின் போக்கு தெரிந்து விடும் .. இதன் பின்னர் திமுக தனது அரசியல் காய்களை நகர்த்த தொடங்கும் போது தமிழ்நாடு ஜெயலலிதா என்ற பிம்பத்தை கொஞ்சம் கொஞ்சமாக மறக்க தொடங்கி இருக்கும் ..

எம்ஜிஆர் -ஐ பின்னுக்கு தள்ளி எப்படி ஜெயலலிதா அதிமுகவை முன்னிலை படுத்தினரோ அது போலவே ஜெயலலிதாவை பின்னுக்கு தள்ளி அதிமுகவை முன்னிலை படுத்துவதே வருங்கால அதிமுக தலைமைக்கு ஏற்றதாக இருக்கும் என்பதே அவர்களின் கணக்ககாகிவிடும்..

சசிகலா ஆதரவு இருக்கட்டும் . காங்கிரஸ் பின்புலமன்றி பிஜேபியை ராவ் இவ்வளவு துணிச்சலாக எதிர்க்க முடியும் என்று தோன்றவில்லை .. திருநாவுக்கரசர் காங்கிரஸ் கமிட்டி தலைவர் இருக்கும் வரை காங்கிரஸ் கூட்டணி என்பது திமுக விடம் ஒரு நம்பக தன்மையுடன் இருக்கும் என்று சொல்ல முடியாதது ..

இந்த இடத்திலே திமுக அணுகுமுறை உற்று நோக்கும் போது எதிர்க்கட்சி தலைவர் மு க ஸ்டாலின் அவர்கள் அதிமுக முதல்வர் மற்றும் வருமான வரி துறை பதில் அளிக்க வேண்டும் என்று சொல்லி இருப்பதில் திமுக தலைவர் கருணாநிதியின் அரசியல் லாவக அணுகுமுறை தெரிகிறது ..

அதிமுக உடையும் பட்சத்தில் அதில் இருக்கும் சசிகலா அணியை நோக்கிகாங்கிரஸ்நகருவது திமுக தலைவர் கருணாநிதி உடல் நிலையை கணக்கில் கொண்டு திமுக தடுக்க முடியும் என்று தோணவில்லை..

இதனால் ஏற்படும் வெற்றிடத்தை மக்கள் நல கூட்டணி கொண்டு திமுக நிரப்புமா .. அல்லது உடையும் அணியின் ஆதரவை கொண்டு ஆட்சி அமைக்குமா என்பதை காலம் சொல்லும்.

அப்படி திமுக உடையும் ஒரு அதிமுக அணி துணையுடன் ஒரு வேளை ஆட்சி அமைக்கும் பட்சத்தில் பிஜேபி வின் தமிழக தாமரை கனவு மலராமலே மரணிக்கக்கூடும்..

.


உங்கள் அறிவுறுத்தல் மற்றும் பின்னுட்டம் எங்களுக்கு மிகவும் பயன் தரத்தக்கது . நாங்கள் சரியாக / நியாமாக ஒரு விஷயத்தில் இரு பக்கமும் செய்தியை முக்கியத்துவம் தருகிறோமோ என்று எங்களை தொடர்ந்து கண்காணித்து வழிநடத்த வேண்டுகிறோம் .. நன்றி - ஸ்பெஷல் கரெஸ்பாண்டெண்ட் - ஸ்பெல்க்கோ மீடியா ஆசிரியர் குழு

பதிவை பகிர

கட்டுரை ஆசிரியரைப்பற்றி

ச.வெ.ரா  

Follow on

பயன்பட்டு அறிவியல் தியாயகராஜர் பொறியியல் கல்லூரில் முடித்து பின்னர் ., சர்வதேச வர்த்தக மேல்படிப்பு PGDFTM முடித்து ., அதன் பின்னர் சென்னை பல்கலைக்கழகத்தில் MBA - Distinction பெற்றார் .. சில காலம் அயல் நாட்டில் உழைத்து பின்னர் சொந்தமாக தொழில் தொடங்கி ., எழுதும் ஆர்வத்தின் காரணமாக எழுத தொடங்கி நண்பர்கள் அறிவுரையால் ., splco.me சமூக வலைதள தொடர்பகம் நிறுவினார்
இலங்கை தமிழர் பிரச்சனை காரணமாக இரண்டு வருடம் வகித்த பொருளாளர் பதவியை 2009 ஆம் ஆண்டு Indian Asean Srilanka Chamber of Commerce ல் இருந்து விலகினார்.
திரு சைலேஷ் காந்தி - Information Commisioner (மகாத்மா காந்தி பேரன்) அவர்களுடன் புது டெல்லியில் நியாத்தை வாதிட்டு under Section 8(1)(h) of RTI தகவல் பெரும் உரிமையை பெற்றார் ..
படிப்பதும் , மீன் வளர்ப்பும் ,இயற்கை வேளாண்மையும் இவருக்கு பிடித்தவைகள்...

பின்னுட்டம்

பின்னுட்டம் இடுக


உங்கள் தகவல் பாதுகாப்பாக வைக்கப்படும் Privacy Policy.