தேசிய வங்கிகளில் விவசாயிகளின் பயிர்க்கடன்களை தள்ளுபடி செய்வது, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், வறட்சி நிவாரணம் வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் கடந்த மாதம் 14–ந் தேதி முதல் தமிழக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இன்று அவர்களின் போராட்டம் 28வது நாளை எட்டியுள்ளது.

Special Correspondent

இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பிரதமரை சந்திப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது என கூறி அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அய்யாக்கண்ணு மட்டும் பிரதமரை சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டதாக சொல்லி பின் பிரதமர் அலுவலகம் சென்ற பின்னர் வரவேற்பு அலுவலகத்திலேயே அவரிடமிருந்து கோரிக்கை மனு மட்டுமே பெறப்பட்டு அவர் திருப்பி அனுப்பப்பட்டதாகவும் விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதமர் அலுவலகம் முன்பு விவசாயிகள் ஆடைகளை களைத்து நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டனர். பிரதமரை சந்திப்பதாக அழைத்துச் சென்று ஏமாற்றி விட்டனர் என்று அய்யாக்கண்ணு குற்றம் சாட்டினார்.

தங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்த்தும் வகையிலே ஆடையை களைந்து நிர்வாணமாக கொளுத்தும் வெயில் ரோட்டில் அங்க பிரதச்சனமாக உருண்டது பார்ப்பவர் கண்களில் வேதனையையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.

Special Correspondent

மேலும் பேசிய அவர் பிரதமர் இதுவரை எங்களை சந்திக்கவில்லை என்பதால் தங்களுக்கு வேறு வழி தெரியவில்லை என்றார். இந்நிலையில் இதன் உச்சகட்டமாக இதுவரை அரை நிர்வாணத்துடன் போராடி வந்த விசாயிகள், இன்று நிர்வாணமாக போராட்டம் நடத்தியுள்ளது தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. இதன் இடையே நிர்வாண போராட்டம் நடத்திய விவசாயிகளை கைது செய்தனர் டெல்லி போலீசார்.

இதனை கண்டித்த திருச்சி சிவா தமிழக அரசு செயலற்ற நிலையில் உள்ளதாகவும் விவசாயிகளின் உணர்வை மதித்து இப்போதாவது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். மேலும் தமிழக அரசு போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும், விவசாயிகள் பிரச்சனையில் தமிழக அரசு மெத்தனம் காட்டுகிறது எனவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

உங்கள் அறிவுறுத்தல் மற்றும் பின்னுட்டம் எங்களுக்கு மிகவும் பயன் தரத்தக்கது . நாங்கள் சரியாக / நியாமாக ஒரு விஷயத்தில் இரு பக்கமும் செய்தியை முக்கியத்துவம் தருகிறோமோ என்று எங்களை தொடர்ந்து கண்காணித்து வழிநடத்த வேண்டுகிறோம் .. நன்றி - ஸ்பெஷல் கரெஸ்பாண்டெண்ட் - ஸ்பெல்க்கோ மீடியா ஆசிரியர் குழு