ராம்லீலா மைதானத்தில் துவங்கிய டெல்லி தமிழ் இளைஞர்கள் பேரணி சுமார் 3 கி.மீ. தூரம் முக்கிய சாலைகள் வழியாக பயணித்து, விவசாயிகள் போராட்டம் நடத்திவரும் ஜந்தர் மந்தர் பகுதியை அடைந்தது. இந்தப் பேரணியில், மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள், வழக்கறிஞர்கள் உள்பட டெல்லி இளைஞர்கள் பெருமளவில் பங்கேற்றனர்.

Special Correspondent

விவசாயக் கடன்களை ரத்து செய்ய வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், தென்னிந்திய நதிகளை இணைக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளுடன் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளின் குரல்களை அரசு செவிமடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். ஜந்தர் மந்தர் பகுதியை வந்தடைந்த பிறகு, விவசாயிகளுக்கு ஆதரவாக சிறிது நேரம் அவர்கள் முழக்கமிட்டார்கள்.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு ஆரம்பத்தில் இருந்து டெல்லி தமிழ் இளைஞர்கள், உணவு, மருத்துவப் பரிசோதனை வசதி உள்பட பல்வேறு வசதிகளை செய்து கொடுத்து தார்மீக ஆதரவு அளித்து வருகின்றனர் என்பது குறிபிடத்தக்கது.

இதற்கிடையில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மகளிர் காங்கிரஸ் பொதுச் செயலரும் முன்னாள் நடிகையுமான நக்மா, ஜந்தர் மந்தர் பகுதிக்கு வந்து விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தார்.

நேற்று நடந்த நிர்வாண போராட்டத்தை தொடர்ந்து அதே நாளில் டெல்லி தமிழ் இளைஞர்கள் பேரணி 3 கி.மீ. தூரம் ஆதரவு காரணமாக போராடும் விவசாயிகள் மனதிடம் பெற்று உள்ளதாக அங்கு 29 நாளாக போராடும் விவசாயிகள் தெவித்தனர்.

உங்கள் அறிவுறுத்தல் மற்றும் பின்னுட்டம் எங்களுக்கு மிகவும் பயன் தரத்தக்கது . நாங்கள் சரியாக / நியாமாக ஒரு விஷயத்தில் இரு பக்கமும் செய்தியை முக்கியத்துவம் தருகிறோமோ என்று எங்களை தொடர்ந்து கண்காணித்து வழிநடத்த வேண்டுகிறோம் .. நன்றி - ஸ்பெஷல் கரெஸ்பாண்டெண்ட் - ஸ்பெல்க்கோ மீடியா ஆசிரியர் குழு