டெல்லியில் தமிழக விவசாயிகள் காவிரி மேலான்மை, விவசாயக்கடன் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, பலவித போராட்டங்களை ஒருமாதங்களாக நடத்திவருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக பல்வேறு மாநிலங்களில் இருந்தும் விவசாயிகள், அரசியல் தலைவர்கள் போராடி வருகின்றனர்.

Special Correspondent

அந்தவகையில் தமிழகத்திலும் போராட்டம் வெடித்தது. தஞ்சாவூரில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மனியரசன் தலைமையில் கடந்த மாதம் துவங்கப்பட்டது. இன்றோடு 19 நாட்கள் முடிந்துள்ள நிலையில் போராட்ட ஒருங்கினைப்பாளர் மனியரசன் இந்த போராட்ட வடிவம் இத்தோடு முடித்து வைத்து, மே15 முதல் ஐந்து மாவட்டங்களில் ரயில் மறியல் நடைபெறும் என கூறியுள்ளார்.

டெல்லியில் போராடும் தமிழக விவசாயிகள் ஆதரித்து கடந்த 13-04-2017 அன்று இளைஞர்கள் கத்திப்பாரா மேம்பாலத்தை பூட்டு போட்டு செய்த மறியலால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. அவர்கள் போராட்டத்தை கைவிட மறுத்த காரணத்தினால் ஆறு பேரை போலீசார் கைது செய்தனர்

மேலும் நெடுவாசல் ஹைட்ரொ கார்பன் விஷயத்தில் பிஜேபி அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தந்த உறுதியை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்ட அவ்வூர் கிராம மக்கள்., இப்போது மத்திய அரசு தனது நிலையை மாற்றி கொண்டு ஹைட்ரொ கார்பன் திட்டத்தை ஆதரித்து வருவதால் மீண்டும் தொடர் போராட்டத்தை கையில் எடுப்பதாக அறிவித்து உள்ளனர்

இதுபோன்ற தொடர் பிரச்சனைகளை தந்து தமிழகத்தை தொடர்ந்து பதட்டத்தில் வைக்க ஆசைப்படுகிறதா பிஜேபி? என எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி உள்ளன.

உங்கள் அறிவுறுத்தல் மற்றும் பின்னுட்டம் எங்களுக்கு மிகவும் பயன் தரத்தக்கது . நாங்கள் சரியாக / நியாமாக ஒரு விஷயத்தில் இரு பக்கமும் செய்தியை முக்கியத்துவம் தருகிறோமோ என்று எங்களை தொடர்ந்து கண்காணித்து வழிநடத்த வேண்டுகிறோம் .. நன்றி - ஸ்பெஷல் கரெஸ்பாண்டெண்ட் - ஸ்பெல்க்கோ மீடியா ஆசிரியர் குழு