புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் என்னும் இயற்கை எரிவாயு எடுக்க பிப்ரவரி 15 ந் தேதி மத்திய அமைச்சரவை ஒப்பதல் அளித்தது. பிப்ரவரி 16ந் தேதி முதல் நெடுவாசல் கிராமத்தில் பொதுமக்கள் தொடர் போராட்டத்தை தொடங்கி நடத்தினார்கள்.

22 நாட்கள் நடந்த போராட்டத்தை மத்திய மாநில அமைச்சர்கள் போராட்ட களத்திற்கே வந்து நெடுவாசல் திட்டம் வராது என்று கூறினார்கள். மாவட்ட ஆட்சியர் கணேஷ் இந்த திட்டத்திற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்காது என்று உறுதிமொழி பத்திரம் வழங்கினார்

Special Correspondent

அதனால் 22 நாளில் போராட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. ஆனால் மார்ச் 22ந் தேதி மத்திய அமைச்சரவை நெடுவாசல் உள்ளிட்ட 31 திட்டங்களுக்கும் ஒப்பந்த நிறுவனத்திடம் கையெழுத்திட்டதால் விவசாயிகள் அதிர்ச்சியடைந்தனர்.

அதனால் பலகட்ட ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்ட நிலையில் இன்று 15ந் தேதி நெடுவாசலை சுற்றியுள்ள 70 கிராமங்களை உள்ளடக்கிய போராட்டக்குழு அமைத்து பிறகு வெவ்வேறு வடிவங்களில் போராட்டங்கள் நடத்த முடிவெடுத்தனர்.

ஆனால் இந்த அறிவிப்பிற்கு பிறகு நெடுவாசல் மீட்புக்குழு இளைஞர்கள் 12 ந் தேதியே 2 வது கட்ட போராட்டத்தை நெடுவாசல் நாடியம்மன் கோயில் திடலில் தொடங்கிவிட்டனர். இந்த நிலையில் 12 ந் தேதி தொடங்கிய அறப்போராட்டம் தொடர்ந்து அமைதியான வழியில் 4 வது நாளாக நடக்கிறது. போராட்டத்தில் இளைஞர்கள், பெண்கள், மாணவர்கள், குழந்தைகள் ஏராளமாக கலந்து கொள்கின்றனர்.

மத்திய அரசு நெடுவாசல் திட்டம் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கும் வரை போராட்டம் தொடரும் என்றனர் போராட்டக் குழுவினர். ஏற்கனவே விவசாயிகள் டெல்லியில் நடத்தி வரும் போராட்டம் மற்றும் சென்னை கத்திப்பாரா பூட்டு போராட்டம் மற்றும் மாணவர்கள் கைது தொடர்ந்து இந்த போராட்டமும் ஆர்மபித்து உள்ளதால் ஜல்லிக்கட்டு எழுச்சி போராட்டம் போல நடந்து விடாமல் மாணவர்களை ஒன்று சேர விடாமல் அணைத்து பாதுகாப்பு முன்னேற்பாடு நடவடிக்கை உளவு துறை மூலம் எடுக்கப்பட்டு வருவதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

உங்கள் அறிவுறுத்தல் மற்றும் பின்னுட்டம் எங்களுக்கு மிகவும் பயன் தரத்தக்கது . நாங்கள் சரியாக / நியாமாக ஒரு விஷயத்தில் இரு பக்கமும் செய்தியை முக்கியத்துவம் தருகிறோமோ என்று எங்களை தொடர்ந்து கண்காணித்து வழிநடத்த வேண்டுகிறோம் .. நன்றி - ஸ்பெஷல் கரெஸ்பாண்டெண்ட் - ஸ்பெல்க்கோ மீடியா ஆசிரியர் குழு