நெய்வேலி நகரியம் உள்ள இடத்திலிருந்து சுமார் 7 கி.மீ தூரம் தெற்கில் தான் உண்மையான நெய்வேலி கிராமம் இருந்தது. அங்கு வாழ்ந்த ஜம்புலிங்க முதலியார் என்பவர் 1935 ல் தன் நிலத்தில் ஆழ்துளை கிணறு தோண்டினார். கிணற்றிலிருந்து கருமையான பொருள் வெளிப்பட்டது.அதை அரசுக்கு அனுப்பி வைத்தார். அரசு அதனை ஆய்விற்கு அனுப்பியது.

முடிவு-பழுப்பு நிலக்கரி என முடிவு கிடைத்தது. அரசு நெய்வேலியை சுற்றிலும் உள்ள இடங்களில் ஆய்வு செய்து நிலத்தடியில் ஏராளமான நிலக்கரி படிவங்கள் இருப்பதை உறுதி செய்தது. மத்திய அரசு 1956 ல் நிலக்கரியைத் தோண்டி எடுத்து மின்சாரம் தயாரிக்க என்.எல்.சி நிறுவன அமைப்பை ஏற்படுத்தியது. இது ஒரு பொதுத்துறை நிறுவனமாகும். நெய்வேலி கிராமத்தில் முதன் முதலில் பழுப்பு நிலக்கரி கண்டுபிடிக்கப்பட்டதால் நிறுவனத்திற்கு நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் என பெயர் சூட்டியது.

Special Correspondent

நிலக்கரி வெட்டி எடுக்கவும் என்.எல்.சி நிறுவனத்தில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு குடியிருப்புகள் கட்டவும் அலுவலகங்கள் கட்டவும் கீழ்க்கண்ட 22 கிராமங்கள் வெளியேற்றப்பட்டன.

1.வெள்ளையங்குப்பம்
2.பெருமாத்தூர்
3.வேலுடையான்பட்டு
4.கூரைபேட்டை
5.வெண்ணெய்குழி
6.தாண்டவங்குப்பம்
7.நெய்வேலி
8.கெங்கைகொண்டான்
9.பாப்பனம்பட்டு
10.வேப்பங்குறிச்சி
11.தெற்கு வெள்ளூர்
12.வடக்கு வெள்ளூர்
13.மூலக்குப்பம்
14.காரக்குப்பம்
15.ஆதண்டார்கொல்லை
16.மந்தாரக்குப்பம்
17.சாணாரப்பேட்டை
18.அத்திபட்டு
19.வினை சமுட்டிக்குப்பம்
20.தெற்கு மேலூர்
21.இளவரசன் பட்டு
22.விளாங்குளம்
23.நொடுத்தாங்குப்பம்

வெளியேற்றப்பட்ட கிராம மக்களுக்கு விருத்தாசலத்திற்கு வடக்கில் உள்ள விஜயமா நகரம் என்ற ஊரில் மனைகள் வழங்கப்பட்டன.இப்படியாக 22 கிராமத்தை காலி செய்து உருவான இடத்தில் ஐம்பதுக்கும் மேலான ஆண்டுகள் நிலக்கரி தோண்டிய நிலையில் 19-04-17 அன்று தோண்டிய போது பண்டைய காலத்தின் கிடைத்த பழமை வாய்ந்த ஆறு சுரங்க பாதை வெளிப்பட்டுள்ளது.

நிலக்கரி என்பது இயற்கை சீற்றங்களில் சிக்கிய மரங்கள் மற்றும் கழிவுகளில் இருந்து கிடைக்க பெறுவதாகவும் இது நிலக்கரியாக உருமாற சுமார் 1200 ~ 2500 வருடங்கள் ஆகும் என்றும் அறிவியல் நமக்கு சொல்லி தருகிறது.

அதனால் நிலக்கரி தோண்டும் பணியில் வெளிப்பட்டுள்ள இந்த ஆறு சுரங்கங்கள் தோராயமாக 2500 வருடங்கள் பழமை வாய்ந்ததாக இருக்கும் என்றும் இந்த சுரங்கங்களில் மரங்கள் மற்றும் சுடுமணல் கற்க்கள் உள்ளதாகவும் ஒரு மீட்டர் அகலத்தில் உள்ள இதில் செங்கற்கற்களால் அடுக்கப்பட்டு மரப்பலகைகள் இணைக்கப்பட்டுள்ளன. இந்த சுரங்கமானது பூமியை நோக்கி பல அடிக்கு நீண்டு தண்ணீரில் மூழ்கி செல்வதாகவும் உள்ளதாக அங்கு இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன .

இப்படி கண்டுபிடிக்கப்பட்ட இடத்தில் மேலும் அகழ்ந்து நெய்வேலி நிறுவனம் சுரங்கத்தை அழித்து விடாமல் தொல்லியல் நிறுவனம் இந்த இடத்தை கைப்பற்றி இதனை ஆராய்ந்து தமிழர் பண்டைய சமூக வரலாறை கண்டு பிடித்து தர வேண்டும் என்று அங்கு வேலையில் இருந்த சுரங்க தொழிலாளர்கள் தெரிவித்தனர் ..

உங்கள் அறிவுறுத்தல் மற்றும் பின்னுட்டம் எங்களுக்கு மிகவும் பயன் தரத்தக்கது . நாங்கள் சரியாக / நியாமாக ஒரு விஷயத்தில் இரு பக்கமும் செய்தியை முக்கியத்துவம் தருகிறோமோ என்று எங்களை தொடர்ந்து கண்காணித்து வழிநடத்த வேண்டுகிறோம் .. நன்றி - ஸ்பெஷல் கரெஸ்பாண்டெண்ட் - ஸ்பெல்க்கோ மீடியா ஆசிரியர் குழு