ஜனவரி 2ஆம் நாள் 2017 அனைத்து பத்திரிகையும் வெளிட்ட செய்தி சுருக்கம்:

அய்யாபுரம் குளத்தில் ஆடுகள் தண்ணீர் குடித்துக் கொண்டு இருந்தன. அடுத்த சில நிமிடங்களில் அடுத்தடுத்து 16 ஆடுகள் குளத்தின் கரையில் மயங்கி விழுந்து பரிதாபமாக செத்தன. இதுகுறித்து அய்யாபுரம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

இன்று நெல்லை மாவட்டத்தின் செங்கோட்டை வட்டத்தில் வரும், அய்யாபுரம் குளம் தொடங்கி மேற்கே கேரள பார்டர் வரையிலான புளியரை வரை சுமார் 17 கி.மீ. தொலைவு கண்ணில் தெரியும் மனித சதைகள், மனித உறுப்புகளின் கழிவுகள். தமிழக, கேரள மாநிலங்களின் சுங்கச் சோதனை, வணிகவரி, போலீஸ் செக் போஸ்ட்கள் உள்ளன. இத்தனை கண்காணிப்பையும் தாண்டி அய்யாபுரம் குளத்திலிருந்து ஆரம்பிக்கிறது சமூக சூழ்நிலை உச்ச கட்ட அவலம்.

குளத்தின் நீண்ட கரை பக்கம் மூட்டை மூட்டையாக பிளாஸ்டிக் சாக்குகள் பரவலாக வீசப்பட்டுக்கிடக்கின்றன. அவற்றின் உள்ளே பாலீதீன் கவர்களால் பேக் செய்யப்பட்ட கழிவுகளைக் கொண்ட பேக்கிங்குகள். அவை அத்தனையும் கெமிக்கல்கள். வெயிலின் தாக்கம், தட்ப வெட்ப சூழல் காரணமாக அந்தப் பேக்கிங்குகளிலுள்ளவைகளில் காய்ந்து போன ஜவ்வு போன்ற பாகங்கள். வெளியே வந்து விடாதபடி நீட்டாக மருத்துவ முறையிலான பேக்கிங் செய்யப்பட்ட அவைகளில் தங்களையும் மறந்து மருத்துவ அடையாளங்களை தெரிகிறது.

Special Correspondent

கிளறியதில். LECHE ENTERG, GORDO. ALTEZA, என்ற மெடிக்கல் அட்டைக் குறிப்புகளுமிருந்ததைக் காணமுடிந்தது. வறட்சிகாரணமாக தண்ணீரில்லாத ஆள் நடமாட்டமில்லாத பெரியகுளத்தின் கண்மாயின் இரு புறங்களிலும் இப்படிக் கடாசப்பட்ட கழிவு மூட்டைகள் விரவிக்கிடந்தன. அண்டை மாநிலமான கேரளாவின் தனியார் மருத்துவமனைகளில் ஆபரேஷன் மூலமாக அறுத்தெடுக்கப்படும் மனித சதைகள், மனித உறுப்புகளின் கழிவுகள் தான் இவைகள்.

அங்குள்ள மருத்துவமனைகளிலிருந்து சேகரிக்கப்பட்ட கழிவு உறுப்புகளடங்கிய பேக்கிங்குகள் தான் இவைகள் என்று சொல்லி நம்மை அதிரவைத்தனர் அந்தப் பகுதி மக்கள்.

“இன்று நேற்றல்ல தொடர்ந்து இந்த அநியாயம் நடக்கிறது., பல சமயங்களில் இதிலிருந்து குடலைப் பிடுங்கும் நாற்றம் வீசும்” என அந்தப் பகுதியை சேர்ந்தவர்கள் தெரிவித்தனர்.

மேலும் வீசப்பட்ட மூட்டைகளின் மீது வெட்டப்பட்ட வேலி முட்களைப் போட்டு மூடியிருந்ததை நாம் பார்த்த போது, ரத்தச் சதையோடு வீசப்பட்டவைகளை மோப்ப வாசனை காரணமாக நாய்கள் கிளறித் தின்று விடக் கூடாது என்பதற்காக அப்படி வேலி முட்களைப் போட்டிருக்கிறார்கள். “அந்தக் கழிவு உறுப்புகளைத் தின்றால் நாய்களுக்கு வெறி ஏறிவிடுமே. வெயிலில் காய்ந்து விட்டால் அந்தப் பக்கம் நாய்கள் எட்டிப் பார்க்காது என்பதற்காகத்தான் அப்படி” என்றார் அந்த நண்பர்.

இங்கிருந்து தமிழக எல்லை முடியும் எஸ் பெண்ட்டு கடந்து கோட்டைவாசல் வரையிலான மலைப்புற தேசிய நெடுஞ்சாலையின் இரு புறங்களிலும் இது போன்ற கழிவு மூட்டைகள் வீசப்பட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்த புகார்களை காவல் துறையும் அப்பகுதி எம்பி, எம் எல் ஏ கவனத்தில் கொண்டு சென்றும் கண்டு கொண்டதாகவே தெரியவில்லை என்றும் குற்றம் சாட்டுகிறார்கள்.

ஆடுகள் மரணத்திற்கும் மனித கழிவுகள் சம்பந்தம் இருக்கும் என்ற கோணத்தில் போலீசார் ஆராய்வதை தடுக்கும் சக்தி எது?!

உங்கள் அறிவுறுத்தல் மற்றும் பின்னுட்டம் எங்களுக்கு மிகவும் பயன் தரத்தக்கது . நாங்கள் சரியாக / நியாமாக ஒரு விஷயத்தில் இரு பக்கமும் செய்தியை முக்கியத்துவம் தருகிறோமோ என்று எங்களை தொடர்ந்து கண்காணித்து வழிநடத்த வேண்டுகிறோம் .. நன்றி - ஸ்பெஷல் கரெஸ்பாண்டெண்ட் - ஸ்பெல்க்கோ மீடியா ஆசிரியர் குழு