நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக போராடும் மக்கள் தெரிவித்தவை :

‘ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக நாங்கள் கடந்த 28 நாட்களாக இரண்டாம் கட்டமாக போராடி வருகிறோம். முதற்கட்டமாக இத்திட்டத்திற்கு எதிராக நாங்கள் போராடிய போது மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், மாநில அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் எங்கள் பகுதிக்கு இத்திட்டம் வராது என்று உறுதியளித்ததன் காரணமாக 22 நாள் போராட்டத்தை கைவிட்டோம். இந்நிலையில் தற்போது ஜெம் நிறுவனத்துடன் மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது.

Special Correspondent

இதற்கெல்லாம் காரணம் பிரதமர் நரேந்திரமோடி தான். அதனால் தான் நாங்கள் மோடியை தொட்டில் குழந்தையாக சித்தரித்து நம்மாழ்வர் இத்திட்டத்தை ரத்து செய்ய மனு கொடுப்பது போன்ற நூதன போராட்டத்தில் ஈடுபட்டோம். மத்திய, மாநில அரசுகள் இத்திட்டத்தை நிறைவேற்ற துடித்தால் நாங்கள் இதைவிட பெரிய போராட்டங்களை நடத்த தயாராக உள்ளோம்’ என்றனர்.

புதுக்கோட்டை மாவட்டம், நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக மக்கள் 2-ம் கட்ட போராட்டத்தை கடந்த 12-ம் தேதி துவக்கினர். இதில் நெடுவாசல் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து பொதுமக்கள் ஏராளமானோர் கலந்த வண்ணம் உள்ளனர்.

மத்திய மாநில அரசுகள் ஒரு முடிவை அறிவிக்காமல் பிரச்சனை யை வளர்த்து கொண்டே வருகிறது.. இதன் காரணமாக போராட்டம் ஒரு முடிவுக்கு வராமல் தொடர்ந்து நடக்கிறது.

உங்கள் அறிவுறுத்தல் மற்றும் பின்னுட்டம் எங்களுக்கு மிகவும் பயன் தரத்தக்கது . நாங்கள் சரியாக / நியாமாக ஒரு விஷயத்தில் இரு பக்கமும் செய்தியை முக்கியத்துவம் தருகிறோமோ என்று எங்களை தொடர்ந்து கண்காணித்து வழிநடத்த வேண்டுகிறோம் .. நன்றி - ஸ்பெஷல் கரெஸ்பாண்டெண்ட் - ஸ்பெல்க்கோ மீடியா ஆசிரியர் குழு