நிறத்தாலும், மணத்தாலும், சுவையாலும் வெற்றிலை மூன்று வகையாகப் பிரித்து அறியப்படுகிறது. குறைந்த மணமும் சற்று வெளிர் நிறமும், மிதமான காரச்சுவை உடையதையே பொதுவாக ‘வெற்றிலை’ என்று அழைக்கிறோம்.

இதுதவிர்த்து சற்று கருமை நிறமும் மிகுந்த காரமும் உடையதை ‘கம்மாறு வெற்றிலை’ என்றும், சிறிது கற்பூர மணமும் நடுத்தர காரமும் உடையதை ‘கற்பூர வெற்றிலை' என்றும் அழைக்கிறோம்.

வெற்றிலையில் அடங்கியுள்ள சத்துக்கள்:

நீர்ச்சத்து - 90%,
புரதச்சத்து - 3.5%,
கொழுப்புச்சத்து - 1.9%,
தாது உப்பு - 3.3%,
நார்ச்சத்து - 2.3%,
பச்சையம் - 0.25%,
மாவுச்சத்து - 6.10%,
நிகோடினிக் அமிலம் - 0.89 மி.கி./100 மி.கி.,
வைட்டமின் சி - 0.01,
வைட்டமின் ஏ - 2.9 மி.கி.,
தயாமின் - 10 கி/100கி,
ரிபோஃப்ளேவின் - 100 கிராம்,
நைட்ரஜன் - 7.0%,
பாஸ்பரஸ் - 0.6%,
பொட்டாசியம் - 4.6%,
கால்சியம் - 0.2%,
சத்தூட்டம் - 44 கலோரி/100 கிராம்,
இரும்புச்சத்து - 0.007%,
டானின் என்னும் நிறமி - 1.3%
என ஒரு மருத்துவ சாலையையே உள்ளடக்கியுள்ளது வெற்றிலை.

Special Correspondent

6 வெற்றிலையோடு சிறிது சுண்ணாம்பும் சிறிது பாக்கும் சேர்த்து மெல்வதால் கிடைக்கும் சத்து, 300 மி.லி. பாலில் இருந்து கிடைக்கும் சத்துக்கு இணையானதாகும்.

தாம்பூலம் தரிப்பதால் ஈறுகளினின்று ரத்தம் கசிவது நின்றுவிடும். வெற்றிலையை வேக வைத்து நசுக்கி ஈறுகளின்மேல் தேய்ப்பதால் ஈறுகளின் ரத்தக்கசிவு நிற்பதுடன் பற்கள் கெட்டிப்படும்.

வெற்றிலையை நசுக்கி வலியுள்ள முகப்பருக்கள் மீதும் மூட்டுக்கள் வீக்கமுற்று வலிக்கிறபோதும் மேல் பற்றாகப் போட விரையில் வீக்கமும் வலியும் குறைந்து நலம் உண்டாகும்.

ஐயம் என்னும் சீதள நோய்களை வெற்றிலை போக்கும்.

காதின் உள்பகுதி மற்றும் கழுத்துப் பகுதியில் வீக்கம் கண்டு மிக்க வேதனை தரும் சயித்தியம் என்னும் நோய் வெற்றிலையால் குணமாகும்.

மேலும் உடலில் சுருங்கி விரியும் தன்மையுடைய உறுப்புக் களை ஒழுங்காக செயல்பட வைக்கும் குணமும், காயங்களையும் புண்களையும் சீழ்பிடிக்காமல் ஆற்றக்கூடிய திறனும் வெற்றிலைக்கு உண்டு.

Special Correspondent

மேலும், வண்டுக்கடி முதலான விஷக்கடிகள் அத்தனையும் வெற்றிலையை உள்ளுக்குக் கொடுத்து மேலுக்கும் தடவுவதால் குணமாகும். வாத, பித்த, சிலேத்துமங்களால் வருகிற அனைத்து முத்தோஷ நோய்களும் வெற்றிலையால் போகும்.

வெற்றிலையை நீரிலிட்டுக் கொதிக்க வைப்பதால் ஒருவிதமான நறுமணமுடைய எண்ணெய் கிடைக்கும். இந்த எண்ணெயை சேமித்து வைத்து உபயோகப்படுத்துவதால் விட்டுவிட்டு முறையாக வலிக்கிற கடும் வயிற்றுவலி குணமாகும்.

இந்த எண்ணெயை மேல் பூச்சாகப் பூசுவதால் புண்கள் சீழ் பிடிக்காமல் சீக்கிரத்தில் ஆறிவிடும். உள்ளுக்கு சில துளிகள் சாப்பிடுவதால் சுவாச நாளங்களைப் பற்றிய சளி, இருமல், மூக்கொழுக்கு ஆகிய நோய்கள் குணமாகும்.

வெற்றிலைக்கொடியில் வளரும் காய்கள் வயிற்றுக் கோளாறுகளைப் போக்கக்கூடியது.

வெற்றிலையை நீரிலிட்டுக் கொதிக்க வைப்பதால் ஒருவிதமான நறுமணமுடைய எண்ணெய் கிடைக்கும். இந்த எண்ணெயை சேமித்து வைத்து உபயோகப்படுத்துவதால் விட்டுவிட்டு முறையாக வலிக்கிற கடும் வயிற்றுவலி குணமாகும்.

இந்த எண்ணெயை மேல் பூச்சாகப் பூசுவதால் புண்கள் சீழ் பிடிக்காமல் சீக்கிரத்தில் ஆறிவிடும். உள்ளுக்கு சில துளிகள் சாப்பிடுவதால் சுவாச நாளங்களைப் பற்றிய சளி, இருமல், மூக்கொழுக்கு ஆகிய நோய்கள் குணமாகும்.

வெற்றிலைக்கொடியில் வளரும் காய்கள் வயிற்றுக் கோளாறுகளைப் போக்கக்கூடியது.

மரத்தின் மீது ஏறி படரும் கொடியான வெற்றிலையை அகத்திக்கீரையோடு ஊடு பயிராகப் பயிரிடுவது நம்மவர்களின் வழக்கம். வெற்றிலையின் தாவரப்பெயர் Piper betle என்பதாகும். ஆங்கிலத்தில் Betel pepper என்பர். தாம்பூலம், நாகவல்லி, நாகினி, தாம்பூலவல்லி, சப்த ஷீரா, புஜங்கலதா என்று வடமொழியில் பல்வேறு பெயர்களை வெற்றிலை பெற்றுள்ளது.

தமிழில் வெள்ளிலை, மெல்லிலை, மெல்லடகு என்று குறிப்பிடுவதுண்டு. ஒரு பொருளின் பெயரிலேயே அதன் தன்மையைப் பொதிந்து வைப்பது தமிழர்கள் வழக்கம். அந்த வகையில் சிறுவர் முதல் பெரியவர் வரை பயன்படுத்தத்தக்க சிறந்த மூலிகை யான வெற்றிலைக்கும் சுவாரஸ்யமான காரணத்தால்தான் பெயர் வைத்திருப்பார்கள் என்று யூகிக்க முடியும்.

எத்தனையோ தாவரங்களின் இலைகள் உலகில் இருப்பினும், அத்தனையையும் தன் முக்கியத்துவத்தால் பின்னுக்குத்தள்ளிவிட்டு தான் முன்னின்று வெற்றி பெறுவதால் இதற்கு வெற்றி + இலை என்று பெயர் சூட்டியுள்ளார்கள் என்று புரிந்துகொள்ளும் அளவு மகத்தான பலன்கள் கொண்டது வெற்றிலை.

கருத்தாக்கம் : சித்த மருத்துவர் சக்தி சுப்பிரமணியன். இதன் தொடர்ச்சி அடுத்த பதிவில் அடுத்த வாரம் வரும்.

உங்கள் அறிவுறுத்தல் மற்றும் பின்னுட்டம் எங்களுக்கு மிகவும் பயன் தரத்தக்கது . நாங்கள் சரியாக / நியாமாக ஒரு விஷயத்தில் இரு பக்கமும் செய்தியை முக்கியத்துவம் தருகிறோமோ என்று எங்களை தொடர்ந்து கண்காணித்து வழிநடத்த வேண்டுகிறோம் .. நன்றி - ஸ்பெஷல் கரெஸ்பாண்டெண்ட் - ஸ்பெல்க்கோ மீடியா ஆசிரியர் குழு