பொங்கல் விடுமுறை அரசு விடுமுறையாக்கி மத்திய அரசு ஏன் தேர்ந்து எடுக்கவில்லை

இந்த 2017 ஆண்டில் அது உள்ளதா என்றால் இரண்டாம் அட்டவணையில் நிச்சயமாக உள்ளது ..ஆனால் அதனை மத்திய அரசு விடுமுறையாக தேர்ந்து எடுக்கவில்லை    

பதிவை பகிர

முதலில் உள்ள 14 தினங்கள் கொண்ட பட்டியல், கட்டாயம் விடுமுறை விட்டே ஆக வேண்டியவை. Gazetted Holidays அல்லது Compulsory Holidays எனக் கூறுகிறார்கள். சாய்ஸில் விட முடியாது. அதில் தான் பொங்கலைக் காணோம் என்று தற்போது தேடுகிறார்கள் என்று தலைமை செய்தியாளர் தினதந்தி ரங்கராஜன் பாண்டே  உள்ளிட்ட RSS சார்பு  எண்ணம் கொண்டவர்கள் சொல்கிறார்களே ...

இந்திய அரசு பணியில்  தமிழ்நாட்டில்  பணிபுரியும் மத்திய ஊழியர்களுக்கு  Gazetted Holidays - Annexure I (14 days) மற்றும்  Holidays  Annexure II (3 days) என்று மொத்தமாக 17  நாட்கள் மத்திய அரசின் விடுமுறை நாட்களே ..

Gazetted Holidays அல்லது Compulsory 14 days Holidays சாய்ஸில் விட முடியாது. அதில் ரொம்ப காலமாக பொங்கல் விடுமுறை இல்லை உண்மை தான் ..

ஆனால் அந்த மூன்று நாட்கள் Annexure II சாய்ஸ் சென்ற ஆண்டு வரை பொங்கல் விடுமுறை உண்டு. அந்த மூன்று நாட்களில் இருந்த பொங்கல் விடுமுறை இந்த முறை மத்திய அரசில் உள்ளவர்கள் நீக்கி உள்ளனர் என்பது தான் அதிர்ச்சியான உண்மை.

sm 3.15

அந்த மூன்று நாட்கள் (Annexure II Holidays ) எப்படி தேர்ந்து எடுக்க வேண்டும் என்று பின்வரும் இந்த அரசாணை சொல்கிறது ..

//Refer : F.No 12/8/2016-JCA-2 dated 24/6/2016 by Ministry of Personnel, Public Grievances and Pension (Department of Personnel and TrainingJCA-2 section)3.1 Section says  Central Government Employees Welfare Coordination Committee in the State Capitals, if necessary, in consultation with Coordination Committees at other places in the State. The final list applicable uniformly to Central Government offices within the concerned State shan be notified accordingly and no change can be carried out thereafter. It is also clarified that no change is permissible in regard to festivals and dates as indicate.//

இந்தியாவில் உள்ள மாநில குழு இரண்டாம் அட்டவணையில் உள்ள 20 நாட்களில் மூன்று நாட்களை மட்டும் கூடி முடிவு எடுக்கும் என்றும்., அதில் Annexure II holidays உள்ள அந்த மூன்று நாட்களைத் தீர்மானித்து ஒரு முறை முடிவு எடுத்து விட்டால் அதனை மாற்ற முடியாது என்றும் சொல்கிறது மத்திய அரசின் ஆணை ..

சென்ற 2016  வருடம் வரை பொங்கல் விடுமுறையை அந்த மூன்றில் ஒரு நாளாக தேர்ந்து எடுத்த மத்திய அரசு குழு இந்த முறை செய்தது என்ன? 2017 ஆண்டில் தேர்ந்து எடுத்த அந்த மூன்று நாட்கள் எவை? :

14-வது விடுமுறை தினம் சிவராத்திரியும் (24.2.17) ,

15-வது விடுமுறை தினம் விநாயகர்சதுர்த்தியும்(25.8.17)

17-வது விடுமுறை தினம் நவராத்திரியும்(28.9.17)

என முடிவு செய்யப்பட்டிருக்கிறது

ஆனால் அந்த மூன்று நாட்களில் பொங்கல் விடுமுறை அரசு விடுமுறையாக்கி மத்திய அரசு ஏன் தேர்ந்து எடுக்கவில்லை  என்பதே கேள்வி .. 2016 வரை தமிழர்கள் பண்பாடு கலாச்சாரம் கொண்ட பொங்கல் விடுமுறை. இப்போது 2017 ஆண்டில் எங்கே போனது என்றால் அது விவேகானந்தர் குறுக்கு சந்து துபாயில் இருக்கிறது என்கிறார்கள் மத்திய சர்க்கார். மற்றும் அதற்கு வால் பிடித்து வண்ணம் தீட்டுவோர்..

Special Correspondent

இதில் தங்களது தொடர் தமிழர் எதிர்ப்பு செய்கையால் ., எதிர்ப்பு வலுத்து வருவதால் கீழே விழுந்தும் மீசையில் மண் ஒட்டவில்லை என்கிற திட்டமிட்டு திசை திருப்பும் முயற்சியே...மேற்சொன்ன Gazetted Holidays என்கிற பதிலில் மறைந்துள்ள பொய்கள்

விடுமுறை இல்லை என்றால்  இல்லை 2017 பொங்கல் சனிக்கிழமை-ல் வருகிறது அதனால் விடுபட்டு விடுகிறது என்று ஜல்ஜால்பு கூறி தப்பித்து ஓடிட முடியாது காரணம் .. இதே 2017 வருடம் இதே மத்திய அரசு அறிவித்த விடுமுறை இதோ :

1) மஹாவீர் ஜெயந்தி (9.4.17) - ஞாயிற்றுக்கிழமை

2) பக்ரீத் (2.9.17) - சனிக்கிழமை

3) விஜயதசமி (30.9.17)- சனிக்கிழமை

இந்த வருடம் பொங்கலை விடுமுறையை  விடுத்தது ஏன் என்ற  கேள்விக்கு பதில் சொல்லாமல் 2011-ல் இருந்தே Gazetted Holidays (14 days)  இருந்து பொங்கல் இல்லை கேசரி இல்லை என்று சொல்வது எப்படி என்றால் ..

சீதையை இரண்டாம் முறையாக ஏன் காட்டுக்கு அனுப்பினீர்கள் என்ற கேள்விக்கு அவர் முதல் முறையே சென்று விட்டாரே என்று சொல்வது போல உள்ளது ..

முதல் முறை சீதை காட்டுக்கு சென்றது  Annexure II Holidays (3 days)  என்ற ராமனுடன்  ., சீதை ஆரண்ய கண்டத்தில் அந்த  நாட்களில் அயோத்தில் இருந்ததை விட ராமனுடன்  மகிழ்ந்து இருந்தார்  என்கிறது ராமாயணம்.    அது போல சென்ற வருடம் 2016 வரை பொங்கல் விடுமுறை இருந்தது மாநிலங்களில் உள்ள மத்திய அரசு ஊழியர்கள் நலக்குழு மத்திய அரசின் Annexure II holidays (3days)  ஆணைப்படி..

கருவுற்ற சீதையை தனியாக கானகம் அனுப்பிய மாதிரி .,  இந்த  முறை பொங்கலை அதன் விடுமுறையை  ஆரணியம் அனுப்பி விட்டீர்கள்..

ஜல்லிக்கட்டு , காவேரி,  முல்லைபெரியாறு , 95 லட்சம் தமிழர்கள் வேலையின்மை  , AIMS மருத்துவ கல்லூரி மறுப்பு , நீட்ஸ் மாணவர் சேர்க்கை , நூற்றுக்கு மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை  பிரச்சனையை சுமந்து இருக்கும் தமிழகத்தின் பிறந்த வீடாம் பொங்கலை விடுமுறை  கூட கொண்டாட விடாமல்  ஏன் துரத்தி விட்டீர்கள்..

செல்லா காசு பிரச்சனை உள்ளிட்ட  பிரச்சனைகள்  தீர்க்க மனமில்லாமல் மேன்மேலும் பிரச்சனை கொடுத்து   வளர்த்து குளிர் காய ஆசைப்படுகிறது மோடி தலைமையில் உள்ள மத்திய சர்க்கார் என்றால் ..

இது தான் நீங்கள் ஆட்சி செய்யும் லட்சணமா ., இது தான் நீங்கள் பரமபரியம் காக்கும் லட்சணமா .,  இது தான் நீங்கள் பண்பாடு காக்கும் லட்சணமா என்று ஒவ்வொரு தமிழ் பேசும் மனதும் உங்கள் மனசாட்சியை விடாமல் கேள்விகளை கேட்டு கொண்டே இருக்கும் .. 

நீங்கள் செலவழித்த மணி துளிகளுக்கு நன்றி..


உங்கள் அறிவுறுத்தல் மற்றும் பின்னுட்டம் எங்களுக்கு மிகவும் பயன் தரத்தக்கது . நாங்கள் சரியாக / நியாமாக ஒரு விஷயத்தில் இரு பக்கமும் செய்தியை முக்கியத்துவம் தருகிறோமோ என்று எங்களை தொடர்ந்து கண்காணித்து வழிநடத்த வேண்டுகிறோம் .. நன்றி - ஸ்பெஷல் கரெஸ்பாண்டெண்ட் - ஸ்பெல்க்கோ மீடியா ஆசிரியர் குழு

பதிவை பகிர

கட்டுரை ஆசிரியரைப்பற்றி

ச.வெ.ரா  

Follow on

பயன்பட்டு அறிவியல் தியாயகராஜர் பொறியியல் கல்லூரில் முடித்து பின்னர் ., சர்வதேச வர்த்தக மேல்படிப்பு PGDFTM முடித்து ., அதன் பின்னர் சென்னை பல்கலைக்கழகத்தில் MBA - Distinction பெற்றார் .. சில காலம் அயல் நாட்டில் உழைத்து பின்னர் சொந்தமாக தொழில் தொடங்கி ., எழுதும் ஆர்வத்தின் காரணமாக எழுத தொடங்கி நண்பர்கள் அறிவுரையால் ., splco.me சமூக வலைதள தொடர்பகம் நிறுவினார்
இலங்கை தமிழர் பிரச்சனை காரணமாக இரண்டு வருடம் வகித்த பொருளாளர் பதவியை 2009 ஆம் ஆண்டு Indian Asean Srilanka Chamber of Commerce ல் இருந்து விலகினார்.
திரு சைலேஷ் காந்தி - Information Commisioner (மகாத்மா காந்தி பேரன்) அவர்களுடன் புது டெல்லியில் நியாத்தை வாதிட்டு under Section 8(1)(h) of RTI தகவல் பெரும் உரிமையை பெற்றார் ..
படிப்பதும் , மீன் வளர்ப்பும் ,இயற்கை வேளாண்மையும் இவருக்கு பிடித்தவைகள்...

பின்னுட்டம்

பின்னுட்டம் இடுக


உங்கள் தகவல் பாதுகாப்பாக வைக்கப்படும் Privacy Policy.