மெரினாவில் போராட்டத்தை தொடரும் இளைஞர்கள் வைக்கும் நான்கு அம்ச கோரிக்கைகள்

சட்டத்திருத்ததை 9வது அட்டவணையில் சேர்க்க வேண்டும் என்பதுதான் எங்களது முதன்மையான கோரிக்கையாகும்    

பதிவை பகிர

முதல் அமைச்சர் உறுதி அளித்தால் போராட்டம் கைவிடப்படும் என்று சென்னை மெரினாவில் போராட்டத்தை தொடரும் இளைஞர்கள் தெரிவித்துள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சார்பில் செய்தியாளர்களை சந்தித்த வழக்கறிஞர் ஜான் கார்த்திக் தெரிவித்தவை :

நாங்கள் மீனவ மக்களின் உறுதுணையோடு மிகவும் கட்டுக்கோப்பாக இருக்கிறோம் , கலைந்து செல்லவில்லை செல்ல மாட்டோம்.

sm 3.15

ஜல்லிக்கட்டுக்காக தமிழக அரசு செய்த சட்டத்திருத்தத்தை முழுமையான சட்டத்திருத்தமாக படவில்லை. பெரும்பாலானோர் அதனை ஏற்கவில்லை. இந்த சட்டத்திருத்ததை 9வது அட்டவணையில் சேர்க்க வேண்டும் என்பதுதான் எங்களது முதன்மையான கோரிக்கையாகும்.

இரண்டாவதாக, இந்த போராட்டத்தால் தமிழகம் முழுவதும் கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும். வழக்கு போட்டிருந்தால் உடனடியாக வாபஸ் பெற வேண்டும்.

Special Correspondent

மூன்றாவதாக, இந்த போராட்டத்தில் சேலம் உள்ளிட்ட பகுதிகளில் சிலர் உயிரிழந்துள்ளனர். அவர்களின் குடும்பத்தினருக்கு தேவையான இழப்பீட்டை அரசு வழங்க வேண்டும். அந்த குடும்பங்களைச் சேர்ந்தவர்களின் ஒருவருக்கு அரசு வேலை தர வேண்டும்.

இறுதியாக., 7 நாள் போராட்டத்திற்கு முழு ஒத்துழைப்பு அளித்த காவல்துறைக்கு நன்றி, ஆனால் 8வது நாள் அவர்கள் செய்த காரியம் மிகப்பெரிய மனவருத்ததை அளிக்கிறது. இதற்காக தடியடி நடத்திய காவல்துறை வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

மேலும் அங்குள்ள மெரினா மாணவர்கள் கூறுகையில் , தடிஅடியை அதுவும் பெண்கள் மீதும் கர்ப்பிணி பெண் மீதும் கண்மூடி தனமாக நிகழ்த்தியும் ., மாணவர்கள் தாங்கள் வைத்து இருந்த தண்ணீர் மற்றும் சாப்பாட்டை புடுங்கி சென்றது தமிழக காவல் துறை.

தடியடியில் தப்பித்த மெரினா மாணவ மாணவிகளுக்கு அரணாக மட்டும் நிற்கவில்லை மீனவ குப்பம் பெண்களும் ஆண்களும்., நிலம் வழியே எந்த ஒரு உதவியும் கடலில் இறங்கிய மாணவ மாணவிகளுக்கு தர கூடாது , தண்ணீர் கூட இல்லாமல் பட்டினி கிடந்தால் தானே வெளியே வருவார்கள் என்று மெரினா கடற்கரையை முழுவதும் தங்கள் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்து யாரையும் காவல்துறை உள்ளே அனுமதிக்காத நிலையில் ., நொச்சி குப்பத்தில் இருந்து படகின் மூலம் திறந்த வெளி கைதிகளாக அடைபட்டு அறவழியில் போராடி கொண்டு இருந்த சுமார் 3000 மாணவர்கள் அளவில் அங்கு உறுதியுடன் போராடி கொண்டு குழுமி இருந்த தங்களுக்கு கடல் வழியே சாப்பாடும் ., குடி தண்ணீரும் மீனவர்கள் வழங்கினார்கள் என்று மாணவ மாணவிகள் நன்றி பெருக்குடன் நெகிழ்வுடன் கண்ணீர் மல்க தெரிவித்தனர் .

உங்கள் அறிவுறுத்தல் மற்றும் பின்னுட்டம் எங்களுக்கு மிகவும் பயன் தரத்தக்கது . நாங்கள் சரியாக / நியாமாக ஒரு விஷயத்தில் இரு பக்கமும் செய்தியை முக்கியத்துவம் தருகிறோமோ என்று எங்களை தொடர்ந்து கண்காணித்து வழிநடத்த வேண்டுகிறோம் .. நன்றி - ஸ்பெஷல் கரெஸ்பாண்டெண்ட் - ஸ்பெல்க்கோ மீடியா ஆசிரியர் குழு

பதிவை பகிர

கட்டுரை ஆசிரியரைப்பற்றி

special correspondent  

Follow on

சமூகத்தின் மேம்பாடு வேண்டி திறந்த மனதுடன் உண்மையை தேடி விரும்பும் எழுத்தாளர்களின் சங்கம கூடலே splco.me . இது சமூக வலைதளத்தின் எழுத்தாளர்களின் கன்னி முயற்சியின் தொகுப்பு.

பின்னுட்டம்

பின்னுட்டம் இடுக


உங்கள் தகவல் பாதுகாப்பாக வைக்கப்படும் Privacy Policy.