உலகத்தில் அதிக விபத்துகள் நடக்கும் நாடாக இந்தியா

வாகனங்களின் எண்ணிக்கை 2¼ கோடியாகும். சுமார் 2 லட்சம் வர்த்தக வாகனங்கள் ஓடுகின்றன. இதில் 45 சதவீத விபத்துகளுக்கு காரணம் இந்த வர்த்தக வாகனங்கள் தான்.   

பதிவை பகிர

உலகத்தில் அதிக விபத்துகள் நடக்கும் நாடாக இந்தியா இருப்பது கவலை அளிக்கும் விஷயமாகும். அதிலும் இந்தியாவிலேயே அதிக விபத்துகள் நடக்கும் மாநிலம் தமிழ்நாடு என்று கணக்கெடுப்புகள் கூறுகின்றன என்று தேசிய சாலை பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினர் கமல் சோய் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் 7½ கோடி மக்கள் வசிக்கிறார்கள். அதில் வாகனங்களின் எண்ணிக்கை 2¼ கோடியாகும். சுமார் 2 லட்சம் வர்த்தக வாகனங்கள் ஓடுகின்றன. இதில் 45 சதவீத விபத்துகளுக்கு காரணம், இந்த வர்த்தக வாகனங்கள் தான். இவற்றை ஓட்டுபவர்களில் பெரும்பாலானோர் 10-ம் வகுப்பு கூட படிக்காதவர்கள். விபத்துகள் அதிகம் நடப்பதற்கு அதிக வேகமும், மது குடித்து விட்டு வாகனத்தை ஓட்டுவதும் தான் முக்கிய காரணங்கள் என்றும் தெரிவித்தார்.

sm 3.15

15 ஆண்டுகளுக்கு மேல் பயன்படுத்திய எந்த வாகனமும் ஓடத் தடை செய்ய வேண்டும். போக்குவரத்து விதிகளை போலீசார் அமல்படுத்தினாலே பல விபத்துக்களை தவிர்க்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார். எனவே 15 ஆண்டுகளுக்கு மேல் பயன்படுத்திய எந்த வாகனமும் ஓடத் தடை செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு செய்த பரிந்துரையை ஏற்றுக்கொண்டு அதற்கான வரைவு சட்ட மசோதாவை மத்திய அரசு தயாரித்து வருகிறது என்றும் தெரிவித்தார்.

மேலும் வாகனத்தை வேகமாக ஓட்டுவதும், மது அருந்திவிட்டு ஓட்டுவதும் கொலை குற்றமாக கருதி தண்டனை வழங்கினால், பயம் ஏற்பட்டு விபத்துகள் குறைய வாய்ப்பு இருக்கிறது என தெரிவித்தார். போக்குவரத்து விதிகளை போலீசார் அமல்படுத்தினாலே பல விபத்துக்களை தவிர்க்கலாம். ஆனால் போலீசார், வாகன ஓட்டிகளிடம் பிட் நோட்டீசு கொடுப்பது, ஹெல்மெட் போடச் சொல்வது போன்ற அறிவுரை வழங்கும் ஆசிரியப்பணியைச் செய்வது வீணானது.

அதனால் இதற்கு பதிலாக சாலைகளில் வேகத்தடைகளை போடுவது, ‘ஸ்பீட் கன்’ என்ற வாகன வேகத்தை காட்டும் கருவியை வைத்து அதிக வேகமாக போகும் வாகனங்களை பிடிப்பது ஆகிய நடவடிக்கைகளை எடுக்கலாம். இதில் வேகத்தடைகளை அனைத்து இடங்களிலும் போட முடியாது. அதிக லஞ்ச ஊழல் காரணமாக ‘ஸ்பீட் கன்’ நடவடிக்கையும் உபயோகம் இல்லாமல் போகும். எனவே சரியான ஒரே வழி வேகக்கட்டுப்பாடு கருவியை வர்த்தக வாகனங்களில் பொருத்துவது தான். 80 கி.மீ.க்கு மேலாக ஓட்ட முயற்சித்தால், என்ஜினுக்கு எரிபொருளை வரவிடாமல் தடுத்துவிடும் என்றும் அவர் தெரிவித்தார்.

உங்கள் அறிவுறுத்தல் மற்றும் பின்னுட்டம் எங்களுக்கு மிகவும் பயன் தரத்தக்கது . நாங்கள் சரியாக / நியாமாக ஒரு விஷயத்தில் இரு பக்கமும் செய்தியை முக்கியத்துவம் தருகிறோமோ என்று எங்களை தொடர்ந்து கண்காணித்து வழிநடத்த வேண்டுகிறோம் .. நன்றி - ஸ்பெஷல் கரெஸ்பாண்டெண்ட் - ஸ்பெல்க்கோ மீடியா ஆசிரியர் குழு

பதிவை பகிர

கட்டுரை ஆசிரியரைப்பற்றி

ஸ்பெஷல் கரெஸ்பாண்டெண்ட்

பின்பற்ற

சமூகத்தின் மேம்பாடு வேண்டி திறந்த மனதுடன் உண்மையை தேடி விரும்பும் எழுத்தாளர்களின் சங்கம கூடலே splco.me . இது சமூக வலைதளத்தின் எழுத்தாளர்களின் கன்னி முயற்சியின் தொகுப்பு.

பின்னுட்டம்

பின்னுட்டம் இடுக


உங்கள் தகவல் பாதுகாப்பாக வைக்கப்படும் தனியுரிமை கொள்கை.