ராஜிவ் கொலையும் சுப்ரமணிய சுவாமியும்

இதற்காக மட்டுமே தொடர்ந்து மூன்று நாட்கள் தவறாமல் அங்கு வந்து குறிப்பெடுத்தபடி இருந்த பிரியங்கா கண்களில் அனல் பறக்கும் கோபம்.   

பதிவை பகிர

திமுக தலைவர் கருணாநிதி 1980 களில் இலங்கை தமிழர் ஆதரவாக இந்திய அரசியல் சாசனம் சட்டம் எரித்து விட்ட காரணமாக எம்ஜி அர் அரசாங்கம் அவரை சிறையில் அடைத்தது. தண்டனையும் உறுதி செய்யப்பட்டு அன்றைய எதிர்க்கட்சி தலைவர் கருணாநிதி அவர்களுக்கு சிறைகைதி உடையும் வழங்கிய விஷயம் அப்போது மிகவும் சர்ச்சையாகி பேசப்பட்டது!

INDIAN PEACE KEEPING FORCE -IPKF (1986 and 1990 )

எம்ஜிஅர் இங்கு ஆட்சி செய்த காலத்தில் பிரபாகரனை தில்லியில் கிட்டதிட்ட கைதியாக வைத்து இந்திய இலங்கை அமைதி ஒப்பந்தம் செய்யபடுகிறது. கோபம் அடைந்த பிரபாகரன் இந்திய மண்ணில் இனி மேல கால் வைக்க மாட்டேன் என்று சொல்லிய பின்னர், ராஜீவ் ஆட்சியில் இந்திய ராணுவம் இலங்கை அனுப்பப்படுகிறது.

The IPKF suffered around 1,200 killed in action and several thousand wounded. The LTTE casualties assumed approximately 8000-11000 were killed and several thousand were injured.

அமைதிக்காக சென்ற இந்திய ராணுவம் பல ரத்தங்களை, வடுக்களை உருவாக்கிய பின்னர் பின்வாங்கப்படுகிறது., இதற்கு பின்னால் அன்றே விபி சிங் மத்திய சர்காரில் (2 December 1989 – 10 November 1990) அங்கம் வகித்த திமுக தான் காரணம் என்று ஊடகங்கள் எழுதின!!

sm 3.15

இந்திய ராணுவம் திரும்பி வருகிறது., இந்திய அரசு சட்டப்படி மாநில முதல்வர் இந்திய ராணுவத்தை வரவேற்க வேண்டும். ஆனால் மாநில முதல்வர் கருணாநிதி ராணுவத்தை வரவேற்க மறுத்து Indian Law Protocol மீறுகிறார். ராஜாங்க பிரச்சனைகள் அவரை சுற்றுகிறது. அப்போதைய ஜனதா கட்சி எம்பி சுப்பிரமணி சாமி, ராஜீவ் காந்தி , மற்றும் செல்வி ஜெயலலிதா அவர்கள் திமுக அரசை இதன் காரணமாக கலைக்க வேண்டும் என்று கோருகிறார்கள். இதனை முதல்வரிடம் நிருபர்கள் கேட்கும் போது யார் அந்த சுப்ரமணிய சாமி என்று பதில் கேள்வி கேட்டு வைத்தார்!!

அரசியல் களம் மாறுகிறது. வெறும் 54 எம்பியை வைத்து கொண்டு ராஜீவ் காந்தி, காங்கிரஸ் கட்சி தயவுடன் ஆட்சி அமைக்கும் சந்திரசேகர் பிரதம மந்திரி காலத்தில், (1990–1991) சுப்ரமணிய சாமி, பிரதமற்கு அடுத்த நிலையில் மிகவும் முக்கிய அமைச்சர் ஆகுகிறார். திமுக அரசாங்கம் கலைக்கபட்டது 30 ஜனவரி 1991, ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்டது 21 மே 1991.. இடைப்பட்ட 110 நாட்கள்!

அப்போது சொன்னார் சுப்ரமணிய சாமி, இப்போது நான் யாரென்று கருணாநிதிக்கு தெரிந்து இருக்கும்!

சுப்ரமணிய சாமி (1990–1991) ,மிகவும் முக்கிய அமைச்சர் காலத்தில், அந்த ஆட்சி , ராஜீவ் காந்தியால் கவிழ்க்க பட்டு பின்னர் காபந்து (Care taker) அரசாக சந்திரசேகர் அரசு நடக்கும் காலத்தில் இந்த படுகொலை நிகழ்த்த படுகிறது. ராஜீவ் காந்தி படுகொலை நடக்கும் அன்றைய காலத்தில் சுப்பிரமணி சுவாமியிடம் மிக நெருக்கமாக இருந்தவர் வேலுசாமி. அவர் கேட்ட கேள்விகள்:

1) May 21 1991 அன்றைய தினம் நீங்கள் எங்கு இருந்தீர்கள் என்றால் சென்னையின் பிரபலமான மருத்துவனையின் அருகில் உள்ள ஒரு ஓட்டலில், பெயர் பதிவு செய்யப்படாத அறையில் சந்திராசாமி தங்கியிருந்தார். நீங்களும் அவருடன் இருந்தீர்கள். இருவரும் கார் மூலமாகவே பெங்களூரு சென்றீர்கள். வேறு ஒருவரின் பெயரில் எடுக்கப்பட்ட விமான டிக்கெட்டில் சென்றீர்கள். அன்று மாலை சநதிராசாமியின் ஆசிரமத்தில் அனைவருக்கும் இனிப்பு கொடுத்து மகிழ்ந்தாரா இல்லையா? கேட்டால் ஒரு நல்ல காரியம் நடக்கப்போகிறது என்றாரே. அது என்ன?

2) மே, 21-ம் தேதி இரவு 10.25 மணி. டெல்லியில் இருந்த உங்களுக்கு அடுத்தடுத்த பிரச்சாரம் குறித்து தகவலை கேட்பதற்காக போன் செய்தேன். எடுத்த எடுப்பிலேயே 'என்ன ராஜீவ்காந்தி செத்துட்டார். அதைத்தானே சொல்ல வர்றேள்' என்றீர்களே எப்படி?

3) நான் உடனே திருச்சியில் இருந்த உளவுப் பிரிவு அதிகாரியிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது அப்படி ஒரு தகவலும் இல்லையே என்றார்கள். ராஜீவ் படுகொலை இரவு 10.10 மணிக்கு நடக்கிறது. அதிலிருந்து ஒரே பதட்டம். புகை மூட்டம். ஓயாத அலறல் சத்தம். கொஞ்ச நேரம் கழித்தே ராஜீவின் ஒரு கால் தனியே கிடப்பதைப் பார்த்து அலறியபடியே மூப்பனாரை அழைத்தார் ஜெயந்தி நடராஜன். மூப்பனாரும் அருகில் வந்து பார்க்கிறார். மேலும் கொஞ்ச நேரம் போனது. வயிறு முகம் எல்லாம் சிதறியபடி ஒரு உடல். அதன் தலைபாகம் ராஜீவ் என்ற எல்லாவற்றையும் நன்கு கவனித்து திரும்பத் திரும்ப பார்த்த பிறகுதான் மூப்பனார் 'நாம் மோசம் போயிட்டோமே' என்று அலறினார். அடையாளம் கண்டுபிடிக்க அரை மணிநேரம் ஆனது. அடுத்த நாள் மாலை நாளேடுகளில் ஜெயந்தி நடராஜன் பேட்டி இப்படி வந்தது. அப்படியென்றால் அந்த இடத்தில் உறுதிப்படுத்திய நேரமே சுமார் 10.40. அதன் பிறகுதான் அதிகாரிகளின் உறுதியான தகவல் டெல்லிக்கு வந்திருக்கும். அதற்கு இன்னும் ஒரு பத்து நிமிடம் கூட ஆகியிருக்கலாம். ஆக 10.50 அல்லது 11 மணிக்குத்தான் ராஜீவ் படுகொலை உறுதிப்படுத்தப்படுகிறது. அப்படியிருக்கும்போது உங்களுக்கு மட்டும் அந்தத் தகவல் எப்படி முன்கூட்டியே தெரிந்தது? யார் சொன்னார்கள்?

4) அப்போது செல்பேசி வசதிகள் எல்லாம் கிடையாது. அது மட்டுமல்ல. அந்த படுகொலை குறித்து மீடியாவிற்கு தகவல் தருகிறீர்கள். அப்போது 'படுகொலையைச் செய்தது விடுதலைப் புலிகள்தான்' என்றீர்களே எப்படி? யார் உங்களுக்கு சொன்னது? விசாரணையே அடுத்த நாள் காலையில்தான் தொடங்குகிறது. அதற்குள்ளாகவே புலிகள்தான் குற்றவாளி என்றீர்களே எப்படி? எங்கிருந்து தகவல் வந்தது? சிலோனில் இருந்து நண்பர் சொன்னார் என்றால் அவருக்கு மட்டும் எப்படி அது தெரிந்தது? யார் அவர் என்றால் மௌனம் ஏன்?

5) அமைச்சர்களுக்கு தினசரி மூவ்மெண்ட் ரிப்போர்ட் என்ற ரகசிய பைல் இருக்குமே அதைக் கொண்டுவாருங்கள் என்றபோது தொலைந்துவிட்டது' என்று சொன்னீர்களே அது எப்படி?

இப்படி அடுக்கடுக்கான கேள்விகள். ஜெயின் கமிஷன் முன்னால் குறுக்கு விசாரணை நடக்கிறது. சுவாமிக்கு சரியான பதில் சொல்ல முடியவில்லை.

சுப்பிரமணி சுவாமிக்கு சட்டையெல்லாம் வியர்த்துக் கொட்டுகிறது. கைவிரல்களின் வழியே வியர்வை நீர் சொட்டுகிறது.

இதற்காக மட்டுமே தொடர்ந்து மூன்று நாட்கள் தவறாமல் அங்கு வந்து குறிப்பெடுத்தபடி இருந்த பிரியங்கா கண்களில் அனல் பறக்கும் கோபம். 'நீதானா அந்த துரோகி' என்பதைப் போன்று ஒரு ஆவேசப் பார்வை பார்த்தபடியே இருக்கிறார்.

நீதிபதி ஜெயின் 'கோர்ட் கலைகிறது' என்று வழக்கமாக சொல்லக்கூட இயலாமல் அப்படியே முறைத்துப் பார்த்தபடியே எழுந்து சென்று விட்டார்".

இந்த சுவாமி யார் அறிவுறுத்தலின் படி ராஜபக்சே & கோ சந்திக்கிறார்? எந்த அரசாங்க பொறுப்பில் இல்லாமல் இவர் செய்வது இந்திய இறையாண்மை பாதிக்காதா? இவரை கைது செய்து என் விசாரிக்க கூடாது?

உங்கள் அறிவுறுத்தல் மற்றும் பின்னுட்டம் எங்களுக்கு மிகவும் பயன் தரத்தக்கது . நாங்கள் சரியாக / நியாமாக ஒரு விஷயத்தில் இரு பக்கமும் செய்தியை முக்கியத்துவம் தருகிறோமோ என்று எங்களை தொடர்ந்து கண்காணித்து வழிநடத்த வேண்டுகிறோம் .. நன்றி - ஸ்பெஷல் கரெஸ்பாண்டெண்ட் - ஸ்பெல்க்கோ மீடியா ஆசிரியர் குழு

பதிவை பகிர

கட்டுரை ஆசிரியரைப்பற்றி

ச.வெ.ரா  

பின்பற்ற

பயன்பட்டு அறிவியல் தியாயகராஜர் பொறியியல் கல்லூரில் முடித்து பின்னர் ., சர்வதேச வர்த்தக மேல்படிப்பு PGDFTM முடித்து ., அதன் பின்னர் சென்னை பல்கலைக்கழகத்தில் MBA - Distinction பெற்றார் .. சில காலம் அயல் நாட்டில் உழைத்து பின்னர் சொந்தமாக தொழில் தொடங்கி ., எழுதும் ஆர்வத்தின் காரணமாக எழுத தொடங்கி நண்பர்கள் அறிவுரையால் ., splco.me சமூக வலைதள தொடர்பகம் நிறுவினார்
இலங்கை தமிழர் பிரச்சனை காரணமாக இரண்டு வருடம் வகித்த பொருளாளர் பதவியை 2009 ஆம் ஆண்டு Indian Asean Srilanka Chamber of Commerce ல் இருந்து விலகினார்.
திரு சைலேஷ் காந்தி - Information Commisioner (மகாத்மா காந்தி பேரன்) அவர்களுடன் புது டெல்லியில் நியாத்தை வாதிட்டு under Section 8(1)(h) of RTI தகவல் பெரும் உரிமையை பெற்றார் ..
படிப்பதும், மீன் வளர்ப்பும், இயற்கை வேளாண்மையும் இவருக்கு பிடித்தவைகள்...

பின்னுட்டம்

பின்னுட்டம் இடுக


உங்கள் தகவல் பாதுகாப்பாக வைக்கப்படும் தனியுரிமை கொள்கை.