அகழாய்வு தலைவராக இருந்த அமர்நாத் அசாம் மாநிலத்திற்கு தூக்கி அடிப்பு

3வது ஆய்வுக்கு நிதி ஒதுக்க கோரிக்கை வைத்த நிலையில் மாற்றப்பட்டுள்ளார்.   

பதிவை பகிர

கீழடி அகழாய்வினை இந்திய தொல்பொருள் ஆராய்ச்சித் துறையின் அகழாய்வுப் பிரிவு முன்னெடுக்கின்றது. அப்பிரிவினைச் சார்ந்த கி.அமர்நாத் ராமகிருஷ்ணன் கண்காணிப்பு தொல்பொருளியலாளராகத் தலைமை தாங்குகிறார். கிருஷ்ணகிரி அரச கலைக் கல்லூரியின் வரலாற்றுத் துறை இந்த ஆய்வில் பங்கெடுக்கின்றார்கள். துணைப் பேராசிரியர் பி. வெங்டேசுவரன், கே. வடிவேல், கே.வசந்தகுமார். டி.பாலாஜி, ஆர்.மஞ்சுநாத், ஜி.கார்த்திக் ஆகியோரைக் கொண்ட வல்லுனர் குழுவிற்கு தலைமை தாங்குகின்றார்.

கல்வெட்டியலாளர் வி. வேதாச்சலம் துறைசார் வல்லுராகக் (Subject Matter Expert) கடைமைபுரிகிறார். கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் இருந்து கி.பி பத்தாம் நூற்றாண்டு வரையான காலப்பகுதியைச் சேர்ந்த வசிப்பிடமாக இக்களம் கணிக்கப்பட்டுள்ளது. கரிமத் தேதியிடல் முறை மூலம் இன்னும் இது துல்லியமாக உறுதிப்படுத்தப்பட வேண்டியுள்ளது.

ஸ்பெஷல் கரெஸ்பாண்டெண்ட்

கிட்டத்தட்ட 48 சதுரக் குழிகள் வெட்டப்பட்டு உறைகிணறுகள், செங்கற் சுவர்கள், கூரை ஓடுகள், மண்பாண்டங்கள், மிளிர்கல் அணிகலன்கள், எலும்புக் கருவிகள், இரும்பு வேல், தமிழி எழுத்து பொறிக்கப்பட்ட பானையோடுகள் எனப் பல்வேறு தொல்லெச்சங்கள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இலக்கியத்தில் குறிப்பிடப்படும் பாண்டியர்களின் தொல்நகரான "பெருமணலூர்" இதுவாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

கீழடியில் 10 க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. ஒரு வளர்ச்சியடைந்த நகரமாக இது திகழ்ந்ததற்கு இது வலுவான சான்றாக உள்ளது. "சங்க காலத்தில் கட்டிடங்களே இல்லை என்ற கூற்றை இந்த அகழாய்வு மாற்றியமைத்துள்ளது”.

இந்த நிலையில் மதுரை அருகே கீழடி அகழாய்வு தலைவராக இருந்த அமர்நாத் அசாம் மாநிலத்திற்கு மாற்றப்பட்டார். மூன்றாம் கட்ட அகழாய்வு 3வது ஆய்வுக்கு நிதி ஒதுக்க கோரிக்கை வைத்த நிலையில் மாற்றப்பட்டுள்ளார்.

இந்த குழு வெயில் பனி பாராமல் செம்மையாக செயல் செய்து இரண்டு கட்ட ஆய்வில் தமிழர்களின் 2,500 ஆண்டு பழமையான வரலாறு தெரியபாடுபட்டது.

ஸ்பெஷல் கரெஸ்பாண்டெண்ட்

அமர்நாத்தை மட்டுமல்ல மொத்த 25 குழு நபர்களை பணியிடம் மாற்றம் குறித்து அமர்நாத் அவர்களின் கருத்து:

இந்தப் பணிகளுக்கான விசயத்தை நானும், என்னோடு பணியாற்றி வந்த 25 பேர் கொண்ட குழுவும் தெரிந்து வைத்துள்ளோம். திடீரென வேறு குழுவை போட்டால் எப்படி பணி செய்ய முடியும். முழு மனதாக நான் இந்த பணியை விட்டு போகவில்லை.

என்னை மட்டுமல்ல என்னைச் சேர்ந்த 25 பேரையும் பல்வேறு இடங்களுக்கு பணியிடம் மாற்றம் செய்துள்ளனர். பணியிட மாற்றம் குறித்து இந்திய தலைமை பொறுப்பாளர் ராகேஷ் திவாரியிடம் கேட்டேன். அதற்கு அவர், இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை பணியிடம் மாற்றப்படும். அந்த வகையில் மாற்றினோம். இது வழக்கம்போல மாற்றம்தான், இது எங்களோட விருப்பம். நீங்கள் அசாமில் பணியில் சேருங்கள் என்கிறார்.

3 வருடங்களாக நான் இங்கு உள்ளேன். வழக்கம்போல 2 வருடத்திற்கு ஒருமுறை மாற்ற வேண்டுமானால் கடந்த ஆண்டே எங்கள் குழுவை மாற்றியிருக்க வேண்டும். ஏன் மாற்றவில்லை.

மூன்றாம் கட்ட அகழாய்வு தொடங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. அதற்கான நிதி மார்ச் 17ல் ஒதுக்கப்பட்டு வந்துவிடும் என்றார்கள். அதனை நம்பி நான் மூன்றாம் கட்ட அகழாய்வு பணிகளை தொடங்கிவிட்டேன். இந்த நிலையில் பணியிட மாற்றம் என்றால், இந்த வேலையை இழுத்து மூடுவதற்கான பணிகளை செய்கிறார்கள் என்று அர்த்தம்.

மேலும் தனக்கு பதிலாக ஸ்ரீராம் என்பவரை நியமித்துள்ளனர். புதிதாக வரும் குழு எங்கள் குழுவின் அணுமுறையை பின்பற்றாமல் நடந்தால் தொய்வு ஏற்படும் என்றும் அவர் தனது கவலையை பகிர்ந்து கொண்டார்.

கீழடி தொல்லியல் களம் என்பது இந்தியத் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தால் அகழாய்வு செய்யப்பட்டு வரும் ஒரு சங்க கால வசிப்பிடம் ஆகும். இந்த அகழாய்வு மையம் தமிழ்நாட்டில் மதுரைக்கு தென்கிழக்கில் 12 கி.மீ தொலைவில், சிவகங்கை மாவட்டத்தில் கீழடி என்ற ஊருக்கு அருகில் அமைந்துள்ளது. ஆதிச்சநல்லூர் தொல்லியல் களத்துக்கு அடுத்து இந்தியத் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தால் தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்படும் பெரிய அளவிலான அகழாய்வு இதுவேயாகும்.

தாமதிக்கப்பட்ட சொற்ப விவசாய நிவாரணம் ., வார்த புயலுக்கு இன்னும் ஒரு ரூபாய் கூட நிவாரணம் தராமல் இருக்கும் நிலை ., டெல்லியில் கண்டு கொள்ளாத தமிழக விவசாயிகள் போராட்டம் ., தொடர்ந்து தாக்கப்படும் மீனவர் பிரச்சனை ., தொடர்ந்து முக்கியமான சரித்திர ஆவண படுத்துதல் நிகழ்வில் தமிழர் 2500 ஆண்டுகள் முந்தைய பண்பாடு வெளி வரும் நிலையில் , வெற்றிகரமாக 2 கட்டத்தை முடித்த 25 நபர்கள் கொண்ட மொத்த குழுவையும் தூக்கி அடித்தது சமூக வலைதளத்தில் பிஜேபி மோடி அரசு மீது மிக பெரிய வருத்தத்தை ஏற்படுத்தி கொண்டு வருவதை காண முடிகிறது .

உங்கள் அறிவுறுத்தல் மற்றும் பின்னுட்டம் எங்களுக்கு மிகவும் பயன் தரத்தக்கது . நாங்கள் சரியாக / நியாமாக ஒரு விஷயத்தில் இரு பக்கமும் செய்தியை முக்கியத்துவம் தருகிறோமோ என்று எங்களை தொடர்ந்து கண்காணித்து வழிநடத்த வேண்டுகிறோம் .. நன்றி - ஸ்பெஷல் கரெஸ்பாண்டெண்ட் - ஸ்பெல்க்கோ மீடியா ஆசிரியர் குழு

பதிவை பகிர

கட்டுரை ஆசிரியரைப்பற்றி

ஸ்பெஷல் கரெஸ்பாண்டெண்ட்

பின்பற்ற

சமூகத்தின் மேம்பாடு வேண்டி திறந்த மனதுடன் உண்மையை தேடி விரும்பும் எழுத்தாளர்களின் சங்கம கூடலே splco.me . இது சமூக வலைதளத்தின் எழுத்தாளர்களின் கன்னி முயற்சியின் தொகுப்பு.

பின்னுட்டம்

பின்னுட்டம் இடுக


உங்கள் தகவல் பாதுகாப்பாக வைக்கப்படும் தனியுரிமை கொள்கை.