பிரிட்டிஷ் ராஜ்யத்தில் காங்கிரஸ் "வந்தே மாதரம்" "பாரத் மாத கீ ஜெய் " சொல்லி போராட., மிதவாத காங்கிரஸ் போல அல்லாமல் வன்முறை வழியில் இறங்கிய அவரை ஜெயிலில் அடைத்த ஒரு மாதம் ஆன உடன் கஷடம் தாங்க முடியாமல் ஒரு முறை அல்ல நான்கு முறை மன்னிப்பு கடிதம் எழுதிய விவரம் :

முதல் மன்னிப்பு கடிதம் : 20th august 1911
இரண்டாம் மன்னிப்பு கடிதம் : 14th November 1913
மூன்றாம் மன்னிப்பு கடிதம் : undated 1917
நான்காம் மன்னிப்பு கடிதம் : 30 March 1920

Special Correspondent

இனிமேல் பிரிட்டிஷ் அரசுக்கு சேவகனாய் இருப்பேன்., இனிமேல் சுதந்திரம் கேட்டு தீவிரவாத வழியில் போராட மாட்டேன் என்று சத்தியம் செய்து, பிரிட்டிஷ் காரர்கள் காலை பிடித்து எல்லாம் செய்து 1921 ஆண்டு முதல் ஹிந்து ராஷ்ட்ரியம் அமைக்க ஊழியம் செய்ய ஆரம்பித்தார்.

இங்கே ஒரு சந்தேகம் வரும் திரும்ப திரும்ப மன்னிப்பு கேட்டும் ஒன்பது வருஷமா சிறையிலே வைத்து இருக்க அப்படி என்ன குற்றம்..?!

1) தனது 12 வயதிலே மசூதி உடைத்து வன்முறை ஆட்டம்..

2)அவரின் விசுவாசி மதன்லால் திங்க்ரா, பட்டப்பகலில் பொது மேடையில் ஆங்கில அதிகாரி சர் வில்லியம் ஹட் குர்சன் வ்ய்ல்லியே-வை செய்த கொலைக்கு பின்பலம் வெளிப்படை ஆதரவு..

3) கைதுக்கு தப்பித்து பாரிஸ், பிரான்சு ஓடி ஒளிந்தது..

4) கைதாகி SS Morea கப்பலில் அழைத்து வரும் போது மார்செய்ல்லே துறைமுகத்தில் 8 July, 1910 தப்பித்து பின்னர் கையும் களவுமாக மாட்டி கொண்டது..
என்றெல்லாம் நீள்கிறது பிரிட்டிஷ் அரசின் குற்றசாட்டு பட்டியல்

Special Correspondent

அதாவது காங்கிரஸ் கருத்து ரீதியாக ஜனநாயகப்படி போராடி கொண்டு இருந்த போது இவர் செய்த வேலைகள் ஆங்கில அதிகாரி கொலைக்கு பின்புலம்..

அங்கேயும் நேரடி எதிர்ப்பா என்றால் இல்லை ஆனால்.. பின்னால் நின்று எழுதி தூண்டி விடுவது.. தப்பித்து ஓடி மாட்டி கொண்டவுடன் ., திரும்பவும் தப்பித்து ஓடி மாட்டி கொண்டது என்றே முன் பாதி வாழ்கை கழிந்தாலும்..

ஜெயில் வழக்கை தப்பித்து மன்றாடி கூழை கும்பிட்டு போட்டு செய்த சத்தியம் காத்து பிரிட்டிஷ் காரர்கள் இந்தியாவை விட்டு போகும் வரை விசுவாசமாக இருக்கவே செய்தார்..

வெள்ளையனே வெளியேறு Quit India movement., போராட்டத்தில் காந்தி நேரு போராட்டம் செய்து ஜெயிலில் பல வருடம் வாடிய போதும், சாவர்க்கர் அவரின் ஹிந்து மகாசபா தலைவர் பதவியில் இருந்த அவரின் பிராமண ஹிந்துக்கள் வெள்ளையன் வேலையை ராஜினாமா செய்ய கூடாது அவர்களுக்கு விசுவாசமாக இருக்க வேண்டும் என்று பகிரங்கமாக கடிதம் எழுதினார்..

இங்கே சில நீதிமன்ற வழக்கு ஆவணங்கள் பார்வைக்கு :

நாதுராம் ஹிந்து மகாசபா மற்றும் ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங் உறுப்பினர் மட்டுமில்லை., புனே வில் இருந்து மராட்டிய மொழில் வெளியாகும் அக்ரானி என்றே பத்திரிகைக்கும் ஆசிரியர். இந்த பத்திரிக்கை "The Hindu Rashtra Prakashan Ltd" என்ற கம்பெனி கீழே நடைபெறுகிறது. இதில் சர்வர்கர் அன்றைய தேதியில் 15000 ரூபாய் முதலிடு செய்து உள்ளார். அன்றைய 15000 ரூ என்பது இன்றைய பண சந்தை மதிப்பின் படி பார்த்தோம் என்றால் சுமார் ஒன்றரை கோடி ரூபாய் வரும்..

17 ஜனவரி 1948, அதாவது கொலை நடக்கும் 13 நாட்கள் முன்னர் அன்று சர்வர்கரை பார்க்க நாதுராம், பட்ஜெ, ஷங்கர், அப்டே நல்லவரும் அவரின் சிவாஜி பார்க் இல்லத்துக்கு செல்லுகின்றனர். நாதுராம், அப்டே உள்ளே செல்ல மற்ற இருவரும் வெளியே நின்று விடுகின்றனர். வெளியே வந்த அப்டே, பட்ஜெ விடம் தெரிவித்த விவரம், சரவர்கர் “Yashasvi houn ya” (“यशस्वी होऊन या“, be successful and return) என்று நாதுராம் விநாயக் கோட்ஸேவை வாழ்த்தி அனுப்பி உள்ளார் என்று வழக்கு ஆவணத்தில் பதிவு செய்யப்பட்டு உள்ளது. மேலும் அப்டே, சாவர்க்கர் சொன்னதாக நீதிமன்றத்தில் சொன்னது ”காந்தியின் நூற்றாண்டு காலம் முடிந்து விட்டது, சந்தேகம் வேண்டாம் காரியம் வெற்றிகரமாக முடிந்து விடும்”.

போலீஸ் காந்தியின் கொலை நடந்த 15 நாட்களில் அதாவது 05 பிப்ரவரி 1948 அன்று இதன் காரணமாக சர்வர்கரை அவரது சிவாஜி பார்க் இல்லத்தில் நுழைத்து அதிரடியாக கைது செய்து ஆர்தர் ரோடில் உள்ள சிறைச்சாலையில் தள்ளுகின்றனர்..

இந்த நிலையில் நாளிதழ் 07 பிப்ரவரி 1948 அன்று பிரபல டைம்ஸ் அப் இந்தியா சர்வர்கர் அறிக்கையை தருகிறது.. அதன் சுருக்கம் அப்படியே கீழே “Gandhi’s assassination a fratricidal crime, endangering India’s existence as a nascent nation”.

05 பிப்ரவரி 1948 கைது செய்யப்பட்ட ஒருவரின் அறிக்கை, இரண்டு நாள் கழித்து 07 பிப்ரவரி 1948 அன்று எப்படி வரும் என்ற சந்தேகத்தை அன்றைய புலனாய்வு எப்படி தவற விட்டார்கள் என்ற சந்தேகம் ஒரு புறம் இருக்க.. நீதிமன்றம் பட்ஜெ வாக்குமூலத்தை நிராகரித்து விட்டதன் காரணம் மில்லியன் டாலர் கேள்விகள்..

நீதிமன்றம் கொலை செய்த குற்றவாளியின் நாதுராம் வின்யாக் கோட்ஸே முழுக்க முழுக்க சுய ஒப்புதல் அங்கீகாரத்தை ஏற்று கொண்டு, முஸ்லீம் பேரை மட்டுமில்லை சுன்னத் கூட செய்து பெரும் கலவரத்தை ஏற்படுத்த முயன்ற ஒருவரின் வாக்கு மூலம் முழுவதுமாக ஏற்கப்பட்டு சர்வர்கர் குற்றமற்றவர் என்று நீதிமன்றம் விடுவித்து விடுகிறது..

இவருக்கு வீர் அதாவது வீரர் என்று இன்று வரை சொல்லி பாராலிமன்றத்திலே படம் வைத்து கொண்டு இருப்பது மட்டுமல்ல..

மண்டியிட்டு மன்னிப்பு கடிதம் நான்கு முறை எழுதி அதன் மூலம் விடுதலை பெற்று பின்னர்.. தனது விசுவாசத்தை 27 வருடமாக பிரிட்டிஷ் இடம் காட்டிய வீரத்தின் விளை நிலம், பிறந்த நாள் இன்று பிஜேபி , ஆர்எஸ்எஸ் மற்றும் விஷ்வா ஹிந்து பரீக்ஷித் அமைப்புகள் கொண்டாடி வருகிறார்கள் என்பது பெருமைக்குரிய விஷயமா இல்லை இந்தியாவின் அவமான சின்னமா ...

References :
Hindu Rashtra Darshan: A Collection of Presidential Speeches Delivered from the Hindu Mahasabha Platform. Bombay: Khare,1949.
Six Glorious Epochs of Indian History. Trans. and ed. S. T. Godbole. Bombay: Veer Savarkar Prakashan, 1985.
My Transportation for Life. Trans. V. N. Naik. Bombay: Veer Savarkar Prakashan, 1984; 1st ed., 1949.

உங்கள் அறிவுறுத்தல் மற்றும் பின்னுட்டம் எங்களுக்கு மிகவும் பயன் தரத்தக்கது . நாங்கள் சரியாக / நியாமாக ஒரு விஷயத்தில் இரு பக்கமும் செய்தியை முக்கியத்துவம் தருகிறோமோ என்று எங்களை தொடர்ந்து கண்காணித்து வழிநடத்த வேண்டுகிறோம் .. நன்றி - ஸ்பெஷல் கரெஸ்பாண்டெண்ட் - ஸ்பெல்க்கோ மீடியா ஆசிரியர் குழு