நீட் பரீட்சை தரவரிசை புள்ளி விவரம் தெரிவிப்பது என்ன?

ஸ்டேட் போர்டில் படித்த 8.22 லட்சம் மாணவர்களுக்கு 2,224 மருத்துவ இடங்கள். சி.பி.எஸ்.சி யில் படித்த 12 ஆயிரத்து 575 மாணவர்களுக்கு 1,310 மருத்துவ இடங்கள் என்று நீட் CBSE கல்வி திட்டத்துக்கு ஆதரவாக உள்ளது என்றும்.,

Special Correspondent

தமிழ்நாட்டில் 69% இடஒதுக்கீடு காலத்தில் மருத்துவ இடங்களை வெறும் 2% இடங்களைக் கூட முன்னேறிய ஜாதி வகுப்பினர் (FC) பெறவில்லை. ஆனால் இந்த ஆண்டு 20% – 25% இடங்களை முன்னேறிய 2% ஜாதி வகுப்பினர் (FC) பெற்று இருக்கிறார்கள் என்கிறது நீட் தரவரிசை புள்ளி விவரம் அதனால் நீட் மிகவும் குறைந்த இருப்பில் உள்ள ஜாதி அமைப்பினரை அதிகம் பிரிதிநிதித்துவம் படுத்துவதாக என்றும்.,

2~3 லட்சம் கட்டி நீட் பயிற்சி படிக்க முடியாத ஏழை மாணவர்கள் இனி மருத்துவர்கள் ஆக முடியாது என்கிறார்கள் கல்வி வல்லுனர்கள். அதனால் பணம் படைத்த பெற்றோர்கள் சந்ததியினர் மட்டுமே இனி மருத்துவர்கள் ஆக முடியும் என்றும்.,

IIT சேரும் மாணவிகளில் சுமார் 10~25% சதவீதம் தான் பெண்கள் என்றும் இதே போன்ற நிலை தான் AIIMS மருத்துவ கல்லூரியிலும் என்பது போல நீட் தேர்வும் இருக்கும் என்று கூறிய நிலையில் அதனை மெய்ப்பிக்கும் விதமாக முதல் 100 இடத்திலே வெறும் 26 மாணவிகளே வந்து உள்ளனர். ஆனால் முந்தைய தேர்வு முறைப்படி 50% மேல மாணவிகள் மருத்துவ படிப்பிற்கு சென்ற புள்ளி விவரம் உள்ளது. இதனால் மாணவிகள் மருத்துவ படிப்பு சேர்க்கை சுமார் 25% குறைந்து உள்ளது.

இதன் மூலம் நீட் தேர்வு முறை CBSC கல்வி திட்டம், ஆண்களுக்கு., முன்னேறிய 2% ஜாதி வகுப்பினர்(FC)., மற்றும் பணம் படைத்த பெற்றோர்கள் கொண்ட மாணவர்களுக்கு சாதகமாக உள்ளது என்றும் தெரிய வருகிறது.

அதே சமயம் நீட் தேர்வு முறை மாநில கல்வி., பெண்கள்., BC, MBC, SC, ST., ஏழைமாணவர்கள்., ஆகியோர்களை பாதித்துள்ளது என்பதை காண முடிகிறது.

ஒரு சமூகம் என்பது அனைத்து தரப்பட்ட மக்களையும் முக்கியமாக பெருமான்மை மக்களின் பிரதிநிதித்துவம் தர பட வேண்டும் அது தவறும் பட்சத்தில் சமூக நீதி தவறிவிட்டதாக கருதப்படும்.

Special Correspondent

முக்கியமாக பெண்களுக்கு சரிபாதி பிரதிநிதித்துவம் ., மாநில கல்வி முறைக்கு சரி பிரதிநிதித்துவம் ., பணம் இல்லாத குழைந்தைகள் வாய்ப்பில் பிரதிநிதித்துவம் என்று சொல்லலாம்.

நீட் விஷயத்தில் பெரும் நெருடலான விஷயம் என்னவென்றால் எல்லா மாநிலமும் ஒவ்வொரு கல்வி முறையை கொண்டு இயங்கும் தமிழ்நாட்டிலே வருடம் தோறும் சுமார் ஒரு கோடி மாணவ மாணவிகள் இப்போது முதலாம் வகுப்பில் தொடங்கி பன்னிரெண்டாம் வகுப்பு வரை மாநில கல்வி திட்டத்தில் படித்து கொண்டு வருகிறார்கள்.

CBSE கல்வி துறையும் அது போல ஒரு கல்வி திட்டத்தை கொண்டுள்ளது. இரு அமைப்பில் படிப்பவர்களும் மற்றும் இதர மாநில அமைப்பில் படிப்பவர்களும் மருத்துவ துறையில் இந்தியா முழுவதும் ஒரே மாதிரியான நீட் தேர்வை எதிர்நோக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உறுதியாக கூறிவிட்டது.

போட்டியிடும் அமைப்பில் உள்ள இத்தைகைய CBSE கல்வித்துறை அமைப்பு மருத்துவ தேர்வு நடத்தாமல் ஒரு மேம்பட்ட அமைப்பு நடத்தி இருக்க வேண்டும். Medical Council of India அல்லது AIIMS அமைப்பிடம் கொடுத்து இருக்கலாம். ஏன் அதனை CBSE கல்வி துறை இடம் கொடுக்க வேண்டும்.

தேர்தலை தேர்தல் கமிஷன் தானே நடத்த வேண்டும். போட்டியிடும் கட்சிகளான காங்கிரஸ் அல்லது பிஜேபி கட்சி நடத்துவது எவ்வளவு கேலியோ அது போல தானே போட்டியிடும் CBSE கல்வித்துறை மாணவர்களை கொண்ட அமைப்பு, இந்த மருத்துவ தேர்வு சேர்க்கையை நடத்துவது ஆகும்.

இதனை முன்மாதிரியாக கொண்டு நாளை IIT தேர்வு முறையை தமிழக மாநில அரசு பாடத்திட்டத்துறை எடுத்து நடத்தினால் ஏற்று கொள்ளப்படுமா.

இதனை ஏன் மாண்பு பொருந்திய நீதிமன்றங்கள் கவனத்தில் எடுத்து கொள்ள வில்லை என்பது ஒருபுறம் இருக்கட்டும். நீட் விலக்கு எதிராக வாதிட்ட தமிழக மாநில அரசு ஏன் கவனத்தில் கொண்டு வரவில்லை.

Above pictures are from internet desk and data's maybe further verified withneet ranking list 2017 released by Tamilnadu government.

உங்கள் அறிவுறுத்தல் மற்றும் பின்னுட்டம் எங்களுக்கு மிகவும் பயன் தரத்தக்கது . நாங்கள் சரியாக / நியாமாக ஒரு விஷயத்தில் இரு பக்கமும் செய்தியை முக்கியத்துவம் தருகிறோமோ என்று எங்களை தொடர்ந்து கண்காணித்து வழிநடத்த வேண்டுகிறோம் .. நன்றி - ஸ்பெஷல் கரெஸ்பாண்டெண்ட் - ஸ்பெல்க்கோ மீடியா ஆசிரியர் குழு