"அட்ஜெஸ்ட்மென்ட்" பற்றி நடிகை பரபரப்பு பேட்டி

கதை சொல்லும்போதே அட்ஜெஸ்ட்மென்ட் பற்றி பேசினார். அவர் எந்த அட்ஜெஸ்ட்மென்ட்டை பற்றி பேசுகிறார் என்று தெரிய வந்து அதிர்ந்துபோய்...   

பதிவை பகிர

பாவனா விஷயத்தில் ஆரம்பித்த அட்ஜெஸ்ட்மென்ட் விவகாரம் இப்போது கோலிவுட் வட்டாரத்தில் புகை மூண்டு., பாடகி சுசித்ரா., பாடகி சின்மயி அனிருத் அட்ஜெஸ்ட்மென்ட், நடிகை ஹன்சிகா அமலா பால் அட்ஜெஸ்ட்மென்ட் பற்றி எல்லாம் ட்வீட் செய்ய பற்றி எரிய தொடங்கிய நிலையில்..

அட்ஜெஸ்ட்மென்ட் பற்றி நடிகை வரலக்ஷ்மி சரத்குமார்., நடிகை சந்தியா (காதல் பட நாயகி), நடிகைரெஜினா பேசிய நிலையில் "என்னமா இப்படி பண்ணுறீங்களேமா" டயலாக் புகழ் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் வெடித்து உள்ளார். அவரின் பேட்டி விவரம்:

sm 3.15

"நான் சினிமாவுக்கு வந்த நாளில் இருந்து கிட்டத்தட்ட தினமும் பாலியல் பாகுபாட்டால் கேலிக்கும், கிண்டலுக்கும், கொடுமைகளுக்கும் ஆளாகியுள்ளேன்".

"முன்னணி மலையாள இயக்குனரான அவர் தமிழிலும் படம் எடுத்துள்ளார். அவர் எனக்கு பாலியல் தொல்லைகள் தர முயன்றார். அதை நான் எதிர்த்தபோது படப்பிடிப்பு தளத்தில் வைத்து என்னை அசிங்கப்படுத்தினார். படப்பிடிப்பு தளத்தில் தேவையில்லாமல் என்னை திட்டினார். நான் நன்றாக நடித்தாலும் சில காட்சிகளை 25 டேக் எடுக்க வைத்தார். அவர் என்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நான் கூறியதால் நான் தான் அவதிப்பட்டேன். அவரை போன்றவர்களை பற்றி நாம் பேசுவது இல்லை".

அண்மையில் ஒரு இயக்குனர் அனுப்பி வைத்ததாக கூறி அவரின் உதவியாளர் வந்து என்னிடம் கதை சொன்னார். கதை சொல்லும்போதே அட்ஜெஸ்ட்மென்ட் பற்றி பேசினார். அவர் எந்த அட்ஜெஸ்ட்மென்ட்டை பற்றி பேசுகிறார் என்று தெரிய வந்து அதிர்ந்துபோய் அவரை வெளியே செல்லுமாறு கூறினேன்.

"சினிமா துறையில் ஆண்களுக்கு ஒரு சம்பளம், பெண்களுக்கு ஒரு சம்பளம். பெண் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு மரியாதை இல்லை. ஹீரோவுக்கு ரூ.40 கோடி சம்பளம் தருவார்கள். ஆனால் அதில் 10 சதவீதம் கூட ஹீரோயினுக்கு கொடுக்க மாட்டார்கள். ஒரு ஹீரோவால் மட்டுமே படம் ஓடுகிறது என்பதை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன்.புத்திசாலி பெண்ணுடன் பணியாற்ற யாரும் விரும்புவது இல்லை. நியாயமான சம்பளம், சம உரிமை கேட்கும் பெண்ணாக இருந்தால் அவரை கடவுள் தான் காப்பாற்றனும் என லட்சுமி ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

உங்கள் அறிவுறுத்தல் மற்றும் பின்னுட்டம் எங்களுக்கு மிகவும் பயன் தரத்தக்கது . நாங்கள் சரியாக / நியாமாக ஒரு விஷயத்தில் இரு பக்கமும் செய்தியை முக்கியத்துவம் தருகிறோமோ என்று எங்களை தொடர்ந்து கண்காணித்து வழிநடத்த வேண்டுகிறோம் .. நன்றி - ஸ்பெஷல் கரெஸ்பாண்டெண்ட் - ஸ்பெல்க்கோ மீடியா ஆசிரியர் குழு

பதிவை பகிர

கட்டுரை ஆசிரியரைப்பற்றி

ஸ்பெஷல் கரெஸ்பாண்டெண்ட்

பின்பற்ற

சமூகத்தின் மேம்பாடு வேண்டி திறந்த மனதுடன் உண்மையை தேடி விரும்பும் எழுத்தாளர்களின் சங்கம கூடலே splco.me . இது சமூக வலைதளத்தின் எழுத்தாளர்களின் கன்னி முயற்சியின் தொகுப்பு.

பின்னுட்டம்

பின்னுட்டம் இடுக


உங்கள் தகவல் பாதுகாப்பாக வைக்கப்படும் தனியுரிமை கொள்கை.