தனது மகன் கலைச்செல்வன் தான் தற்போது தனுஷ் என்றும்., பெயரை மாற்றி சினிமாவில் நடித்து வருகிறார் என்றும் அவரது பள்ளிச்சான்றிதழ், குடும்ப அட்டை உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் ஐகோர்ட்டில் தாக்கல் செய்தனர் மதுரை மாவட்டம் மேலூரை அடுத்த எம்.மலம்பட்டியை சேர்ந்த கதிரேசன் -மீனாட்சி தம்பதியர்.

Special Correspondent

ஆனால் இந்த வழக்கில் உண்மை இல்லை, எனவே தள்ளுபடி செய்ய வேண்டும் என்று நடிகர் தனுஷ் தரப்பில் மதுரை ஐகோர்ட்டு கிளையில் செய்யப்பட்ட மனுவை மதுரை உயர்நீதிமன்றம் நிராகரித்து தனுசின் அங்க அடையாளங்களை சரி பார்க்க உத்தரவிட்டனர்.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு இதுதொடர்பாக அரசு மருத்துவர்கள் தாக்கல் செய்த அறிக்கையில் தனுசின் அங்க அடையாளங்கள் அழிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து இருந்தனர்.

Special Correspondent

இந்நிலையில், இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளார். இது குறித்து விவரம் தெரிவித்த மூத்த வழக்கறிஞர் DNA டெஸ்ட் இரு தரப்பும் கோராதது ஆச்சரியம் தருகிறது என்றும் நீதிமன்றம் இதனை கேட்டு இருக்கும் பட்சத்தில் மருத்துவ ரிப்போர்ட் மூலம் நீதியை மேலும் வலுவாக்கி இருக்க முடியும் என்று கூறினார்.

உங்கள் அறிவுறுத்தல் மற்றும் பின்னுட்டம் எங்களுக்கு மிகவும் பயன் தரத்தக்கது . நாங்கள் சரியாக / நியாமாக ஒரு விஷயத்தில் இரு பக்கமும் செய்தியை முக்கியத்துவம் தருகிறோமோ என்று எங்களை தொடர்ந்து கண்காணித்து வழிநடத்த வேண்டுகிறோம் .. நன்றி - ஸ்பெஷல் கரெஸ்பாண்டெண்ட் - ஸ்பெல்க்கோ மீடியா ஆசிரியர் குழு