கால்நடை வர்த்தகத்துக்கான விதிமுறையில் மத்திய அரசு மாற்றம் கொண்டுவந்தது. அதன்படி இறைச்சி மற்றும் தோல் பொருள்கள் தயாரிப்புக்காக மாடு, கன்றுக்குட்டி, எருமை, ஒட்டகம் உள்ளிட்ட கால்நடைகளை விற்க மத்திய அரசு தடை விதித்துள்ளது. மேலும், இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வந்தது.

Special Correspondent

மத்திய அரசின் இந்த நடவடிக்கையை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்கள் அதிகரித்து வருகின்றன. நாட்டின் பல்வேறு இடங்களில் இந்த அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதத்தில் ‘மாட்டிறைச்சித் திருவிழாக்களும்’ நடத்தப்பட்டு வருகின்றது.

குறிப்பாக, தமிழகம், கேரளா போன்ற மாநிலங்களில் கடுமையான எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டு வருகிறது. இதை ஏற்க முடியாது என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் திட்டவட்டமாகக் கூறிய நிலையில், இந்தச் சட்டத்துக்கு நான்கு வாரங்களுக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை. இந்நிலையில், நடிகர்களும் இந்த முடிவுக்கு எதிரான கருத்துகளைப் பதிவு செய்து வருகின்றனர்.

Special Correspondent

இது குறித்து சென்னையில் ஜெயலலிதா அரசு சரியாக இயங்காமல் உருவாக்கிய செயற்கை வெள்ளத்தில் களத்தில் இறங்கி வேலை செய்தததில் மக்களின் பாராட்டு பெற்ற நடிகர் சித்தார்த், “பி.ஜே.பி உங்களிடம் அதிகாரம் உள்ளது. அதைப் பயன்படுத்தி நாட்டை முன்னேற்றுங்கள். மக்களின் தனிப்பட்ட விஷயங்களில் தலையிட வேண்டாம்” என்று கூறினார். இதையடுத்து, நடிகர் அரவிந்த் சாமியும், தற்போது இந்த விவகாரத்தில் கருத்துத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அரவிந்த் சாமி தனது ட்விட்டரில், “உலக அளவில் ஊட்டச்சத்து குறைபாடு உடைய குழந்தைகள், அதிகளவு இருக்கும் நாட்டில் இந்தியாவும் ஒன்று. ஆனால், நாம் இன்னும் மேஜையின் மீதுள்ள உணவுகளைப் பறிக்கும் வேலையைத்தான் செய்து வருகிறோம். இதே ஆற்றலை மக்களுக்கு உணவு அளிப்பதிலும் காட்டுங்கள். அதைத்தான் அனைத்து மதங்களும் போதிக்கின்றன” என்று கூறியுள்ளார்.

வழக்கமாக பொது பிரச்சனையில் அமைதியாக இருக்கும் நடிகர்கள் கூட கடுமையாக மத்திய அரசை எதிர்த்து உள்ளது பிஜேபி-யினரை கலங்க செய்துள்ளது என்று அரசியல் நோக்கர்கள் தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

இந்த நிலையில் அரசியலுக்கு வரப்போவதாக சொல்லிய ரஜினி மற்றும் அரசியல் பதிவுகளை தொடர்ந்து போட்டு வரும் கமல் இவர்களில் நிலைப்படை மக்கள் ஆர்வமாக நோக்கி உள்ளனர்.

உங்கள் அறிவுறுத்தல் மற்றும் பின்னுட்டம் எங்களுக்கு மிகவும் பயன் தரத்தக்கது . நாங்கள் சரியாக / நியாமாக ஒரு விஷயத்தில் இரு பக்கமும் செய்தியை முக்கியத்துவம் தருகிறோமோ என்று எங்களை தொடர்ந்து கண்காணித்து வழிநடத்த வேண்டுகிறோம் .. நன்றி - ஸ்பெஷல் கரெஸ்பாண்டெண்ட் - ஸ்பெல்க்கோ மீடியா ஆசிரியர் குழு