கடந்த பிப்ரவரி 17-ந் தேதி இரவு... படப்பிடிப்பை முடித்து விட்டு காரில் திருச்சூரிலிருந்து கொச்சி திரும்பிக் கொண்டிருந்த நடிகை பாவனா.. 'பல்சர் சுனி' கும்பலால்... கடத்தி பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்ட சம்பவம் இந்தியா முழுக்க அதிர்வலையை ஏற்படுத்தியது. அப்போதே... இந்த சம்பவத்தின் பின்னணியில் மலையாள சினிமாவின் பிரபல நடிகர் திலீப் இருப்பதாக செய்திகள் வந்தன.

பாவனா கடத்தல் மற்றும் பாலியல் வழக்கு விசாரணை பரபரப்பு திருப்பங்களுடன் இப்போது சென்று கொண்டிருக்கிறது. இதனை பற்றி போலீசார் தரப்பில் சேகரித்த தாக்கல் விவரம் இதோ :

Special Correspondent

நடிகர் திலீப் சினிமா தயாரிப்பாளராகவும் உள்ளார். அவர் சினிமாவில் சம்பாதித்த 60 கோடி ரூபாயை காவ்யா-பாவனா மற்றும் தனது முன்னாள் மனைவி மஞ்சு வாரியர் பெயரில் நிலங்களாக வாங்கி முதலீடு செய்துள்ளார். மஞ்சு வாரியரை பிரிந்த பிறகு தனது மகள் மீனாட்சிக்கு அந்த சொத்தில் ஒரு பகுதியை தர முயற்சி செய்தார்.

அதற்கு பாவனா உதவி செய்தார். இதை புது மனைவி காவ்யாவும் அவரது தாயாரும் விரும்பவில்லை. பாவனாவை மிரட்ட காவ்யா மாதவன் குடும்பத்துக்கு நெருக்கமான பல்சர் சுனியை ஏற்பாடு செய்கிறார். குடும்ப கௌரவத்தை கருதி திலீப், காவ்யாவையும் அவரது தாயார் ஷியாமளாவையும் பாதுகாக்க களமிறங்குகிறார்.

முதலில் பல்சர் சுனியை தெரியாது என்ற திலீப், பல்சர் சுனியை காப்பாற்ற கேரளாவில் புகழ்பெற்ற கிரிமினல் வக்கீலான ஆளூர் என்பவரை அமர்த்துகிறார் என சொல்லும் போலீஸ் பாவனாவை கடத்திக் கொண்டு போய் எடுத்த விஷுவல்களை நாங்கள் காவ்யா மாதவன் அம்மா ஷியாமளாவிடமிருந்து கைப்பற்றினோம்.

அந்த மெமரி கார்டில் இருந்த படங்களை அவர் அழித்திருந்தார். அதை நாங்கள் ரெட்ரிவல் சாஃப்ட்வேர் மூலம் புதுப்பித்து விட்டோம் என்கிறார்கள்.

அதன்பிறகே, கொச்சி காக்கநாடு மாவலிபுரத்திலுள்ள காவ்யா மாதவனுக்குச் சொந்தமான 'லக்ஷயா' எனும் ஆன்லைன் டெக்ஸ்டைல்ஸ் அலுவலகத்தில் சோதனை நடத்திய போலீஸ் டீமிடம் சில ஆதாரங்கள் சிக்கியுள்ளன.

விவகாரம் நடிகர்-நடிகை வட்டாரங்களைச் சுற்றியே வருவதால் மீடியா வளையத்தில் யாரும் சிக்கிவிடக்கூடாது என விசாரணை டீம்தான் நடிகை காவ்யா மாதவன், அவரது தாயார் ஷியாமளா, இயக்குனர் நாதிர்ஷா மூவரும் தலைமறைவாகிவிட்டார்கள் என்கிற தகவலைக் கசியவிட்டு பரபரப்பாக்கிவிட்டது.

விரைவில் சம்பந்தப்பட்ட பிரபலங்கள் தீவிர விசாரணைக்கு உள்ளாவார்கள் என்கிறது கேரள போலீஸ் தரப்பு.

பாவனா வழக்கின் விசாரணை அதிகாரியான குற்றப்பிரிவு ஐ.ஜி. தினேந்திரகஷ்யப், “பாவனா கடத்தலில் சம்பந்தப்பட்டவர்கள் யாராக இருந்தாலும், உடனடியாகக் அவர்களைக் கைது செய்யும்படி உத்தரவிட்டிருக்கிறார் டி.ஜி.பி" என்கிறார் ஐ.ஜி. அதனால் அவர் கொச்சியை விட்டு நகராமல் விசாரணையைத் தீவிரப்படுத்திவருகிறார்.

பாவனாவை கடத்தி துன்புறுத்தப்பட்ட வழக்கில் ஏற்கனவே பல்சர் சுனி உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில்... திலீப், காவ்யா மாதவன், காவ்யாவின் அம்மா ஷியாமளா, திலீப்பின் நண்பர் டைரக்டர் நாதிர்ஷா, திலீப்பின் மேனேஜர் அப்புனி ஆகியோரை போலீசின் பார்வை சுற்றி வளைத்திருக்கிறது.

அரசியல் பின்புலமாக உள்ள வழக்கு என்பதால் வழக்கு விசாரணை மிகவும் தாமதிக்கப்படுவதாக கேரள போலீஸ் செய்திகள் தெரிவிக்கின்றன.

உங்கள் அறிவுறுத்தல் மற்றும் பின்னுட்டம் எங்களுக்கு மிகவும் பயன் தரத்தக்கது . நாங்கள் சரியாக / நியாமாக ஒரு விஷயத்தில் இரு பக்கமும் செய்தியை முக்கியத்துவம் தருகிறோமோ என்று எங்களை தொடர்ந்து கண்காணித்து வழிநடத்த வேண்டுகிறோம் .. நன்றி - ஸ்பெஷல் கரெஸ்பாண்டெண்ட் - ஸ்பெல்க்கோ மீடியா ஆசிரியர் குழு