இப்ப யார் வீட்டுக்கு போனாலும் இந்த டயலாக் கண்டிப்பா கேக்கலாம். “எம்புள்ள/எம்பொண்ணு கம்ப்யூட்டர்ல எல்லாம் தெரிஞ்சி வெச்சிருக்கா... மொபைல் ஃபோன்ல எங்களுக்கு கூட தெரியாத விசயம் எல்லாம் தெரிஞ்சி வெச்சிருக்கான்.” அப்படீன்னு வாயெல்லாம் பல்லா பேசுவாங்க.

இதுல இன்னும் காமெடி என்னான்னா புள்ளைக்கு ஒரு smart phone வாங்கிக் குடுத்துடறானுக. கேட்டா சேஃப்டியாம்... Blue Whale Challengeனு ஒரு விளையாட்டு. இது வரைக்கும் உலகம் பூரா 130 பேர் இதனால செத்துருக்காங்க. பூராவும் டீன் ஏஜ் புள்ளைங்க. ஏன் சாவணும்? இந்த விளையாட்டோட முடிவே மரணம் தான். 50 நாள்... 50 task... இந்த விளையாட்டுக்கு நீங்க தயார் அப்படீன்னு சொன்னதும் உங்களுக்கான task அனுப்பறாங்க. அதுல எல்லாமே கொடுமையானது. சிலது ரொம்ப கொடூரமானது.

Special Correspondent

Peer pressure... இது தான் இன்னிக்கு youngstersக்கு இருக்கற முக்கியமான பிரச்சினை. எல்லாத்துலயும் தன்னை இன்னொருத்தரோட compare பண்ணிக்கறது. Bike, Phone, Dress, Shoesன்னு படிப்ப தவிர எல்லாத்துலயும் bestஆ இருக்கணும்னு நெனைக்கிறது. இதுல ஏதாவது ஒண்ணு நடக்கலன்னா கூட உடனே உலகமே இருண்டு போன மாதிரி உக்கார வேண்டியது. எவ்வளவு பூஞ்சையான ஒரு தலைமுறைய வளத்துட்டு வர்றோம்.

Teen Ageல எல்லாத்தையும் செஞ்சி பாக்கணும்னு ஒரு குறுகுறுப்பு இருக்கும். செக்ஸ் உட்பட. இப்ப தன் உயிரோட விளையாடி பாக்கற அளவுக்கு பரிணாம வளர்ச்ச்சியாயிடுச்சி. இப்ப சாவை பத்தி பேசுறதும், எழுதறதும் ஒரு fashion statement. இந்த blue whale game பொறுத்த வரைக்கும் நீங்க இந்த விளையாட்டை தேடிப் போய் விளையாட முடியாது. அவங்க உங்களை தேடி வருவாங்க. 50 நாள்ல நீ சாகப் போறே? ரெடியா? அப்படீன்னா விளையாடலாம் வா... அதுக்கப்புறம் 50 நாளும் நம்ம புள்ளைங்க முழுக்க அவங்க கட்டுப்பாட்டுல தான். 50 நாள் அவங்க சொல்ற task எல்லாம் படிச்சாலே பக்குன்னு இருக்கு. உதாரணத்துக்கு சிலது.

* காலையில 4.20க்கு எழுந்து ஒக்காந்துட்டு அவனுங்க (curators) அனுப்பற வீடியோவை பாக்கணும். வீடியோன்னா சாதாரணமா இல்ல. disturbing and scary videos.

* உங்க கையில பிளேடால “f40, f57, whale” படம் இதெல்லாம் வரைஞ்சி அத ஃபோட்டோ எடுத்து அனுப்பணும்.

* உங்க கையில ஊசியால நிறைய தடவை குத்திக்கணும்.

* உங்க உதட்டை அறுத்துக்கணும்.

இன்னும் இது மாதிரி பெரிய பட்டியலே இருக்கு.
இதையெல்லாம் செய்யணும்னா புள்ளைங்க எந்த அளவுக்கு psychopathஆ மாறியிருப்பாங்க யோசிங்க.

இந்தா இன்னிக்கு கேரளாவுல ஒரு 16 வயசு பையன் தொங்கிட்டான். அவங்க அம்மா அவன் சாவுக்கு காரணம் இந்த விளையாட்டுதான்னு சொல்றாங்க.

Special Correspondent

Level of addictionல நம்ம புள்ளைங்க ஒண்ணொன்னா கடந்து போயிட்டிருக்கு. சிகரெட், தண்ணி, கஞ்சா, செக்ஸ், பவுடர்னு அடுத்தது அடுத்ததுன்னு போயிட்டிருக்காங்க. அவங்களுக்கு நிறைய தேவைப்படுது. அப்பன் ஆத்தா ரெண்டு பேரும் ஓடி ஓடி காச சேக்கறது புள்ளைங்க கேக்கறத வாங்கி குடுக்கறது மட்டும் தான் வளர்ப்புன்னு நெனச்சிட்டிருக்காங்க. அதை தாண்டி புள்ள மேல ஒரு கண்ணு இருக்கணும். அவன் யார் கூட பேசறான், என்ன பண்றான், எப்ப தூங்குறான் இதெல்லாம் கவனிக்கணும்.

ஏதாவது abnormal behaviour தெரிஞ்சா உடனே அவனை உக்கார வெச்சி பேசுங்க. போன அப்புறம் வாயில அடிச்சிக்கிட்டு புண்ணியம் இல்ல. கொஞ்சம் உத்துப் பாத்தா போதும் அவங்க பிரச்சினைய கண்டுபுடிச்சிடலாம். அவங்க அதுக்கான க்ளூ குடுத்துட்டே தான் இருக்காங்க. Whatsapp DP, Status, FB Status இதுல ஏதாவது ஒண்ணு எழுதிட்டு தான் இருக்காங்க. நம்ம தான் கண்டுக்கறதில்ல.

இன்னிக்கு Facebook, Twitter, Instagram இன்னும் சில விஷயங்கள் தான் ஒலகம்னு நம்ப வெச்சிட்டாங்க. இதுல எரும கடா வயசான ஆளுங்க கூட சிக்கியிருக்கறது தான் இன்னும் மோசம். இந்த instant அங்கீகாரம் பிரயோஜனம் இல்ல. வெளிய வாங்க.

Gadget Hygiene - இன்னைய தேதிக்கு ரொம்ப தேவையான ஒண்ணு. புள்ளைங்களோட ஃபோன நோண்டுங்க. அப்படி ஒண்ணும் பர்சனல் இருக்க தேவையில்ல. அவனோட browsing history எல்லாம் கூட பாருங்க. கடுப்பானா ஆயிட்டுப் போறாங்க.
கஷ்டப்பட்டு பெத்து வளர்த்து 50 நாள்ல எவனோ ஒரு *^&*$#@ விளையாட்டா தூக்கிக் குடுக்கவா...

கட்டுரையின் கருத்தாக்கம் B Balaji.

உங்கள் அறிவுறுத்தல் மற்றும் பின்னுட்டம் எங்களுக்கு மிகவும் பயன் தரத்தக்கது . நாங்கள் சரியாக / நியாமாக ஒரு விஷயத்தில் இரு பக்கமும் செய்தியை முக்கியத்துவம் தருகிறோமோ என்று எங்களை தொடர்ந்து கண்காணித்து வழிநடத்த வேண்டுகிறோம் .. நன்றி - ஸ்பெஷல் கரெஸ்பாண்டெண்ட் - ஸ்பெல்க்கோ மீடியா ஆசிரியர் குழு