சினிமாவில் பெண்கள் சுதந்திரம் மாயையா!!

சமீபத்தில் தமிழ்நாட்டில் பிரபல தொலைக்காட்சி சேனலின் நிகழ்ச்சி தயாரிப்பு தலைவர் தன்னிடம் தகாத முறையில் பேசியதாக நடிகை வரலட்சுமி சரத்குமார் சொல்லிய நிலையில்...   

பதிவை பகிர

காரில் தன்னைக் கடத்தியவர்கள் இரண்டரை மணி நேரம் செய்த கொடுமை குறித்து நடிகை பாவனா போலீசாரிடம் அளித்துள்ள வாக்குமூலம் விவரத்தின் சுருக்கம்:

தமிழ், மலையாளப் படங்களில் நடித்துவரும் நடிகை பாவனா தனது காரில் வெள்ளிக்கிழமை இரவு படப்பிடிப்பு முடித்து கொச்சியிலிருந்து திருச்சூருக்கு இரவு 7 மணிக்குக் கிளம்பினார். அவருக்கு காரை வழங்கியது லால் கிரியேஷன்ஸ்.

கொச்சி பனம்பில்லி நகரில் உள்ள நண்பர் வீட்டுக்குச் சென்றுகொண்டிருந்தார். பயணத்தின்போது கார் ஓட்டுநர் மார்ட்டின் பல எஸ்எம்எஸ்களை யாருக்கோ அனுப்பியுள்ளார். இந்தத் தகவல்களை வைத்துக்கொண்டு உணவு வழங்கும் வேன் ஒன்று பாவனாவின் காரைப் பின்தொடர்ந்துள்ளது. நெடும்பசேரி விமான நிலைய சந்திப்பின் அருகே இரவு 8.30 மணிக்கு காரை மோதியது வேன். கார் நிறுத்தப்பட்டபோது, இந்த வழக்கில் இரண்டாவது மற்றும் மூன்றாவதாகக் குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் காருக்குள் புகுந்து பாவனாவின் வாயை மூடியுள்ளார்கள்.

sm 3.15

கூச்சல் போடக்கூடாது என்று பாவனாவை மிரட்டி அவரிடமிருந்த செல்பேசி பிடுங்கப்பட்டது. கலமசேரி என்கிற இடத்தில் ஒருவர் காரிலிருந்து இறங்கியுள்ளார். பிறகு இன்னொருவர் காருக்குள் புகுந்துள்ளார். பாவனாவை பாலியல் பலாத்காரம் செய்ய அவர் மற்றவர்களுக்கு உதவியுள்ளார்.

இதன்பிறகு வழக்கில் 5-வது மற்றும் 6-வதாகக் குற்றம் சாட்டப்பட்டவர்கள் காரினுள் நுழைந்துள்ளார்கள். அவர்கள் வழியை மாற்றி, கிரில் கேட் உள்ள ஒரு வீட்டுக்கு காரை கொண்டு செல்கிறார்கள். அங்குதான் வழக்கின் மையக் குற்றவாளியான பல்சர் சுனி ( இயற் பெயர் - சுனில் குமார்) காரினுள் முகத்தை மூடியபடி நுழைந்தார். ஓட்டுநரின் இருக்கையில் அவர் அமர்ந்தார். அதற்கு முன்புவரை காரை ஓட்டிவந்த மார்ட்டின் வெளியேறினார்.

அவரை அந்தக் கும்பல் அழைத்துச் செல்லவில்லை. காகநாடு பகுதிக்கு காரைக் கொண்டு சென்ற பல்சர் சுனி அங்குதான் பாவனாவை பலாத்காரம் செய்துள்ளார். மற்றவருக்காக பாவனாவைப் பல்வேறு விதங்களில் புகைப்படமாகவும் வீடியோகவும் எடுக்க பல்சர் சுனி முற்பட்டுள்ளார். அதற்கு பாவனா சம்மதிக்காததால் அவரைக் கொடுமைப்படுத்தியுள்ளனர். இதன்பிறகு காரிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார் பாவனா.

பல்வேறு கேரள சினிமா துறையினர் சம்பந்த பட்ட நிலையில் நடிகை பாவனா மானபங்கப்படுத்தப்பட்ட விவகாரம் தொடர்பாக பல்சர் சுனியை ஏவி பாவனாவை அசிங்கப்படுத்தியது நடிகர் திலீப் என்று கிசுகிசுக்கப்பட்டது. ஆனால் நடிகர் திலீப் கைது செய்யப்பட்டதாக வெளியான தகவலில் உண்மை இல்லை என்பது தெரிய வந்துள்ளது. இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான அவரின் முன்னாள் கார் டிரைவர் பல்சர் சுனி இன்று நீதிமன்றத்தில் சரணாடைய வந்தபோது போலீசார் அதனை தடுத்து தங்கள் காவலில் எடுத்து மறைவான இடத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர்.

இந்த நிலையில் நடிகர் நாசர் தலைமையில் உள்ள தமிழ்நாட்டில் உள்ளே தென்னிந்திய நடிகர் சங்கம் பாவனா விவகாரத்தில் நடிகைகள் பாதுகாப்பு வேண்டி தந்து கண்டனத்தை பதிவு செய்தது.

சமீபத்தில் தமிழ்நாட்டில் பிரபல தொலைக்காட்சி சேனலின் நிகழ்ச்சி தயாரிப்பு தலைவர் தன்னிடம் தகாத முறையில் பேசியதாக நடிகை வரலட்சுமி சரத்குமார் தெரிவித்துள்ளது மற்றும் நடிக்க வந்தால் அட்ஜெஸ்மென்ட் பண்ண வேண்டும் என்பதை கேட்டு அதிர்ச்சி அடைந்தாலும் மோசனமானதை எதிர்கொள்ளத் தயார் ஆனேன் என்று 'கண்ட நாள்' முதல் படம் மூலம் நடிகையான ரெஜினா கசான்ட்ரா கூறியதும் குறிப்பிடத்தக்கது.

உங்கள் அறிவுறுத்தல் மற்றும் பின்னுட்டம் எங்களுக்கு மிகவும் பயன் தரத்தக்கது . நாங்கள் சரியாக / நியாமாக ஒரு விஷயத்தில் இரு பக்கமும் செய்தியை முக்கியத்துவம் தருகிறோமோ என்று எங்களை தொடர்ந்து கண்காணித்து வழிநடத்த வேண்டுகிறோம் .. நன்றி - ஸ்பெஷல் கரெஸ்பாண்டெண்ட் - ஸ்பெல்க்கோ மீடியா ஆசிரியர் குழு

பதிவை பகிர

கட்டுரை ஆசிரியரைப்பற்றி

ஸ்பெஷல் கரெஸ்பாண்டெண்ட்

பின்பற்ற

சமூகத்தின் மேம்பாடு வேண்டி திறந்த மனதுடன் உண்மையை தேடி விரும்பும் எழுத்தாளர்களின் சங்கம கூடலே splco.me . இது சமூக வலைதளத்தின் எழுத்தாளர்களின் கன்னி முயற்சியின் தொகுப்பு.

பின்னுட்டம்

பின்னுட்டம் இடுக


உங்கள் தகவல் பாதுகாப்பாக வைக்கப்படும் தனியுரிமை கொள்கை.